Pages

சித்தி விநாயக்


மும்பை மாநகரில் உள்ள மிகப்பெரிய கோயில் டிரஸ்ட்டுகளில் சித்தி விநாயக்கோயில் டிரஸ்ட்டும் ஒன்று. பிரபாதேவி என்ற இடத்தில் அமைந்துள்ள இந்த சித்தி விநாயக் கோயில் 1801ம் ஆண்டு கட்டப்பட்டது. செவ்வாய் கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். மும்பை வரும் சுற்றுலா பயணிகள் இங்கு தவறாமல் வந்து தரிசனம் பெறுகின்றனர். விநாயகர் சதுர்த்தி விழா காலங்களில் லட்சக்கணக்கானோர் சித்தி விநாயகரை வழிபட வருவர். பக்தர்களுக்காக கோயில் டிரஸ்ட் சார்பில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.