அருள் பொருள் இன்பம் 6
இந்தத் தொடரை வாசித்து வரும் நண்பர் ஒருவர், ‘‘அறம் பொருள் இன்பம் என்பது தானே வரிசை? நீங்கள் அறத்தை அருளாக மாற்றி விட்டீர்களே! அறத்தைவிட அருள் பெரிதா?’’ என்று ஒரு கேள்வியை கேட்டார். இதற்கு பளிச்சென்று ஒரு பதில் எனக்குள் தோன்றியது. ஒரு குழந்தையைவிட அதைப் பெற்ற தாய் பெரியவளா என்று அவர் கேட்டுவிட்டதாகவே எனக்குத் தோன்றியது. அருள் இருந்தாலே அறத்தோடு வாழ்ந்திடும் உறுதியும் தெளிவும் ஏற்படும் என்பதற்கு என்னுள் ஏராளமான காட்சிகள் விரிந் தன. நான் என்னும் அகந்தை ஏற்படும் இடங்களில் இந்த அருள் பெருகுவதில்லை. பெரும் உதாரணமாக ராவணன் என் கண்களுக்கு புலனாகிறான். இவன் முடிவு என்னவாயிற்று என்று எல்லோருக்கும் தெரியும். பெரும் சிவபக்தன் இவன். அந்தச் செருக்கு காரணமாகவே கைலாயத்தையே தூக்க முனைந்தவன்கூட! அகத்தியரோடு மோதி இசைப் போட்டியிலும் மண்ணைக் கவ்வினான்.
துரியோதனன் விஷயமும் மனதில் முந்துகிறது. பாரத யுத்தம் முடிவாகிவிட்டது. கண்ணன் பொதுவானவன். ஆனாலும் பாண்டவர்கள் பக்கம் அவன் அதிகம் இருக்க அவன் காரணமல்ல. பாண்டவர்கள் அவன்பால் காட்டிய பக்தியே காரணம். இருப்பினும் கண்ணனின் மாயா குணங்களை உத்தேசித்து, துரியோதனன் அவனை கௌரவர்கள் வசம் நிலைப்படுத்த விரும்புகிறான். இதற்காக கண்ணனைக் காணச் சென்ற இடத்தில் கண்ணன் உறக்கத்தில் இருக்கிறான். கண்ணனை தங்கள் பக்கம் இருந்து வழி நடத்தித் தரும்படி கேட்பதற்காக தர்மரும் வந்திருக்கிறார். தர்மரைப் பார்த்தவுடன் துரியோதனனுக்கு பதபதைப்பு அதிகமானது. கண்ணனை எப்படியாவது தன்பக்கம் நிலைப்படுத்த எண்ணுபவன் அல்லவா? கண்ணன் கண் விழித்தால் முதலில் தன்னைத்தான் பார்ப்பான் என்னும் நம்பிக்கையோடு கண்ணனின் தலைப்பக்கமாக அமர்கிறான்.
தர்மர் கால் பக்கமாய் அமர்ந்து கொள்கிறார். சிறிது நேரம் கழிந்து கண்ணனின் நயனங்கள் மலர்கின்றன. துரியோதனனின் இதயத்துடிப்பு அதிகரித்த து. தன்னைத்தான் கண்ணன் முதலில் பார்ப்பான். அதைப் பயன்படுத்தி, ‘‘கண்ணா நீ யுத்தத்தில் கௌரவர்களுக்கே துணைபுரிய வேண்டும்’’ என்று எப்படியும் தன்வசப்படுத்தி விட வேண்டும் என எண்ணுகிறான். ஆனால் கண்ணன் பார்வை கால் பக்கம் நின்றிருக்கும் தர்மர் பக்கம் செல்ல, அவரை முதலில் நலம் விசாரிக்க தொடங்க, துரியோதனனின் திட்டம் தூள்தூளாகிப் போகிறது. ‘துரியோதனா எனக்கு திருவடிகள் தான் கணக்கு - நேருக்கு நேரான நோக்கு அல்ல’ என்று கண்ணன் துரியோதனனை பார்த்து மாயப்புன்னகை பூக்கின்றான். கண்ணனின் அருள் அகந்தையற்ற அறம் சார்ந்த தர்மருக்குத்தான் கிட்டுகிறது. இப்படி அறத்தையும் அருளையும் எண் ணும்போது பல காட்சிகள் விரிகின்றன.
இவ்வேளையில் அருளைப் புறந்தள்ளி அறத்தோடு மட்டும் வாழ முடியாதா என்கிற ஒரு கேள்வி எழலாம். அதற்கான உதாரணங்களும் இருக்கவே செய்கின்றன. திருஞானசம்பந்தர் வாழ்ந்த நாளில் சமணர்கள் பாண்டிய மன்னனையே தங்கள் வயப்படுத்தி அறவாழ்வு வாழத் தூண்டுகின்றனர். தமிழ்ச்சங்கம் கண்ட மதுரையம்பதியில் பெரும் திருவிளையாடல்கள் அரங்கேறிய அந்த ஆலவாய் நகரில், பாண்டியனும் அரனை விலக்கி அறமே நலம் என்றெண்ணி வாழ வும் முற்படுகிறான். இது அவர் துணைவியாகிய மங்கையர்க்கரசியையே கலக்கி விடுகிறது. அவள் ஞானசம்பந்தரை பணிகிறாள். ஏனென்றால் உமையி டம் ஞானப்பால் குடித்த அந்த இளம்பிஞ்சு அதன் காரணமான ஞானத்தாலே இந்த ஞாலத்தையே வலம் வந்து அரனருளைப் பரப்பிக் கொண்டிருந் தது. அந்த அரனருள் புகுந்தால் அருளைப் புறந்தள்ளிய இந்த அறம் அருளறமாகும் அன்றேல் இருளறமாகிவிடும் என்பது மங்கையர்க்கரசியார் எண்ணம்.
அறத்தை வலியுறுத்திய சமணர்களிடம் பேச்சளவில் ஏட்டளவில்தான் அது இருந்தது. அவர்கள் தங்கள் கருத்துக்கு எதிரானவர்களை கொல்வதும் பாவ மில்லை என்று கருதினர். அறம் இங்கே வளைந்து கொடுத்தது. அது பல இடங்களில் வளைந்து கொடுத்திருக்கிறது. ஒரு ஊர் வாழ ஒருவனை இழக்க லாம். ஒரு நாடு வாழ ஒரு ஊரையே இழக்கலாம் என்பதெல்லாம் அறத்தின் வளைவுதான். ஆனால் அருளோ வளைவதில்லை, நெளிவதுமில்லை. அதன் தன்மை ஒளிமிக்கது. அதன் குணம் கருணை-வாரி வழங்கும் வள்ளலாகிய ஞானசம்பந்தரும் மதுரை வருகிறார். அவரோடு சமணர்களும் மோதுகின்றனர். அனல் வாதம், புனல்வாதமெல்லாமும் புரிகின்றனர். அனைத்திலும் மீண்டு எழுகிறார், ஞானசம்பந்தர். இதெல்லாம் பெரிதில்லை. சமண வழி சென்ற பாண்டிய மன்னனுக்குச் சூலை நோய் ஏற்படுகிறது. வயிற்று வலியால் துடிக்கிறான்.
ஒரு சமணராலும் மன்னனைக் குணப்படுத்த முடியவில்லை. சம்பந்தப் பெருமான் திருநீற்றுப் பதிகம்பாடி, அதைப் பூசவும் அருளானது பாண்டியனைத் தொற்றுகிறது. அவன் சூலை நோய் நீங்கி மனமருளும் விலகுகிறது. அரனே அறன்... அவனருளே உற்ற துணை என்பதும் புரிகிறது. இதுவும் ஒரு வரலாறுதான்! இதையெல்லாம் வைத்தே, ‘‘பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை - அருளில்லார்க்கு எவ்வுலகுமில்லை’’ என்றனர், சான் றோர்.
நம்மிடையே ஒரு சொலவடை உண்டு. ‘மாதா பிதா பாவம் மக்களையே சாரும்’ என்கிற அந்த சொலவடையை நாம் நிறையவே கேள்விப்பட்டிருப்போம். அதாவது நாம் புரிகின்ற பாவச்செயல்களுக்கான தண்டனைகளை நாம் மட்டும் அனுபவிப்பதில்லை. நம் கணக்கில் எஞ்சுவது நம்பிள்ளைகள் தலையில்தான் விடியும். இதற்கு என்ன சான்று என்று கேட்கலாம். ஒரு வெள்ளைக்காரர் முன்வினை பற்றி காஞ்சிப் பெரியவரிடம் கேட்டார். பெரியவரோ அவரை ஒரு பிரசவ ஆஸ்பத்திரிக்கு சென்று அன்று பிறக்கும் குழந்தைகளைப் பார்த்துவிட்டு வரச் சொன்னார்.
ஒன்று கருப்பு, ஒன்று சிவப்பு. ஒன்று ஊட்டம், ஒன்று மெலிவு. ஒன்றுக்கு குழந்தை பிறந்த உடனேயே பட்டுத் தொட்டில் - ஒரு குழந்தைக்கோ பெற்ற வளே பிரசவத்தில் மரணித்து விட்ட நிலை. பூமியில் இன்னும் வாழ்க்கைக் கணக்கைத் தொடங்கியே இராத அந்த பிஞ்சுகளிடம் ஏன் அத்தனை வேறுபாடு. அன்பே வடிவான இறைவன் இப்படிப் படைக்க அவ்வளவு கல் நெஞ்சுக்காரனா? வெள்ளைக்காரருக்கும் புரிகிறது. வினைகள் விடுவதில்லை. அது பிறவிகள் தோறும் தொடர்ந்து வந்து கணக்கை நேர் செய்து கொள்கிறது. இதையே சிலப்பதிகாரமும் ஊழ்வினை உறுத்து வந்து ஊட்டும் என்கிறது. இப்படி வினைக் கணக்கோடு தொடங்கும் பிறப்பை ஆற்றுப்படுத்துவது ஒன்றே ஒன்றுதான், அதுதான் அருள்! எனவே, அருளுக்கு உரித்தானதை மட்டுமே செய்யுங்கள். அதற்கு எதிரானதை செய்து விடாதீர்கள் என்று வற்புறுத்தினார்கள்.
இதை உத்தேசித்தே அருளின் அங்கமான ஆசீர்வாதத்தை பெரிதாகச் சொன்னார்கள். அந்த சொல்லிலேயே பெரும் பொருள் புதைந்துள்ளது. பெரும் பொருள் வரிசையை சீர்வரிசை என்போம். இதைவிட பெரியது ‘ஆசீர்’ எனப்படும் மனங்குளிர வாழ்த்தும் வாழ்த்து. நம் கணக்கில் இந்த ஆசீர்மொழி எனும் ஆசீர்வாதம் நிரம்பித் தளும்ப வேண்டும். அதனாலேயே பெரியவரைக் கண்ட மாத்திரம் வணங்கச் சொன்னார்கள். ஆசிரியரை பார்க்கும் போதெல்லாம் வணங்கச் செய்தார்கள். பெற்ற தாய், தந்தையரை விடியல்தோறும் வணங்கச் சொன்னார்கள். திருநாட் களிலும் வணங்கச்சொல்லி, பிறரை வாழ்த்தவும் சொன்னார்கள். தீபாவளி வாழ்த்தும், பொங்கல் வாழ்த்தும், பிறந்தநாள் வாழ்த்தும், மணநாள் வாழ்த் தும் இதையொட்டியே ஊக்கப்படுத்தப்பட்டது. வாழ்த்துகின்றவர்களே வாழ்த்தவும்
படுகின்றார்கள். வாழ்த்தின் வடிவம்தான் அருள். அருள் வங்கி நிரம்பி வழியும்போது பொருள் வங்கியும் நிரம்பத் தொடங்குகிறது. இரு வங்கிகளும் நிரம்பிவிட்டால் அங்கே இன்பத்துக்கு கேட்கவா வேண்டும்!?