டிசம்பர் 1, சனி
ஸ்ரீவாஞ்சியம் சிவபெருமான் திருவீதியுலா. திருநாகேஸ்வரம் சிவபெருமான் புறப்பாடு. திருவண்ணாமலை சுப்பிரமணியர் தெப்ப உற்சவம்.
டிசம்பர் 2, ஞாயிறு
சங்கடஹர சதுர்த்தி. பத்ராசலம் ராமபிரான் புறப்பாடு. கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் சந்நதி எதிரில் உள்ள அனுமனுக்கு திருமஞ்சன சேவை.
டிசம்பர் 3, திங்கள்
திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருக்கடவூர் ஆகிய தலங்களில் ஆயிரத்தெட்டு சங்காபிஷேகம். திருநெல்வேலி நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி.
டிசம்பர் 4, செவ்வாய்
சுவாமிமலை முருகப்பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். ஸ்ரீவாஞ்சியம், திருநாகேஸ்வரம் ஆகிய தலங்களில் சிவபெருமான் புறப்பாடு.
டிசம்பர் 5, புதன்
திருநாகேஸ்வரம் சிவபெருமான் புறப்பாடு.
டிசம்பர் 6, வியாழன்
காலபைரவாஷ்டமி. வைக்கம் மகா தேவாஷ்டமி. ஸ்ரீவாஞ்சியம் சிவபெருமான் திருவீதியுலா. ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் புறப்பாடு.
டிசம்பர் 7, வெள்ளி
ராமேஸ்வரம் பர்வதவர்த்தினியம்மன் நவசக்திமண்டபம் எழுந்தருளி அப்பால் தங்கப் பல்லக்கில் புறப்பாடு.



