Pages

கிரக தோஷங்கள் அகலும் சென்னிமலை முருகன் கோவில்..


நாள்என் செயும் வினைதான் என்
செயும் எனை நாடி வந்த
கோள்என் செயும் கொடும் கூற்று என்
செயும் குமரேசர் இரு
தாளும் சிலம்பும் சதங்கையும்
தண்டையும் சண்முகமும்
தோளும் கடம்பும் எனக்கு முன்னே
வந்து தோன்றிடினே

சென்னிமலை முருகன் கோவிலில் செவ்வாய் தவிர மற்ற எட்டு கிரகங்களையும் காணலாம். ஏனெனில் இந்த மூலவர் முருகனே செவ்வாய் கிரகமாக வீற்றிருக்கிறார். எனவே இத்தல முருகப்பெருமானை வணங்கினால் நவக்கிரக தோஷங்களும் அகலும். சனிதோஷம், நாக தோஷம், செவ்வாய் தோஷம் என சகல கிரக பீடைகளும் உடனே விலகும்.