(முக்தி தினங்கள் 13.12.2012 மூர்க்க நாயனார்; 14.12.2012 சிறப்புலியார்)
இறைவன் மீதான பக்தி வெறியாகவும் மாறிவிடக்கூடியது என்பதை ஒரு சிவனடியார் நிரூபித்திருக்கிறார். அந்த அடியார்: மூர்க்க நாயனார். பெயரே சொல்கிறதா, அவர் எப்படிப்பட்டவர் என்று? உண்மைதான், அவருடைய குணத்தை வைத்தே அவருக்குப் பிறர் வைத்த பெயர்தான் அது! திருவேற்காடு தலத்தில் தோன்றிய இவர் சிவனடியார்களுக்கு தினமும் உணவு அளித்து வருவதை சுவாசக் கடமையாக நிறைவேற்றி வந்தார். அதனால் அவருடைய செல்வமெல்லாம் அழிந்தபோதும், குறுக்கு வழியில் பொருள் ஈட்ட அவர் சூதாட்டத்தில் இறங்கினார்;
பணம் சேர்த்ததோடு அதில் ‘கெட்டிக்காரரும்’ ஆனார்! சிவப் பணியில் தன்னை எதிர்ப்போரைத் தாக்கவும் தயங்கமாட்டார். சூதாட்டத்தின்போது ‘இப்படி சம்பாதித்து சிவப்பணியைச் செய்யத்தான் வேண்டுமா?’ என்று யாராவது கேலி செய்தால் பொறுத்துக் கொள்ள மாட்டார். ஆயுதத்தால் பதில் சொல்லிவிடுவார். ஆனால், தன் சிவத்தொண்டு பிறரைத் துன்புறுத்தும் மார்க்கமாக இருப்பதையும், அப்படி ஒரு பணியை ஈசன் ஏற்கத் தயங்குவதையும் உணர்ந்து தன் சொந்த ஊரை விட்டு பல ஊர்களுக்குப் பயணம் செய்தார். அங்கெல்லாமும் எந்த அடாவடியும் செய்யாமல் அன்னதானத் திருப்பணியில் ஈடுபட்டார்.
கும்பகோணத்தில் முக்தியடைந்தார். அடுத்தவர் சிறப்புலியார். நான்கு வேதங்களையும் நன்கறிந்தவர்; ஓதுவதிலும் வல்லவர். ‘வேதப் புலி’ என்றே மக்கள் இவரை அழைத்தார்கள். இவர் ஐந்தெழுத்து மந்திரமான ‘நமசிவாய’த்தில் வேதங்களின் உட்பொருள் எல்லாம் பொதிந்திருப்பதை உணர்ந்து நெகிழ்ந்தவர். முறைப்படி யாகங்கள் செய்து, சிவனாரின் புகழை, விண்ணோக்கிச் செல்லும் யாகப் புகையாக ஓங்கச் செய்தார். தன் இல்லம் தேடி வரும் சிவனடியார் யாராக இருந்தாலும் அவர்களுக்குத் தேவையான எல்லா உதவிகளையும் செய்வார்.
வேதம் ஓதுவது அவருக்கு தினசரி வழக்கமாக இருந்தாலும், அவ்வாறு ஓதும் சமயத்தில் யாராவது சிவனடியார் வந்துவிட்டாரென்றால், வேதத்தை ஒரு ஓரமாக வைத்துவிட்டு, அடியாரை கவனிப்பது அவர் பண்பாக இருந்தது. வந்த அடியார் திருப்தியுற்று சென்ற பிறகு, விட்ட இடத்திலிருந்து வேத பாராயணத்தை அவர் தொடர்வார். இப்படி வேதமும், சிவமுமாக வாழ்ந்து பெரும் சிறப்பு பெற்ற சிறப்புலியார் வேதம் ஓதியபடியே சிவனடி சேர்ந்தார். சிவபக்தியில் தோய்ந்த இவ்விரு அடியார்களையும் இவ்விரு நாட்களில் தியானித்து சிவனருள் பெறுவோம்.