skip to main |
skip to sidebar
ஸ்ரீ முன்னேஸ்வரம் ஷேத்திர (வயல்) விநாயகர் கோவில் மூலவர்
முன்னேஸ்வரம் கிராமத்தில் வயல் நடுவே அமைந்துள்ள ஆலயத்தில் எழுந்தாருளி
அருள் பாலிக்கிறார், பொதுவாக இவரை களத்துப் பிள்ளையார், வயற்பிள்ளையார்,
கேதார விநாயகர் என்று அழைக்கின்றனர்.
இந்த ஆலயத்தில் வேறு எங்கும் காணப்படாத வழிபாடுகள் இடம் பெறுகின்றன,
பக்தர்கள் அனைவரும் ஆண், பெண், இந்து பௌத்தர் , தமிழ், சிங்களவர் என்ற எந்த
பாகுபாடும் இல்லாமல் எந்த நேரத்திலும், தங்களுக்கு விரும்பியவாறு,
விரும்பிய முறையில் அபிஷேக, பூசை, ஆராதனைகளை நடத்தலாம்.
நைவேத்தியங்களை கோவில் முற்றத்திலேயே தயார் செய்து வழிபாட்டை
நடத்துகின்றனர். அத்துடன் இந்த ஆலயத்தின் கருவறைக்கு கதவுகளே கிடையாது எனவே
நடை சாத்துவதே இல்லை. மதிய வேளையில் மட்டும் அர்ச்சகர் ஒருவரால் வேதாகம
முறைப்படி அபிஷேக , அலங்கார பூசை புனஸ்காரங்கள் செய்து...