ஆவணிமாதப்பிறப்பில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கத்துவங்குவோம்
பல நூற்றாண்டுகளுக்கு முன்பு,சிம்மராசி மண்டலத்துக்குள் சூரியன் நுழையும் நாளான ஆவணி முதல் நாளே,தமிழ்ப் புத்தாண்டின் ஆரம்ப நாளாக இருந்தது எனக் கேள்விப்பட்டிருக்கிறேன்.சூரியன் ஆட்சி பெறுவது இந்த ஆவணி மாதத்தில் தான். எனவே,நாம்,நமது கடன்,நோய்,கர்ம வினைகள் தீரவும்,வறுமை விலகி,வசதியாகவும்,நிம்மதியாகவும் வாழவும் இன்று 18.8.2011 வியாழக்கிழமையன்று மதியம் 1 முதல் 2 மணிக்குள் அல்லது இரவு 8 முதல் 9 மணிக்குள் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிப்போம்.இன்று ஆரம்பிக்கும் எந்த ஒரு சுபகாரியமும் மகத்தான வெற்றியைத் தரும்.நமது ஆத்மாவாக இருந்து செயல்படுவது சூரியன் ஆவார்.எனவே,சூரியன் பலம்பெறும் முதல் நாளில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துவங்கிட,நாம் மிகவும் புண்ணியசாலிகளே!!!
பூமியில் மனிதர்கள் மத்தியில் 7,00,000,000 மந்திரங்கள் புழக்கத்தில் இருக்கின்றன.இவற்றில் சில மந்திரங்கள் ஒட்டுமொத்த பூமியிலேயுமே ஓரிருவருக்கு மட்டுமே தெரியும்.சில மந்திரங்களை நாம் கடுமையானக் கட்டுப்பாட்டுடன் ஜபிக்க வேண்டும்.(உதாரணமாக,நாம் பேருந்தில் பயணிக்கிறோம்.நம்மையறியாமல் யாரையாவது உரசிவிடுகிறோம் என வைத்துக்கொள்வோம்;அப்படி உரசினாலே,சில மந்திரங்கள் நம்மை,நமது உயிரை அல்லது மனதை சிதைத்துவிடும்.காரணம்,நம்மால் உரசப்பட்டவர் மாதவிலக்காக/உடலுறவுகொண்டுவிட்டு குளிக்காமல் இருந்திருப்பார்)சில மந்திரங்கள் நமது முன்னோர்களாகிய சித்தர்களுக்கு மட்டுமே தெரியும்.சில மந்திரங்களை வாயால் ஒருவர் உபதேசித்து,பிறர் கேட்டு ஜபிக்கும் விதமாக இல்லாமல்,ஒருவரின் மனம் மூலமாக அவரது சீடரது மனதுக்கு உபதேசம் செய்யும் விதமாகவே இருக்கும்.
சில மந்திரங்களை 60 ஆண்டுக்கு ஒரு முறை ஒரே ஒரு நாள் மட்டுமே ஜபிக்க வேண்டும்;இன்னும் சில மந்திரங்களை 120 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் ஒரு நாளில் சில நிமிடங்கள் மட்டுமே ஜபிக்க வேண்டும்.சில மந்திரங்களை ஆயுள் முழுவதும் பிரம்மச்சாரியாக இருந்து,யோகநிலையில் குறிப்பிட்ட சாதனை செய்தபின்னரே ஜபிக்க வேண்டும்;இப்படி பல விதமான மந்திரங்கள் இருக்கின்றன.இந்த மந்திரங்கள் அனைத்தும் ஓம்சிவசிவஓம் மந்திரத்துக்குள் புதைந்திருக்கின்றன.எனவே,வேறு எந்த மந்திரமும் நமக்குத் தேவையில்லை.இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தை ஜபிக்க குரு உபதேசம் தேவையில்லை;இந்த கலிகாலத்தில் குரு கிடைப்பது அரிது என்பதும் நிதர்சனம்.
இந்து மதத்தில் இருக்கும் அனைத்து தெய்வங்களும் இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்துக்குள் இருக்கின்றன என்பதை உங்களால் நம்ப முடியுமா? நீங்கள் 1,00,000 தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்ததும்,இதை உணர்வுபூர்வமாகவே உணருவீர்கள்.
எல்லோரது வாழ்க்கையிலும் ஏதாவது ஒரு நியாயமான ஏக்கம்,லட்சியம்,கொள்கை இருக்கிறது.அதை நிறைவேற்றுவதற்கு நமது இயல்பான சுபாவமே தடையாக இருக்கிறது.உண்மையா இல்லையா?
அந்த தடைகளை நீக்கிட நாம் ஒவ்வொருவரும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.நாம் இந்து அல்லாதவராக இருந்தாலும் இதை பரீட்சித்துப்பார்க்கலாம்.
எப்படிப் பார்த்தாலும்,எல்லோருக்கும் சில பல லட்ச ரூபாய்கள் தேவைப்படுகின்றன.அந்த செல்வ வளத்தையும் ஓம்சிவசிவஓம் மந்திர ஜபம் நமக்குத்தரும்.
மந்திரங்களை ஈர்த்துக்கொள்ளும் மஞ்சள் நிறத் துண்டினை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.இதை ஓம்சிவசிவஓம் ஜபிக்க மட்டுமே பயன்படுத்துங்கள்.அதே சமயம்,இந்த மஞ்சள் துண்டினை எக்காரணம் கொண்டும் துவைக்கக் கூடாது.துவைத்தால்,மஞ்சள் துண்டில் பதிந்திருக்கும் ஓம்சிவசிவஓம் மந்திர அலைகள் நீரில் கரைந்துவிடும்.மஞ்சள் துண்டில் சாதாரண நூல் துண்டே போதுமானது.வசதியிருந்தால்,மஞ்சள் பட்டுத்துண்டினை வாங்கிப் பயன்படுத்தலாம்.
மூன்று ருத்ராட்சங்களை அருகிலிருக்கும் காதி பவன்களில் வாங்கவும்.விருப்பமிருந்தால்,ஒன்றை கழுத்தில் அணிந்து கொள்ளவும்.அப்படி அணிந்துவிட்டால்,எக்காரணம் கொண்டும் அதைக் கழற்றக்கூடாது.(ருத்ராட்சம் அணிந்தவர் தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்.ஒரே கட்டுப்பாடு அசைவம் தவிர்க்க வேண்டும்)மற்ற இரண்டையும் இரு உள்ளங்கைகளிலும் வைத்து,மஞ்சள் நிறத்துண்டில் அமர்ந்து,கிழக்கு அல்லது வடக்கு நோக்கி அமர்ந்து ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.ருத்ராட்சத்தைப் பயன்படுத்தாமலும் ஜபிக்கலாம்;ஆனால்,மந்திர ஜபத்தின் பலன் நமக்குக் கிடைக்க தாமதமாகும்.ருத்ராட்சத்தை மணமான பெண்கள் தனது தாலிக்கொடியில் கோர்த்துக்கொள்ளலாம்.இளம்பெண்கள் கழுத்துப்பகுதியில் தெரியாமலும் கட்டிக்கொள்ளலாம்.மாதவிலக்கு நாட்களில் கூட ருத்ராட்சத்தைக் கழற்றக்கூடாது.இருந்தும் ஏன் நம்ம பெருசுகள் இதுபற்றி ‘அதைச் செய்யக்கூடாது;இதைச் செய்யக்கூடாது’ என சொல்லுதுகள்?
ருத்ராட்ச மாலை அணிந்தால்தான் ஏகப்பட்ட கட்டுப்பாடுகளை கட்டாயமாக நாம் பின்பற்றிட வேண்டும்.12,16,24,37,108 ருத்ராட்சங்களை ஒரு கயிற்றில் கோர்த்து ருத்ராட்சமாலைகள் கிடைக்கின்றன.இவற்றை அணிவதற்குத்தான் பல தகுதிகளை நாம் வளர்த்துக்கொள்ள வேண்டும்.அதை நமது 40 வயதுக்கு மேல் பார்த்துக்கொள்வோம்.
ஒரு மஞ்சள் நிறவிரிப்பில் கணவன்,மனைவி வெவ்வேறு நேரங்களில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்.உடன்பிறந்த சகோதரர்கள்/சகோதரிகள்/நெருங்கிய நண்பர்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்.இருப்பினும்,ஒவ்வொருவருக்கும் தனித்தனி மஞ்சள் விரிப்பு வாங்கிக் கொள்வது நன்று.
ஓம்சிவசிவஓம் மந்திரத்தை மனதுக்குள் உதடு அசையாமல் ஜபித்துவருவதே முறையானது ஆகும்.
நெற்றியில் விபூதியைப் பூசிக்கொண்டு,கழுத்தில் ஒரு ருத்ராட்சம்(எந்த முகமாக இருந்தாலும் சரி)அணிந்து,இரு உள்ளங்கைகளில் தலா ஒரு ருத்ராட்சம் வைத்துக்கொண்டு,முதலில் உங்களின் குல தெய்வத்தை வழிபடவும்.(உதாரணமாக ஓம் பத்திரகாளியே நமஹ என ஒரு முறை மட்டும் ஜபிக்கவும்.குல தெய்வம் தெரியாதவர்கள் தமது இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்ளவும்),பிறகு ஓம் கணபதியே நமஹ என ஒரு முறை மட்டும் ஜபிக்கவும்.பிறகு உங்களின் ஒரே ஒரு நியாயமான கோரிக்கையை நினைக்கவும்.உதாரணமாக எனக்கு நிறைய பணம் தேவை என கேட்பது = தெளிவற்ற வேண்டுதல் ஆகும்.எனக்கு ஒரு வருடத்துக்குள் ஐந்து லட்சம் ரூபாய் தேவை என்பது போன்ற தெளிவான கோரிக்கையை மட்டும் வைத்துவிட்டு, ஓம்சிவசிவஓம் விடாமல் ஜபித்துவரவேண்டும்.இப்படி ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம் ஓராண்டு வரையிலும் விடாமல் ஜபித்துவரவேண்டும்.(தீட்டு காரியங்களில் கலந்து கொண்டால் ஐந்து நாட்களுக்கு ஓம்சிவசிவஓம் ஜபிப்பதற்கு லீவு விடவும்)
வெறும் ட்ரையலாகப் பார்க்க விரும்புவோர் ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டிய அவசியமில்லை;நியாயமான கோரிக்கை விரைவில் நிறைவேற விரும்புவோர் தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் வீதம் அதிக பட்சமாக எத்தனை மணி நேரம் வேண்டுமானாலும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்.ஓம்சிவசிவஓம் அதிகாலை,காலை,மதியம்,நண்பகல்,மாலை,இரவு,நள்ளிரவு,பின்னிரவு என எந்தக் காலத்திலும் ஜபிக்கலாம்.
வீட்டின் உயரமான இடத்தில் அமர்ந்து ஜபிக்க விரைவான பலன் கிடைக்கும்.
ஆரம்ப நாட்களில் அரை மணி நேரம் ஓம்சிவசிவஓம் ஜபிப்பதே சிரமமாக இருக்கும்.போகப் போக சுலபமாகிவிடும்.ஆரம்ப நாட்களில் மன ஒருமைப்பாட்டுடன் ஓம்சிவசிவஓம் ஜபிப்பது சிரமமே! நமது விதியை மாற்றிட நாம் செய்யும் முயற்சியே ஓம்சிவசிவஓம்!!! எனவே,மனம் தளராமல் ஓம்சிவசிவஓம் ஜபித்து வர,ஓரிரு நாட்களில் நமக்கு மனக்குழப்பம் நீங்கி ஆழ்ந்த மன அமைதி கிடைக்கத்துவங்கும்.இந்த மன அமைதியால்,நமது ஒவ்வொரு செயலுமே நம்மை செயல்புயலாக மாற்றும்.ஓரிரு வாரங்களுக்குப் பிறகு,நம்மைச் சுற்றியுள்ளவர்கள் நம்மிடம் பழகும் விதமே மாறும்.ஆமாம்! அவர்கள் வலிய வந்து உதவி செய்வதை நீங்கள் உணர்வீர்கள்.ஓரிரு மாதங்களில் நாம் நினைப்பது மட்டுமே நடக்கத்துவங்கும்.இங்கிருந்துதான் நீங்கள் கவனமாக சிந்திக்கத் துவங்க வேண்டும்.நெகடிவ்வான,கோபமான சிந்தனைகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
எக்காரணம் கொண்டும் நான் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவருகிறேன் என்பதை உங்களைச் சுற்றியிருப்பவர்களிடம் சொல்லாதீர்கள்.சொன்னால்,அன்றிலிருந்து உங்களால் ஓம்சிவசிவஓம் ஜபிக்க முடியாமல் போகலாம்.
வாழ்க வளமுடன் ஓம்சிவசிவஓம்
வாழ்க வளமுடன் ஆன்மீகக்கடல் வாசகர்கள்/வாசகிகள் ஒவ்வொருவரும்!!!