Pages

ஓம்சிவசிவஓம் மந்திரமும்,ஓம்நமச்சிவாய மந்திரமும்


ஓம்நமச்சிவாய மந்திரத்தை ஜபிக்க குடும்பஸ்தராக வாழ்ந்து,தனது குழந்தைகளை வளர்த்து,படிக்க வைத்து,மணம் செய்வித்து,அவர்களின் குழந்தைகள் பிறந்து படிக்கப்போகும் வரையிலும் கூடவே வழிகாட்டி,தேவைப்பட்டால் தனது குழந்தை மணமானப்பின்னர் அதனது வாழ்க்கைத்துணையை விட்டுப்பிரியாமல் பார்த்துக்கொண்டபிறகு,வானப்பிரஸ்தம் எனப்படும் வனத்துக்குள் புகுதல் செல்ல வேண்டும்.இது முற்காலத்தில்(சுமார் 20,000 ஆண்டுகளுக்கு முன்புவரை)இருந்த நடைமுறை!
இப்படி வனம் புகுந்து அங்கே துறவுவாழ்க்கை வாழும்போது,முறைப்படி சிவதீட்சை பெற்று,அசைவம்,வெங்காயம்,பூண்டு,காரம்,உப்பு தவிர்த்து,தினமும் ஓம்நமச்சிவாய ஜபிக்க வேண்டும்.

கி.பி.1000 முதல் நமது இந்துதேசத்தை அன்னியர்கள் பணம்,சொத்து,தங்கம்,செல்வ வளத்துக்காக ஆக்கிரமிக்கத்துவங்கினர்.இதனால்,குரு சிஷ்ய பரம்பரை நலிய ஆரம்பித்தது.1700களில் கத்தோலிக்க கிருஸ்தவன்(ஆங்கிலேயன்) இந்து தேசத்துக்குள் நுழைந்தபின்னரே,நாம் நமது பெருமைக்குரிய இந்துப் பெருமைகளை இழந்தோம்.இன்று இந்து நடிகர்களே,இந்து பண்பாடு,மரபு,வழக்கங்களைக் கேலி செய்தாலும்,அவற்றைப் பற்றி விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறோம்.(நமது அம்மாவை இழிவாகப் பேசினால் மட்டுமே இப்போது ஆத்திரம் உடனே வருகிறது.பெண் இனத்தை இழிவுபடுத்தும் இணையத்தைத் தடை செய்ய வேண்டும் என்ற விழிப்புணர்வு நம்மிடம் வரவில்லை;இந்துப் பண்டிகைகள்,பண்பாடுகளைக் கேலி செய்தால் இந்த ஆத்திரம் வருவதில்லை)

இந்நிலையில் ஒரு முறையான குருவைத் தேடக்கூடிய துர்பாக்கிய நிலைக்கு வந்துவிட்டோம்.தமிழ்நாட்டில் இருக்கும் 32 மாவட்டங்களில் மாவட்டத்துக்கு ஒரு சிவ அம்சமுடைய துறவி கிடைப்பது அரிதாக இருக்கிறது.இந்த துர்பாக்கிய சூழ்நிலையை 1980களில் உணர்ந்த மிஸ்டிக் செல்வம் ஐயா அவர்கள் ஒரு ஆராய்ச்சி செய்தார்;குடும்பஸ்தார இருக்கவேண்டும்;மந்திர சக்தியும் கைகூடவேண்டும்;துறவு நிலையை எட்டாமலேயே சிவனருள் கிட்ட வேண்டும்.தினசரி வாழ்க்கை வேகமாக இருக்கிறது.அதற்கேற்றாற்போல் எளிமையான,ஆனால் சர்வ சக்திவாய்ந்த சிவ மந்திரம் ஏதும் உண்டா? என பல சிவனடியார்களைத் தேடி வேண்டினார்.அவரது பல வருடத் தேடலின் முடிவாக நமக்குக் கிடைத்த சிவ வைரம் “ஓம்சிவசிவஓம்”

இரண்டே இரண்டு கட்டுப்பாடுகளே இந்த மந்திரத்தை ஜபிக்க உண்டு.வேறு எதுவும் தேவையில்லை;


1.21 வயது நிரம்பியிருக்க வேண்டும்.


2.அசைவம் சாப்பிடக்கூடாது.


எந்த ஒரு மந்திரமும் 1,00,000 தடவைக்கு மேல் உரு (ஜபம்) ஏற்றியபின்னரே வேலை செய்யும்.ஓம்சிவசிவஓம் 10,000 தடவை சொல்வதற்குள் நம்முடைய கடுமையான நெருக்கடியிலிருந்து நம்மை மீட்கத் துவங்கும்;கவனிக்கவும் துவங்கும்.இந்த ஓம்சிவசிவஓம் மந்திரத்தையும் 1,00,000 தடவைக்கு ஜபிக்க வேண்டும்.


ஓம்சிவசிவஓம்