திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரிக்கு ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் ஸ்ரீவித்யா பூஜை முறைப்படி விசேஷ வழிபாடுகள் நடை பெறுகின்றன.
தர்மபுரி கோட்டைக் கோயிலில் உள்ள கல்யாண காமாட்சி ஆலயத்தில் உள்ள சூலினி துர்க்கையின் முழு உருவத்தையும் ஆடி மாதம் மூன்றாம்
செவ்வாய்க்கிழமையன்று மாலை 4 மணி முதல் 9 வரை மட்டுமே தரிசிக்கலாம். மற்ற நாட்களில் முக தரிசனம் மட்டுமே.
தருமபுர ஆதீன தேவஸ்தான அம்மன் ஆலயங்களில் ஆடி வெள்ளிகளில் ஒன்பது அர்ச்சகர்கள் ஒன்பது வித மலர்களால் ஒன்பது சக்திகளை ஒரே சமயத்தில்
அர்ச்சனை செய்வது நவசக்தி அர்ச்சனை என போற்றப்படுகிறது.
திருநெல்வேலி சங்கரநாராயணர் ஆலயத்தில் ஆடிப்பூரத்தன்று அம்பிகையின் விருப்பப்படி சிவன் பாதி விஷ்ணு பாதியாக சங்கரநாராயணனாக அருட்காட்சி தந்தார் ஈசன்.
ஆடிப் பௌர்ணமியன்றுதான் திருச்சி உறையூரில் உள்ள பஞ்சவர்ணேஸ்வரர், உதங்க முனிவருக்கு ஐவண்ணங்களைக் காட்டியருளி னார். அதனால்
இத்தல ஈசன் ஐவண்ணநாதர் என வணங்கப்படுகிறார்.
புதுச்சேரிக்கு அருகே உள்ள வீராம்பட்டினத்தில் அருளும் செங்கழுநீர் அம்மன் ஆலயத்தில் ஆடி மாத வெள்ளிக்கிழமைகளில் விசேஷ வழிபாடுகளும் பல்லக்கில்
அம்பிகை திருவீதி ஊர்வலமும் நடைபெறும். ஐந்தாம் வெள்ளியன்று புதுச்சேரி கவர்னர் தேர்வடம் பிடித்து இழுத்து தொடங்கி வைப்பது வழக்கம்.
ஆடிப் பௌர்ணமியன்றுதான் ஹயக்ரீவர் அவதாரம் எடுத்தார். மது-கைடபர்களை அழிக்க திருமால் குதிரை முகம் கொண்ட பெருமாளாகத் தோன்றிய பொன்னாள்
இந்நாள்.
ஆடி பதினெட்டு அன்று ஸ்ரீரங்கத்தில் அருள்புரியும் ஸ்ரீரங்கநாதர், காவிரி அன்னைக்கு சீர்வரிசைகள் அளிக்கும் வைபவம் ஒவ்வொரு வருடமும் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் நடைபெறும்.



