Pages

பிரம்மகத்தி தோஷம் நீங்க



* தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ள திருவிடைமருதூர் ஆலயத்தில் உள்ள புஷ்ய தீர்த்தம் மற்றும் காருண்ய மிருத தீர்த்தத்தில் நீராடி சுவாமியையும், அம்பாளையும் முறைப்படி வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் நீங்கும்.

* பிரம்மஹத்தி தோஷமுள்ள ஜாதகர்கள் சிவன், பிரம்மன், விஷ்ணு உள்ள ஆலயங்களான உத்தமர் கோவில் கொடுமுடி தலங்களிலும் திருவிடைமருதூர், திருக்கண்டியூர், ஸ்ரீவாஞ்சியம் தலங்களிலும் சென்று வழிபட வேண்டும் திருப்புல்லானி அருகில் உள்ள தேவிப்பட்டணத்திலும் வழிபடலாம்.

* செவ்வாய் தோஷம், புத்திர தோஷம், சர்ப்ப தோஷம், கால சர்ப்ப தோஷம், களத்திர தோஷம், பிரம்மகத்தி தோஷம், நவக்கிரகத் தோஷம் இன்னும் எத்தனையோ தோஷங்கள்.

* பிரம்மகத்தி தோஷம் என்பது சாதகத்தில் பெரிதாகச் சொல்லப்படும். கொலை செய்தல், மாற்றான் மனை கவர்தல், கர்ப்பிணிப் பெண்ணை புணர்தல், பண மோசடி செய்தல் போன்றவர்களுக்கும் பிரம்ம கத்தி தோஷம் ஏற்படும்.

பின்னர் வந்தவர்கள், "குறிப்பாக பிராமணர்களை துன்புறுத்துவர்களுக்கு இந்த பிரம்ம கத்தி தோஷம் ஏற்படும்" என்று சேர்த்துக் கொண்டனர். அறியாமையில் திளைக்கும் மனிதர்களிடமிருந்து பணம் பறிக்க தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப தோஷங்களைப் படைத்துக்கொண்டனர் ஒரு சாரார்.

பொதுவாக ஜாதகத்தில் எந்த தோஷம் இருந்தாலும் பிரதோஷத்தில் எல்லா தோஷமும் நீங்கி விடும். பரிகாரம் செய்ய வேண்டுமெனப் பணம் செலவு செய்யாதீர்கள், அன்னதானம் செய்யுங்கள், உடை தானம் செய்யுங்கள்.

தோஷங்களுக்குப் பரிகாரங்கள் செய்தால் தோஷங்கள் நீங்குமோ இல்லையோ தெரியாது. ஆனால் கீழ்க்கண்ட ஆலயங்களுக்குச் சென்று இறைவனை மனமுருக வேண்டிக் கொண்டாலே இன்னல்கள் குறையும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

ஆலந்துறையார் (வட மூலநாதர்), கீழப்பழுவூர், அரியலூர், திருநோக்கிய அழகிய நாதர், திருப்பாச்சேத்தி, சிவகங்கை, பிரம்மசிரகண்டீஸ்வர், திருக்கண்டியூர், தஞ்சாவூர், குக்கி சுப்ரமண்யர், குக்கி சுப்ரமண்யா தட்சிண கன்னடா, ஸ்ரீபுவனேஸ்வர், திருப்பைஞ்ஞீலி, திருச்சி, கொழுந்தீஸ்வரர், கோட்டூர், திருவாரூர், திருமறைக்காடர், வேதாரண்யம், நாகப்பட்டினம்.