மகாராஷ்டிரா
மாநிலத்தில் விநாயகர் சதுர்த்தி விழா பிரம்மாண்டமாக கொண்டாடுவ துண்டு.
வீதிகள் தோறும் விநாயகர் சிலைகளை வைத்து பூஜை செய் வதால் மும்பை, புனே
நகரங்கள் களை கட்டும். பொதுமக்கள் மட்டுமன்றி, சிவசேனா, நவநிர்மான் சேனா,
பாஜ போன்ற அரசியல் கட்சிகள் சார்பிலும் விநாயகர் சிலைகள் வைத்து வழி
பாடுகள் நடக்கும். விசர்ஜன ஊர் வலத்தில் ‘கணபதி பப்பா மோரியா’ என்ற கோஷம்
விண்ணதிரும்.



