Pages

ஓம்சிவசிவஓம் நேரடியாக பரவத்துவங்கியது



2010 முதல் இன்று வரையிலும் சுமார் நான்கு தடவை சனிப்பிரதோஷ நாட்களில் அண்ணாமலையில் சுமார் 5000 ஓம்சிவசிவஓம் ஜபிக்கும் முறை பற்றிய நோட்டீஸ்கள் விநியோகித்திருக்கிறோம்.
ஒரு முறை ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு மடவார்வளாகம் வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் 1000 ஓம்சிவசிவஓம் நோட்டீஸ்கள் விநியோகம் செய்யப்பட்டன.

இந்த மாதத்தில் ஒரு வியாழக்கிழமையன்று,ஈரோட்டில் ஒரு சிவாலயத்தில் நிகழ்ந்த கும்பாபிஷேகத்தில் சுமார் 3000 நோட்டீஸ்களை நமது ஆன்மீகக்கடல் வாசகர் ஒருவர் விநியோகித்திருக்கிறார்.

சென்ற ஞாயிற்றுக்கிழமை 25.9.11 அன்று பிரதோஷமும் சிவராத்திரியும் ஒருங்கே வந்தது.இந்த நாளில் விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தாலுகாவில் அயன்கொல்லங்கொண்டான் கிராமத்தில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் நமது வாசகரும்,எனது ஜோதிட சீடருமான ஒரு இளைஞர் ஓம்சிவசிவஓம் நோட்டீஸ் விநியோகித்தார்.

அதே நாளில் எட்டுபேர்கள் கொண்ட குழுவினர்,திரு அண்ணாமலையில் உட்பிரகாரம் எனப்படும் மலையை ஒட்டி இருக்கும் வனப்பாதையில் கைகளில் ருத்ராட்சங்களை வைத்துக்கொண்டு பிரதோஷ நேரம் முடியும் வரையிலும் ஓம்சிவசிவஓம் ஜபித்தவாறு கிரிவலம் சென்றனர்.

ஜோதிடராக நான் இருப்பதால்,ஜாதகம் பார்க்க வரும் ஒவ்வொருவரிடமும் ஓம்சிவசிவஓம் ஜபிக்கும் முறையை பரப்பிக்கொண்டே இருக்கிறேன்.

இந்தபுனிதமான பணியில் உங்களின் பங்களிப்பு என்ன?

ஓம்சிவசிவஓம்