ஒருவரை ஒருவர் நேரடியாகவோ,மறைமுகமாகவோ சார்ந்தே வாழமுடியும்.ஆன்மீக முன்னேற்றத்திற்கு சாட்சிகள் தேவையில்லை;இருப்பினும்,நமது ஆன்மீக முன்னேற்றம் பற்றி பிறருக்கு(நமது அடையாளம் தெரியாமல்)த் தெரிவிப்பதன்மூலமாக,அதன் தாக்கத்தினால் இந்த பூமியில் யாராவது ஒருவராவது நமது வழிமுறையைப் பின்பற்றுவார்.இதன்மூலமாக நாம்,யாரோ முகமறியாத ஒருவருக்கு மானசீக குருவாக மாறவும் ஒரு சந்தர்ப்பம் உண்டாகும்.அப்படி மாறியபின்னர்,நம்மால் தினமும்/அடிக்கடி ஓம்சிவசிவஓம் ஜபிப்பவரின் புண்ணியத்தில் ஒரு பங்கும் நம்மைத் தேடி வரும் என்பது ஆன்மீக உலக ரகசியம் ஆகும்.
ஆமாம்!!! பல ஆன்மீகக்கடல் வாசகர்கள்,வாசகிகள்
தினமும் ஓம்சிவசிவஓம் மந்திரஜபம் ஜபித்துவருகின்றனர்.அவர்களில் மிக மிக
சொற்பமானவர்கள் மட்டுமே ஓம்சிவசிவஓம் ஜபித்துவருவதன்மூலமாக எந்தமாதிரியான
ஆன்மீக அனுபூதிகளைப் பெற்றார்கள் என்பதைத்
தெரிவிக்கின்றனர்.பெரும்பாலானவர்கள் இன்றுமுதல் தெரிவிக்கும்படி
வேண்டுகிறேன்.
பல ஆன்மீகக்கடல் வாசகர்கள்,ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பித்த 15 நாட்களுக்குள்ளாகவே அவர்களின் மனநிலையில் மாற்றங்கள் தெரிய ஆரம்பித்திருப்பதையும்,பல நன்மைகள் எப்படி அடைந்தார்கள் என்பதையும் விவரித்தார்கள்.அப்படி விவரித்ததை,அவர்களின் அனுமதியோடு,அவர்களின் பெயர்,ஊரைத் தவிர்த்துவிட்டு ஆன்மீக முன்னேற்றங்களை மட்டுமே ஓம்சிவசிவஓம் வலைப்பூவில் வெளியிட்டுவருகிறோம்.
தமிழ்நாட்டில் இருக்கும் மாநகரங்கள்,இலங்கை,மலேஷியா,சிங்கப்பூர்,இந்தோனோஷியா,தாய்லாந்து,ஜப்பான்,இங்கிலாந்து,கானா,தென் ஆப்ரிக்கா,பிஜித்தீவு,மாலத்தீவு,ஸ்பெயின்,வளைகுடா நாடுகள் அனைத்திலும்,அமெரிக்கா,கனடா,மெக்ஸிகோ=இவைகளில் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பித்துள்ளார்கள்.இது இன்னும் பரவ வேண்டும்.
அப்படி பரவ ஏற்கனவே ஓம்சிவசிவஓம் ஜபித்துவரும் வாசகர்கள் மாதம் ஒரு மின் அஞ்சல் அனுப்பும்படி வேண்டுகிறேன்.
அதில் தாங்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பித்த நாள்,தினமும் எவ்வளவு நேரம் ஓம்சிவசிவஓம் ஜபித்து வருகிறீர்கள்,எந்த இடத்தில் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவருகிறீர்கள் என்பது போன்ற விபரங்களுடன் ,ஜபிக்க ஆரம்பித்தபின்னர்,எத்தனாவது நாள் முதல் உங்களுக்கு மன ரீதியான மாற்றங்கள்,உடல் ரீதியான மாறுதல்கள்,கிடைக்க ஆரம்பித்திருக்கும் நன்மைகள் அல்லது விலக ஆரம்பித்திருக்கும் தீமைகளையும் பட்டியலிட்டு மின் அஞ்சல் அனுப்பவும்.
உங்களின் அனுபவங்கள் நிச்சயமாக இந்த உலகில் யாராவது ஒருவரின் சோகத்தை நீக்குவதற்குக் காரணமாக இருக்கும்.
பலர் பயணம்,குடும்ப துக்கம்,குடும்ப சுப நிகழ்ச்சிகள் என பல்வேறு காரணங்களால் தொடர்ந்து ஓம்சிவசிவஓம் ஜபிக்க முடியாமல் இருக்கின்றனர்.இதற்காக சிறிதும் வருத்தப்பட வேண்டிய அவசியமில்லை;
உதாரணமாக,கடமலைக்குண்டு என்ற ஊரிலிருக்கும் ஆறுமுக சபாபதி என்னும் வாசகர்,72 நாட்களாக தொடர்ந்து ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்திருக்கிறார்.அவரது ஓம்சிவசிவஓம் ஜப எண்ணிக்க 51,400ஐத் தொட்டிருக்கிறது.அவரது வீட்டில் இருந்த அவரது பாட்டி சிவனடி சேர்ந்துவிட்டார்.ஒரு ஆண்டுக்கு எந்த சுப காரியமும் செய்யக்கூடாதாமே? எனக் கேட்டார். தாய் தந்தை மறைந்தால் மட்டுமே ஓராண்டு வரை எந்த ஒரு சுபகாரியமும் செய்யக்கூடாது என்ற ஆதாரத்தை அனுப்பி அடுத்து அவர் செய்ய வேண்டியதை விவரித்தோம்.
31 ஆம் நாளில் அருகில் இருக்கும் விநாயகர் கோவிலுக்குச் சென்று,ஒரு அருகம்புல் மாலையை விநாயகருக்கு அணிவித்துவிட்டு,3 முறை விநாயகரை வலம் வந்துவிட்டு,9 முறை தோப்புக்கரணம் போட்டுவிட்டு அன்றிலிருந்தே மீண்டும் ஓம்சிவசிவஓம் ஜபிக்க ஆரம்பிக்கச் சொன்னோம்.அதன்படியே செய்ய ஆரம்பித்திருக்கிறார்.
முடிந்தவரையிலும்,வேண்டியவர்களின் துக்க வீடுகளுக்கு மரணம் நிகழ்ந்த அன்றே போவதைத் தவிர்ப்பது (ஓம்சிவசிவஓம் ஜபிப்பவர்களுக்கு ) நன்று.மரணம் நிகழ்ந்த மூன்றாம் நாள் அல்லது 16 ஆம் நாள் சென்று துக்கத்தில் கலந்து கொள்வதன் மூலமாக மூன்று நாட்கள் மட்டுமே ஓம்சிவசிவஓம் ஜபிக்க முடியாமல் போகும்.
இதேபோலவே,ருதுவீட்டிற்கும் அன்றே செல்லாமல் ஓரிரு நாட்கள் கழித்துச் சென்று நமது உரிமையை நிலைநாட்டிக்கொள்ளலாம்.
இராஜபாளையத்தில் இருக்கும் எனது நண்பர் ஒருவர் 22 நாட்கள் மட்டுமே ஓம்சிவசிவஓம் தொடர்ந்து ஜபித்தார்.,மார்க்கெட்டிங் எனப்படும் சந்தைப்படுத்துதல் வேலையில் இருக்கும் அவர் வாரம் ஒரு நாள் மட்டுமே அதுவும் ஒரு மணிநேரம் மட்டுமே ஓம்சிவசிவஓம் ஜபித்துவருகிறார்.இப்படி வாரம் ஒரு நாள் வீதம் கடந்த எட்டு மாதங்களாக விடாமல் ஜபித்துவருகிறார்;
சென்னையில் எனது உறவினரின் நண்பி,பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிகிறார்.17 நாட்கள் மட்டுமே அவரால் தினமும் ஓம்சிவசிவஓம் ஜபித்துவந்தார்.அதன்பிறகு,மூன்று நாட்களுக்கு ஒரு நாள் ஓம்சிவசிவஓம் ஜபித்துவருகிறார்.லீவு கிடைக்கும்போதெல்லாம் இவர் இரண்டு அல்லது மூன்று மணி நேரம் ஜபித்துவிடுவார்.இன்று வரையிலும் இதை உற்சாகமாகவும்,விடாப்பிடியாகவும் ஜபித்துவருகிறார்.இவரது லட்சியம் 10,00,000 தடவை ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும் என்பதே!!
பெங்களூரில் எனது பால்ய நண்பர் ஒருவர்,10 நாட்களுக்கு ஒருநாள் மட்டுமே ஓம்சிவசிவஓம் ஜபித்துவருகிறார்.
தூத்துக்குடியில் ஒரு வாசகர் மே மாதத்தில் இரண்டு மணிநேரம் (இரவு 11 மணி என நினைக்கிறேன்) கடலோரத்தில் ஓம்சிவசிவஓம் ஜபிக்க,இவரது இடத்தில் மட்டுமே மழைபெய்ததைப் பெருமையாகத் தெரிவித்தார்.
போனவாரம்,சிங்கப்பூர் வளைகுடாவில் பணிபுரியும் நமது ஆன்மீகக்கடல் வாசகர் ஓரிரு மணி நேரம் மட்டுமே ஓம்சிவசிவஓம் ஜபித்திருக்கிறார்.பிரிந்துபோன அவரது சகோதரி போனில் பேச அவர் மகிழ்ச்சிக்கடலில் திக்குமுக்காடிப்போய்,நமக்கு அதை அப்படியே எழுத்தில் வடித்திருக்கிறார்.
ஓம்சிவசிவஓம் மந்திரத்தை கர்ப்பிணிகள் தாராளமாக ஜபிக்கலாம்.கணவன் மனைவி தாம்பத்தியம் முடிந்ததும்,குளித்தப்பின்னரே ஓம்சிவசிவஓம் ஜபிக்க வேண்டும்.படுக்கையறையில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கக் கூடாது.ஒரே ஒரு அறையே வீடாக இருப்பவர்கள்,தாம்பத்தியம் முடிந்தபின்னர்,அந்த அறையை தண்ணீரால் கழுவி சுத்தப்படுத்திய பின்னர் ஜபிக்கப் பயன்படுத்தலாம்.
தற்கொலை செய்த அறைகளில் ஜபிக்காமல் இருப்பது அவசியம்.சென்னை,திருச்சி,கோவை,பெங்களூர் போன்ற மாநகரங்களில் வீடு கிடைப்பதே கடும் அதிர்ஷடமாக இருப்பதால்,தற்கொலை செய்தது தெரியாமல் இருந்து,நாம் அங்கு குடியேறி ஓம்சிவசிவஓம் ஜபிக்கையில் அது நமக்கு எந்த வித பாதிப்பையும் தராது.
எனது ஆன்மீகக்கடல் வாசகர்கள் 1,00,00,000 தமிழர்கள் ஓம்சிவசிவஓம் ஜபிக்கத் துணைபுரிவார்கள் என நம்புகிறேன்.உங்களின் ஆதரவோடு பூமியில் அழிவுகளைக் குறைக்கவும்,நாம் நமது ஆன்மீக முன்னேற்றத்தை வலுப்படுத்தவும்,மின் அஞ்சல் அனுப்புங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
ஓம்ஹரிஹரிஓம் ஜபிப்பவர்கள் இதுவரையிலும் 100க்கும் குறைவானவர்களே எனக்குத் தெரிந்து இருக்கிறார்கள் என்பதையும் இக்கணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஓம்சிவசிவஓம்