Pages

பிரதோஷமும் சிவராத்திரியும் குபேரகிரிவலமும் ஒரே நாளில்(23.11.11) வருவதால் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்


23.11.11 புதன் கிழமை ஒரு பொன்னான அபூர்வமான அரிய நாளாகும்.ஆமாம்!! ஒரே நாளில் கார்த்திகை மாதத்தின் தேய்பிறைப்பிரதோஷமும்,தேய்பிறை சிவராத்திரியும் குபேரபகவான் பூமிக்கு வருகை தந்து குபேரலிங்கத்துக்கு பூஜை செய்து கிரிவலம் செல்லும் நாளாகவும் அமைந்திருக்கிறது.

எனவே,இந்த நாளில் மாலை 4.30 முதல் 6.00 மணி வரையிலான அதிக சக்திவாய்ந்த தெய்வீக நேரமாக அமைந்திருக்கிறது.இந்த நேரத்தில் அண்ணாமலையில் பேருந்து நிலையத்திலிருந்து இறங்கியது முதல் மீண்டும் சொந்த ஊருக்குப் புறப்படும் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபித்துக்கொண்டே இருப்போம்.

மலையே சிவபெருமானாகவும்,சதாசிவத்தின் ஸ்தூல ரூபமாகவும் காட்சி தருவதால்,அண்ணாமலையில் மட்டும் நடக்கும்போதும்,வாகனப்பயணத்தின் போதும் ஓம்சிவசிவஓம் ஜபிப்பது தவறில்லை;பாவமும் இல்லை;எனவே, நாம் அனைவரும் அண்ணாமலைக்கு 23.11.11 காலையிலேயே வருகை தருவோம்;மதியம் வரை நமது தங்குமிடத்தில் ஓய்வெடுத்துவிட்டு, மாலை 4 மணிக்கு ஆட்டோவில் குபேரலிங்கத்துக்கு (மலையைச் சுற்றாமல் 3 கிலோ மீட்டர் தூரம் பயணித்து) வந்தடைவோம்;இந்த நாளில் பிரதோஷ நேரமான மாலை 4.30 முதல் 6.00 மணிவரையிலும் குபேரலிங்கத்தின் வளாகத்தில் அமர்ந்த நிலையில் அல்லது நின்ற நிலையில் எவரிடமும் பேசாமல் ஓம்சிவசிவஓம் ஜபிப்போம்.இதன் மூலமாக குபேரபகவானின் அருட்பார்வை நம் மீது விழுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதை உணருங்கள்.

மாலை 6 மணிக்கு மேல்,குபேர லிங்கத்திலிருந்து கிரிவலம் புறப்படுவோம்.குபேரலிங்கத்திலிருந்து கிரிவலப்பாதையான 16 கிலோமீட்டர்கள் தூரத்தை பயணிக்க அதிகபட்சமாக 6 மணி நேரம் ஆகும்.இந்த 6 மணி நேரமும் அனாவசியமான பேச்சுக்களைத் தவிர்த்துவிட்டு,ஓம்சிவசிவஓம் ஜபித்துக் கொண்டே செல்லுவோம்.இதனால்,நமது கர்மவினைகள் பெருமளவு கரையத்துவங்கும்.

முயலுவோமா?

ஓம்சிவசிவஓம் ஓம்ஹரிஹரிஓம்