Pages

சூரியன் பார்வைப்படும் கிரகங்களுக்கு பரிகாரங்கள்


சூரியன், சந்திரன், புதன், சுக்கிரன், ராகு, கேது, தாங்கள் இருக்குமிடத்தில் இருந்து 7 ஐ பார்க்கிறார்கள். செவ்வாய் 4, 7, 8, ஸ்தானங்களைப் பார்க்கிறார். வியாழன் 5, 7, 9 ஸ்தானங்களைப் பார்க்கிறார். சனி 3, 7, 10 ஸ்தானங்களைப் பார்க்கிறார். சுபக்கிரகங்களாயில் இருந்து சுபஸ்தானங்களைப் பார்த்தால் சுபமான பலனையும், பாபக்கிரகங்கள் பாப பலனையும் கொடுக்கிறார்கள்.

ராகு, கேதுக்கள் ஒருவருக்கொருவர் 7-ல் இருந்து ஒருவரை ஒருவர் பார்த்து அப்பிரதக்ஷணமாகச் சஞ்சாரம் செய்வார்கள். ராகு சஞ்சாரம் செய்யும் ஸ்தானங்களில் குழப்பத்தையும் கேது, சஞ்சாரம் செய்யும் ஸ்தானங்களில், வெறுப்பையும் ஞானத்தையும் கொடுப்பார்கள்.

அதிக கஷ்ட கோசரங்கள்......

1ல் சனி. 2ல் கேது. 3ல் வியாழன். 4ல் புதன். 5ல் சூரியன். 6ல் சுக்கிரன். 7ல் செவ்வாய். 8ல் சந்திரன். 9ல் ராகு. கோசாரத்தில் சஞ்சாரம் செய்யும்பொழுது அவர்களது கோசாரபலத்தில் அதிக கஷ்டங்கள் கொடுப்பார்கள்.

பரிகாரங்களை செய்ய வேண்டியது.......

தசைகளில் சூரியதசைக்கும், மற்ற தசைகளில் சூரிய புத்திக்கும், கோசாரத்தில், கெட்டஸ்தானங்களில் இருக்கும் நிலையாயில் சூரியனுக்குச் செய்ய வேண்டியது.

1. தினசரி காலை 7 மணிக்குள் 12 தடவை சூரிய நமஸ்காரங்கள் செய்வது. 2. ஞாயிற்றுக் கிழமை தோறும் விரதம் இருப்பது.
3. சிவாலயம் அல்லது பெருமாள் ஆலயம் சென்று பிரதக்ஷிணம் செய்து பிரார்த்திப்பது.
4. ஞாயிற்றுக்கிழமைகளில் ஈஸ்வரனுக்காவது, பெருமாளுக்காவது அர்ச்சனை செய்வது.

சந்திர கிரகத்துக்கு.......

1. தினசரி சிவாலயமோ, பெருமாள் ஆலயமோ சென்று பிரார்த்திருப்பது.
2. திங்கட்கிழமை, சோமவாரம் விரதம் இருப்பது.
3. அம்பாளுக்கு அர்ச்சனை செய்வது.
4. தேவீ ஸ்தோத்திரங்கள் படித்து வருவது.

செவ்வாய் கிரகத்திற்கு........

1. தினசரி முருகன் ஸ்தோத்திரங்கள், கவசங்கள் படித்து வருவது.
2. செவ்வாய்க்கிழமை தோறும் முருகனுக்கு அர்ச்சனை செய்வது.
3. செவ்வாய்க்கிழமை தோறும் விரதம் இருப்பது.
4. முருகன் கோவில்களுக்கோ, மற்ற ஆலயங்களில் முருகன் இருக்கும் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வது.

புதன் கிரகத்திற்கு (தேவதைகள், பெருமாள், மகாவிஷ்ணு)......

1. பெருமாள் கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வது.
2. விஷ்ணு ஹைஸ்ர நாமம், விஷ்ணு ஸ்தோத்திரங்கள் படித்து வருவது. 3. புதன்கிழமை தோறும் பெருமாளுக்கு அர்ச்சனை செய்வது.
4. புதன்கிழமை தோறும் விரதம் இருப்பது.

வியாழ கிரகத்திற்கு (தட்சிணாமூர்த்தி).........

1. சிவாலயம் சென்று, ஈஸ்வரன், அம்பாள், பரிவார தேவதைகள், தட்சிணாமூர்த்தியை தரிசனம் செய்து நவக் கிரகங்களை பிரதஷிணம் செய்யவும்.
2. வியாழக்கிழமை தோறும் விரதம் இருக்கவும்.
3. வியாழக்கிழமைகளில் தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யவும் அல்லது குருவுக்கு அர்ச்சனை செய்யவும் அல்லது அரசு வேம்பு, நாகர் இவைகளை 9 தடவை பிரதக்ஷìணம் செய்யவும்.
4. விஷ்ணு ஹைஸ்ர நாமம் பாராயணம் செய்யவும்.

சுக்கிர கிரகத்திற்கு (துர்க்கை)....

1. வெள்ளிக்கிழமை துர்க்கை கோயிலில் துர்க்கைக்கு அல்லது சிவன் கோவிலில் துர்க்கைக்கு அர்ச்சனை செய்யவும்.
2. தினசரி துர்க்கை அம்மனை 9 தடவை பிரதக்ஷìணம் செய்யவும்.
3. தினசரி லட்சுமி ஸ்தோத்திரம் அல்லது துர்க்கை ஸ்தோத்திரங்கள் படித்து வரவும்.
4. வெள்ளிக்கிழமை விரதம் இருக்கவும்.

சனீஸ்வரர் (பெருமாள், கருப்பர், அய்யனார், வெங்கடாசலபதி).....

1. சனிக்கிழமைகளில் விரதம் இருக்கவும்.
2. தினசரி நவக்கிரகங்களை 9 தடவை பிரதக்ஷìணம் செய்யவும்.
3. சனிக்கிழமைகளில், நவக்கிரகங்களில், சீனிஸ்வரருக்கு அல்லது பெருமாளுக்கு அல்லது கருப்பருக்கு அர்ச்சனை செய்யவும்.
4. தினசரி விஷ்ணு ஸஹஸ்ர நாமம், வெங்கடேஸ்வர ஸ்தோத்திர பாராயணம் செய்யவும்.
5. நவக்கிரக ஸ்தோத்திரத்தில் சனீஸ்வர ஸ்தோத்திரங்கள் தினசரி படித்து வரவும்.

ராகு (துர்க்கை).......

ராகு கிரகத்திற்கு, கேது கிரகத்துக்கு அவர்கள் எவர்கள் வீட்டில் இருக்கிறார்களோ, எவர்களுடன் சேருகிறார்களோ, எவர்களால் பார்க்கப்படுகிறார்களோ அக்கிரகங்களுடைய பலனை செய்கிறார்கள். ஆதனால் தசாபுத்தி சித்திரங்களில் எந்த கிரகங்கள் சம்மந்தம் பெறுகிறதோ அதை அனுசரித்து பரிகாரம் செய்ய வேண்டும்.

ராகுவிற்கு துர்க்கைப்ரீதி செய்து நன்மை........

1. தினசரி துர்க்கை சம்பந்தமான ஸ்தோத்தி ரங்கள் படித்து வரலாம்.
2. தினசரி அரசு வேம்பு விநாயகர் நாகர்கள் இவைகளை 9 தடவை பிரதக்ஷìணம் செய்யலாம்.
3. துர்க்கைக்கு அவர்கள் இருக்கும் வீட்டின் கிரக அதிபர்கள் கிழமைகளில் அர்ச்சனை செய்யலாம்.

கேது (விநாயகர் ப்ரீதி)........

1. விநாயகர் ஸ்தோத்திரங்கள், கேது ஸ்தோத்திரங்கள் படித்து வரலாம்.
2. தினசரி அரசு, வேம்பு, விநாயகர், நாகூர் இவைகளை 9 தடவை பிரதக்ஷணம் செய்யலாம். அல்லது விநாயகர் ஆலயத்தை 9 தடவை சுற்றி வரலாம்.
3. கேது இருக்கும் கிரஹாதிபர் கிழமைகளில் கேதுவுக்காவது விநாயகருக்காவது அர்ச்சனை செய்யலாம்.