Pages

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவ 5ம் நாளான இன்று காலை மோகினி அலங்காரத்தில் மலையப்ப சுவாமியும், கிருஷ்ணரும் மாட வீதிகளில் பவனி வந்தனர். இன்று இரவு கருடசேவையையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. திருமலை-திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரம்மோற்சவம் கடந்த 15ம் தேதி தொடங்கியது. 4ம் நாளான நேற்று காலை கல்ப விருட்ச வாகனத்திலும், இரவு சர்வ பூபால வாகனத்திலும் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் மலையப்ப சுவாமி வீதி உலா நடந்தது.

5ம் நாளான இன்று காலை மோகினி அலங்காரத்தில் மலையப்ப சுவாமியும், கிருஷ்ணரும் மாட வீதிகளில் பவனி வந்தனர். நான்கு மாட வீதிகளிலும் திரண்டிருந்த பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா என பக்தி முழக்கமிட்டனர். இன்றிரவு கருடசேவையொட்டி மகாவிஷ்ணு அலங்காரத்தில் மலையப்ப சுவாமி மாட வீதியில் பவனி வருகிறார்.

கருட சேவைக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்பதால் தேவஸ்தானம் சார்பில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மேலும் பக்தர்களுக்கு வழங்குவதற்காக 4 லட்சம் லட்டுகள் தயார் நிலையில் உள்ளன. பக்தர்களின் பாதுகாப்புக்காக 1500 விஜிலென்ஸ் மற்றும் 3,500 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். கருடசேவையை யொட்டி காலை முதல் பக்தர்கள் கூட்டம் திருமலைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.