திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டலபூஜை வரும் 26ம் தேதி
நடக்கிறது. இதையொட்டி பக்தர்கள் குவிந்தனர். சபரிமலை ஐயப்பன் கோயிலில்
இந்தாண்டு மண்டல கால பூஜைக்காக கடந்த மாதம் 15ம் தேதி மாலையில் நடை
திறக்கப்பட்டது. 16ம் தேதி முதல் மண்டலகால பூஜைகள் துவங்கின. தினமும்
அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு கணபதி ஹோமம், உஷபூஜை, நெய் அபிஷேகம்,
புஷ்பாபிஷேகம் உள்பட சிறப்பு பூஜைகள் நடந்தது. சபரிமலை கோயிலுக்கு
தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து ஏராளமான
பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
நடை திறந்த அன்று முதலே பக்தர்கள் எளிதில் தரிசனம் செய்ய ஆன்லைன் முன்பதிவு வசதி செய்யப்பட்டது. இதன்மூலம் தொலைவில் இருந்து வரும் பக்தர்கள் வரிசையில் நீண்டநேரம் நிற்காமல் தரிசனம் செய்தனர். இதுவரை ஆன்லைன் வசதி மூலம் 10 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மண்டல கால பூஜை நாளை மறுநாள் 26ம் தேதியுடன் நிறைவுபெறுகிறது. அன்று மண்டல பூஜை நடக்கிறது. இதை முன்னிட்டு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்கஅங்கி ஊர்வலம் ஆரன்முளா பார்த்தசாரதி கோயிலில் இருந்து கடந்த 22ம் தேதி புறப்பட்டது.
இந்த தங்க அங்கி நாளை 25ம் தேதி மாலை சன்னிதானத்தை அடையும். தொடர்ந்து இந்த தங்க அங்கி ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனை நடத்தப்படும். இதைக்காண ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். நாளை மறுநாள் மண்டல பூஜை முடிவடைந்தவுடன் இரவு 11 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் மகரவிளக்கு கால பூஜைக்காக டிசம்பர் 30ம் தேதி மாலை கோயில் நடை திறக்கப்படும். 27, 28, 29 ஆகிய 3 நாட்கள் கோயில் நடை சாத்தப்பட்டிருக்கும்.