சென்னை-
நங்கநல்லூரைச் சேர்ந்த அந்த அன்பர், குடியிருப்புகள் கட்டித்தரும் தொழில்
செய்து வருபவர். நடுத்தர வயதுக்காரரான அவருக்கு அவரது தாயாரின் மூலமாக
சாய்பாபா மீது பக்தி பூத்தது.
தனது தாயாரை சென்னை- மயிலாப்பூரில் இருக்கும் பாபா கோயிலுக்கு அழைத்து வருவதை வழக்கமாகக் கொண்டிருந்த அவருக்கு அடுத்த வியாழக்கிழமை எப்போது வரும் என ஏங்கும் அளவுக்கு பாபா
மீதான பக்தி அதிகமானது. ஒருநாள் ஷீரடி பாபாவை அவரது ஊரிலேயே தரிசிக்க வேண்டும் என்கிற ஆவல் மேலிட, ரயிலேறி புறப்பட்டார். மொழி தெரியாமல் ஷீரடி சென்றவரை யாரோ இரண்டு கிராம
வாசிகள் அன்போடு வரவேற்று, ஆலயத்துக்கு அழைத்துச் சென்று தரிசனம் செய்து வைத்ததோடு, இந்த சென்னை இளைஞருக்குத் தேவையான உணவையும் தந்து பசியாற்றினார்கள்.
உணவு முடித்த கரங்களை கழுவி விட்டு வந்தவர் தமக்கு உதவியவர்களைத் தேடினார். அவர்கள் மாயமாய் மறைந்து போயிருந்தார்கள். இது பாபா நிகழ்த்திய அற்புதம் என உணர்ந்தவர் மனதில்
விதையாய் ஓர் ஆசை விழுந்தது. ‘பாபாவுக்கு நான் ஒரு கோயில் கட்ட வேண்டும்’ என்பதே அது.
சென்னை வந்தவர் தமக்கு நிகழ்ந்த அதிசயத்தை தன் அன்னையிடம் பகிர்ந்து கொண்டார். தன் ஆசையை மனதில் பூட்டி வைத்தார். நாளாக, ஆக விதை மனதை முட்டி முட்டி துளிர்விடத் துடித்தது.
இதற்கிடையே ஒரு சித்தரின் அறிமுகம் கிடைத்தது. அவர் இந்த இளைஞரிடம், ‘‘உனக்கு ஏதாவது ஆசை இருந்தால் சொல். நிறைவேற்றித் தருகிறேன்’’ என்று சொல்ல, மனசுக்குள் மூடி வைத்திருந்த
கோயில் ஆசையை அந்த சித்தரிடம் சொல்லி, பாபாவுக்கு கோயில் கட்ட உதவினால் போதும் என்று கேட்டுக்கொண்டார் இளைஞர். கண்மூடி யோசித்த அந்த சித்தர், ஒரு பச்சை நிற டிரம்மில் புனித
நதிகளின் தீர்த்தங்களை ஊற்றினார். மங்கள பொருட்களைப் போட்டு, ஒரு துணியால் அதன் வாயை மூடினார். ‘‘இதற்கு தினமும் பூஜை செய்து வா! பாபா இங்கு கோயில் கொள்ள விரும்பினால் இதில்
எழுந்தருள்வார்’’ எனக் கூறினார். இளைஞரும் அப்படியே பூஜை செய்து வந்தார். நீண்ட நாட்களுக்கு பிறகு அந்த சித்தரே வந்து அந்த பச்சை நிற டிரம்மைச் சுற்றி இருந்த துணியை நீக்கி, உள்ளிருந்து
பாபா சிலையை வெளியே எடுத்துக் காட்டினார்! பிறகு அந்த பச்சை டிரம், பாபாவின் கோயிலாகவும் அமைந்தது!
இப்போது அவருக்காக தன் வீட்டின் ஒரு பகுதியை கோயிலாக்கும் முயற்சியில் இருக்கிறார் அந்த இளைஞர். அப்பகுதி மக்கள் இந்த பாபாவிடம் தம் கோரிக்கைகளை வைத்து அனைத்தையும்
நிறைவேற்றிக் கொள்கிறார்கள். வியாழன், ஞாயிற்றுக் கிழமைகளில் கூட்டம் அலைமோதுகிறது. பாபாவுக்கு கோயில் கட்டும் திருப்பணியில் பங்கெடுக்க விரும்புவோர், ஸ்ரீசாய் பிரார்த்தனா சமாஜ் டிரஸ்ட்,
ஸ்ரீ அபயபாபா திருத்தலம், 16, 16வது தெரு, தில்லை கங்கா நகர், நங்கநல்லூர், சென்னை-61. செல்:9444089026 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.