Pages

வாழ்வில் உயர எந்நாளும் சொல்வோம்


 


காலையில் எழுந்திருக்கும் போது:

அண்ணாமலை எம் அண்ணா போற்றிகண்ணார் அமுதக் கடலே போற்றி

குளிக்கும் போது:

சடையிடைக் கங்கை தரித்தாய் போற்றி

கோபுர தரிசனம் காணும் போது:

தென்னாடுடைய சிவனே போற்றிஎந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி

வீட்டைவிட்டு வெளியில் செல்லும் போது:

காவாய் கனகக் குன்றே போற்றிஆவா எந்தனக்கு அருளாய் போற்றி

நண்பரைக் காணும் போது:

தோழா போற்றி துணைவா போற்றி

கடை திறக்கும் போது:

வாழ்வே போற்றி என் வைப்பே போற்றி

நிலத்தில் அமரும் போது:

பாரிடை ஐந்தாய் பரந்தாய் போற்றி

நீர் அருந்தும் போது:

நீரிடை நான்காய் நிகழ்ந்தாய் போற்றி

அடுப்பு பற்ற வைக்கும் போது:

தீயிடை மூன்றாய்த் திகழ்ந்தாய் போற்றி

உணவு உண்ணும் போது:

தென்தில்லை மன்றினுள் ஆடி போற்றி
இன்றெனக்கு ஆரமுதம் ஆனாய் போற்றி

மனதில் அச்சம் ஏற்படும் போது:

அஞ்சேல் என்றிங்கு அருளாய் போற்றி

உறங்கும் போது:

ஆடக மதுரை அரசே போற்றி
கூடல் இலங்கு குருமணி போற்றி

நாமீயை விட நாமத்துக்கே ப்ராபாவம் ஜாஸ்தி

காலையில் துயிலெழும் போது:

'ஹரிர் ஹரி ஹரிர் ஹரி'என்று ஏழு தடவை சொல்ல வேண்டும்.

வெளியே புறப்பட்டுப் போகும் போது:

'கேசவா'என்று சொல்ல வேண்டும். 'கேசவா' என்று சொன்னால் இடர்கள் எல்லாம் கெடும்.

உணவு உட்கொள்ளும் போது:

'கோவிந்தா'என்று சொல்லிவிட்டுச் சாப்பிட வேண்டும்.

இரவு படுக்கச் செல்லும் போது:

'மாதவா'என்று கூற வேண்டும்.