Pages

நாபலூர் அகத்தீஸ்வரர் கோயிலில் உலக நன்மை, மழை வேண்டி பைரவர்களுக்கு சிறப்பு பூஜை


 

திருத்தணி: திருத்தணி அருகே நாபலூரில் உள்ள அகத்தீஸ்வரர் சமேத காமாட்சி அம்மன் கோயிலில் மழை பெய்ய வேண்டியும் உலக நன்மைக்காகவும் கடந்த 2-ம் தேதி கணபதி ஹோமத்துடன் சிறப்பு யாகம் தொடங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து தினமும் சாமிநாத குருக்கள் தலைமையில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று கோயில் வளாகத்தில் பெரிய யாக குண்டம் வளர்க்கப்பட்டு, 64 பைரவர்களுக்கு சிறப்பு பூஜை நடத்தினர். பட்டுப் புடவை, பழம், காய்கறிகளை குண்டத்தில் போட்டு நெய் ஊற்றி அக்னி வளர்த்தனர். பல ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதில் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கவுன்சிலர் சுகாசினி கஜபதி, தாசில்தார் வளர்மதி, துணை தாசில்தார் கல்யாணம், வருவாய் ஆய்வாளர் பாலாஜி, அதிமுக ஒன்றிய செயலாளர் பார்த்திபன், ஒன்றிய கவுன்சிலர் ரவி, ஊராட்சி தலைவர்
மணிமொழி அர்ஜூனன், துணைத் தலைவர் முருகன், வார்டு உறுப்பினர்கள் ரமேஷ், குமார், கிராம நிர்வாக அதிகாரி ராமச்சந்திரன், உதவியாளர் மணி மற்றும்
பலர் கலந்து கொண்டனர்.