காதல் என்றால் என்ன?
காதலைப் பற்றி சொல்லாத கவிஞர்களே இல்லை என்று
சொல்லலாம். காதல் என்ற சொல்லுக்கு பல வகையில், பல கோணத்தில் வரையறை
கொடுக்கலாம். கண்டதும் காதல், காணாமலே காதல் என்று பல வகைக் காதலைப்
பகுத்துணரலாம். ஒரு நாட்டின் கலாச்சாரம் சார்ந்த சமூகம், காதலை எப்படி
பார்க்கிறது என்பதைப் பொறுத்து காதலின் தன்மை வகைப்படுத்தப்படுகிறது.
அதாவது காதல் சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்பட அந்த நாட்டின் கலாசாரத்திற்கு
முக்கியப்பங்கு உண்டு.