கார்த்திகைமாத அமாவாசை 24.11.11 வியாழக்கிழமை மதியம் சுமார் 2.40 முதல் 25.11.11 வெள்ளி மதியம் சுமார் 12.40 வரை அமைந்திருக்கிறது.இந்த நேரத்தில் நமது ஆத்மாக்காரகனாகிய சூரியனும்,மனக்காரகனாகிய சந்திரனும் ஒன்று சேரும் நேரம் நிஜத்தில் மூன்றே மூன்று விநாடிகளே!!!
சூரியனிடமிருந்து
பல கோடி கிலோ மீட்டர்கள் தூரத்தில் நாம் வசிப்பதால்,அமாவாசை அதிகபட்சமாக
மூன்று நாட்களுக்கு இருப்பதாக நாம் நம்புகிறோம்.
ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் முதன் முதலாக இந்த நாளில்ஜபிக்க ஆரம்பிக்கலாம்.
அப்படி ஆரம்பிக்க ஏற்ற நேரங்கள் :24.11.11 வியாழன் இரவு 8.00 மணி முதல் 8.12க்குள்ளும், 25.11.11 வெள்ளி காலை 10.00 மணி முதல் 10.12க்குள்ளும்,மாலை 5.00 மணி முதல் 5.12க்குள்ளும் சிறந்த ஓரைகள் ஆகும்.
வெகு நாட்களுக்கு முன்பு ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பித்து,தொடர்ந்து ஜபிக்க இயலாதவர்களும் இந்த நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தில்(உங்களுக்கு வசதியான நேரத்தில்)ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிக்கலாம்.
அப்புறம் ஒரு முக்கிய செய்தி: 21 வயதுக்குக் குறைவானவர்கள்,ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது என்பது விதி.ஆனால்,21 வயதை விட குறைந்த ஆண்கள்,பெண்கள் ஓம்சிவசிவஓம் ஒரு நாளுக்கு ஒரே ஒரு முறை 108 தடவை எழுதலாம் என எனது ஆன்மீக குரு புளியங்குடி சிவ.மாரியப்பன் தெரிவித்துள்ளார்.கூடவே,சில நிபந்தனைகளையும் தெரிவித்துள்ளார்.
21 வயதை விடக்குறைவான வயதுடையவர்கள் இந்த மந்திரத்தை எழுத ஆரம்பித்தப்பின்னர்,எக்காரணம் கொண்டும் அசைவம் சாப்பிடக்கூடாது.
அசைவ சூப்கள்,அசைவம் மறைமுகமாக கலந்திருக்கும் உணவுகள்(கேக்குகள்,பன்னாட்டு நிறுவனங்களின் பற்பசைகள்) பயன்படுத்திடக் கூடாது.
அதே சமயம்,ஒரு நாளுக்கு ஒரே ஒரு 108 முறை மட்டுமே எழுத வேண்டும்.அதை விட,அதிகமாக எழுதுவது தப்பு.
ஏனெனில்,அதற்கு மேல் எழுதும்போது,அவர்கள் மனதுக்குள் உருப்போடும் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.இதனால்,ஏற்படும் அதீத சிவ சக்தியை தாங்கும் திறன் கிடையாது.
ஓம்சிவசிவஓம்