Pages

இலங்கையில் பரவும் ஓம்சிவசிவஓம்


அன்புடையீர்!!!

வணக்கம். . இலங்கையில் இருந்து அனுப்பிகிறேன்.

கடந்த இரண்டு மாதமாக ஓம் சிவ சிவ ஓம் சொல்லி வரகிறேன். மாற்றம் மற்றவர்களுக்கு விளங்கா விடினும்.... ஓம் சிவ சிவ ஓம் சொல்லும் போது.. மனதுக்கு இனம் புரியாத அமைதியை உணர முடிகிறது.

இங்கு என் நண்பர்களுக்கு ஓம் சிவ சிவ ஓம் பற்றி சொல்லி வருகிறேன்...

தினமும் இங்கு உள்ள சிவன் கோவிலில் (கருங்கல்லால் கட்டப்பட்ட) காலை 30 நிமிடம் ஓம் சிவ சிவ ஓம்
ஜெபிக்கிறேன். மனதில் அமைதியை உணருகிறேன்....
மனவளகலையில் பிரமஞானம் வரை முடித்துள்ளேன். தியானம் செய்கிறேன்.
இருந்தும் வாழ்கையில் கவலைகளுக்கு குறைவில்லை.
மனவாழ்வு முறிந்து விட்டது... பொருளாதார சிக்கல். வருமானம் குறைவில்லை. உழைப்பது வட்டியாக
வங்கிக்கு போகிறது. நான் doctorஆக வேலை செய்கிறேன். இப்போ மகிழ்வாக வேலை செய்ய முடியவில்லை.
வெளிநாடு போகும் நோக்குடன் பணத்தை செலுத்தி விட்டு காத்திருக்கிறேன் நம்மிக்கையுடன்
ஓம் சிவ சிவ ஓம் ஜெபித்த வண்ணம்.!!!