Pages

பிதுர்தோஷ பரிகாரங்கள்





* பலமான பிதுர்தோஷம் உள்ளவர்கள் காசி அல்லது ராமேஸ்வரத்தில் வேதம் அறிந்த பண்டிதர்களால் திலா ஹோமம் செய்தால் பிதுர் தோஷங்கள் நீங்கும், திலா ஹோமம் எனப்படுவது நெல்லையும், எள்ளையும் கலந்து செய்யப்படும் ஹோமமாகும். காலையில் எள் நீரால் தர்ப்பணத்தை கடற்கரையில் கொடுத்து விட்டு பின்னரே திலா ஹோமம் செய்ய வேண்டும்.

திலா ஹோமம் செய்பவர்கள் அன்று இரவு தலத்தில் தங்கி போக வேண்டும். ராமேஸ்வரம் கோவில் முன்புள்ள தீர்த்தம் அக்னி தீர்த்தம். இது ராமேஸ்வரத்தில் உள்ள தீர்த்தங்களில் மிக முக்கியமானது. மகாவிஷ்ணு ராம அவதாரம் எடுத்த பின்பு அக்னி தீர்த்தத்தில் நீராடி சிவபெருமானை பிரதிஷ்டை செய்து வழிபட்டார்.

சீதை தீக்குளித்த போது அக்னி தேவன் சீதா தேவியை தீண்டிய பாவத்தை போக்க அக்னி தீர்த்தத்தில் நீராடியதால் இது அக்னி தீர்த்தம் எனப்படுகிறது. அக்னி தீர்த்தத்தில் நீராடினால் கடுமையான பிதுர் தோஷங்கள் நிவர்த்தியாகும். ராமேஸ்வரத்தில் மட்டும் எல்லா நாட்களிலும் பிதுர் தோஷப் பரிகாரம் செய்யலாம்.

* கயாவில் செய்யும் திவசத்தால் மிகப் பெரிய புண்ணியம் நிகழும். முறையாக தானம் செய்யாதவர்கள், வாரிசு இன்றி இறந்தவர்கள், தகவல் தெரியாமல் மரணம் அடைந்தவர்கள், பலவிதமான துக்கத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கும் பித்ருக்கள் என்று நம் வம்சத்தின் முன்னோர்கள் அனைவரும் இந்த கயா திவசத்தால் நற்கதி பெறுகிறார்கள். இதுதவிர தாய் வம்சம், தந்தை வம்சம், நண்பர்கள், உறவினர்கள், வேலைக்காரர்கள், பசுக்கள், மரம், செடி கொடிகள் என 101 தலை முறைக்கும் பித்ருக்களுக்கு நற்கதி உண்டாகிறது. இதனால் உங்கள் வாழ்வும் வசந்தமாகும்.

* கயாவில் செய்யும் திவசத்தால் மிகப்பெரிய புண்ணியம் நிகழும். முறையாக தகனம் செய்யப்படாதவர்கள், வாரிசு இன்றி இறந்தவர்கள். தகவல் தெரியாமல் மரணம் அடைந்தவர்கள். பலவிதமான துக்கத்தை அனுபவித்துக் கொண்டு இருக்கும் பித்ருக்கள் என்று நம் வம்சத்தின் முன்னோர்கள் அனைவரும் இந்த கயா திவசத்தால் நற்கதி பெறுகிறார்கள்.

இது தவிர, தாய்வம்சம், தந்தை வம்சம், நண்பர்கள், உறவினர்கள், வேலைக்காரர்கள், பசுக்கள், மரம், செடி, கொடிகள் என 101 தலை முறைக்கும் பித்ருக்களுக்கு நற்கதி உண்டாகிறது. இதனால் உங்கள் வாழ்வும் வசந்தமாகும்.