Pages

வேப்ப மரத்தினடியில் சுயம்புவாய் அவதரித்த அம்மன்


சென்னை ஆலந்தூரில் அமைந்துள்ளது ரேணுகா வேம்புலி அம்மன் ஆலயம். சுமார் இருநூறு ஆண்டுகளுக்கு முன் ரேணுகா பரமேஸ்வரியான அம்பிகை வேப்ப மரத்தினடியில் சுயம்புவாய் அவதரித்தாள். அம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் இவளுக்கு அபிஷேகம் செய்த நீரை தம் உடலில் தடவிக் கொண்டு நலம் அடைகின்றனர். ஆடி மாதம் கடைசி பத்து நாட்கள் இங்கு விமரிசையாக திருவிழா நடக்கிறது. பத்தாம் நாள் தீமிதி உற்சவம்.