Pages

லால்பாக் ராஜா


தென் மும்பையில் லால்பாக் மார்க்கெட் பகுதியில் லால்பாக் ராஜா என்ற விநாயகர் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு தினமும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இங்கு விநாயகர் சதுர்த்தி விழா 11 நாள் நடக்கும். தினமும் 50 லட்சம் பேர் லால்பாக் ராஜா விநாயகரை தரிசனம் செய்ய வருவர்.
விநாயகர் சதுர்த்தி விழாவில் இந்த கோயில் உண்டியலில் கோடிக்கணக்கில் பணம், நகை குவியும். 11 நாள் கொண்டாட்டத் திற்கு பிறகு விநாயகர் விசர்ஜனம் செய்ய ஊர்வலம் புறப்படும். இந்த விசர்ஜன ஊர்வலம் கிர்தாவ்சௌபட்டி என்ற இடத்தில் உள்ள கடற்கரை பகுதியை அடைவதற்கு 2 நாட்கள் ஆகும். வழியில் ஆயிரக்கணக்கானோர் லால்பாக் ராஜாவை தரிசனம் செய்ய காத்திருப்பார்கள்.