108
விநாயகர்கள், ஸ்ரீசக்ரமேடு வடிவில் அமைந்த மேடையில், ஒருங்கே அமர்ந்து
பக்தர்களுக்கு தரிசனமளிக்கிறார்கள். கோயம்புத்தூர் ரேஸ்கோர்ஸ் சாலையில்,
தாமஸ் பார்க் ஹவுசிங் யூனிட்டில் இருக்கும் செல்வ விநாயகர் ஆலயத்தில் இந்த
அபூர்வ தரிசனத்தைக் காணலாம். அஷ்டோத்திரத்தின் ஒவ்வொரு நாமாவளிக்கும் ஒரு
பிள்ளையார் என்ற கணக்காம்!



