
மயிலாடுதுறையில் இருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் குத்தாலம் என்ற ஊரின் வடமேற்கில் 6 கி.மீ. தொலைவில் கதிராமங்கலம் என்ற கிராமம் உள்ளது. இங்கு அன்னை வனதுர்காதேவி கோவில் உள்ளது. இங்குள்ள அம்மனுக்கு அர்ச்சனை செய்யும்போது வலது கரத்தின் உள்ளங்கையில் வியர்க்கும்.
இதன் மூலம் துர்க்கை அம்மன் அருள் பாலிப்பதாக நம்புகின்றனர். ராகு திசை அல்லது ராகுபுத்தி நடப்பவர்கள் இங்கு ராகு காலத்தில் எலுமிச்சம் பலத்தில் நெய் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். எலுமிச்சம்பழ மாலை சாத்தலாம். எலுமிச்சை சாதம் படைத்து வணங்கலாம்.
இத்தலத்தில் துர்காதேவியை ஞாயிறு, வெள்ளிக்கிழமைகளில் நான்கு முறை வலம் வரவேண்டும். மாங்கல்யதோஷம் நீங்க அம்மனுக்கு பால் அபிஷேகம் செய்து குங்கும அர்ச்சனை செய்தால் பலன் கிடைக்கும்


