உலக
நன்மைக்காக ஒரு கடவுள் வருடத்தில் 28 நாள்கள் தமிழ் மாதமான பங்குனி
கடைசியில் இருந்து தமிழ்ப் புத்தாண்டு வரை உண்ணாவிரதம் இருக்கிறது
தெரியுமா? அந்த தெய்வம் 'திருச்சி சமயபுரம் மாரியம்மன்' தான். இந்த 28
நாள்களுக்கும் மாரியம்மனுக்கு எந்தச் சமைத்த உணவும் படைக்கப்படுவதில்லை.
இளநீரும், மோரும் தான் படைக்கப்படுகிறது. சமயபுரம் மாரியம்மன் கோவில்
தோன்றியதே ஒரு சுவையான கதைதான். விஜயநகர அரசர் ஒருவர் ஒருமுறை தந்தத்தால்,
செய்த மாரியம்மன் சிலையை ஊர்வலமாக எடுத்து வந்தார். அப்போது சிறிது நேரம்
இளைப்பாறுவதற்காக சிலை ஒரு இடத்தில் வைக்கப்பட்டது. இளைப்பாறி முடிந்ததும்,
சிலையைத் தூக்கினார்கள். ஆனால் யாராலும், சிலையைத் தூக்க முடியவில்லை.
சரியென்று சிலையை அந்த இடத்திலேயே வைத்து விட்டு சென்றனர். அந்த இடம் தான்
'சமயபுரம்'. அந்த இடத்தில் 'சமயபுரம்' மாரியம்மன் கோவிலைக் கட்டியவர்
விஜயரங்க சொக்கநாத நாயக்கர் (கி.பி.



