ஆன்மிக
வழிகாட்டுதல் மட்டுமே இஸ்லாத்தின் நோக்கம் கிடையாது. அதையும் தாண்டி பல
விஷயங்களை இஸ்லாம் வலியுறுத்துகிறது. தண்ணீரை வீண் விரயம் செய்யக் கூடாது
என குர்ஆனில் வசனம் வருகிறது. இதற்கும் ஆன்மிக செயல்பாட்டுக்கும் சம்பந்தம்
இல்லை. ஆனால் இந்த வசனத்துக்கும் மனிதனின் பக்குவப்பட்ட செயல்களுக்கும்
சம்பந்தம் இருக்கிறது. மறுமை நாளில் இறைவன் கேட்கும் பல கேள்விகளில் ஒன்று,
உன் கல்வி பிறருக்கு எப்படி பயன்பட்டது? இதில் மார்க்க கல்வியை மட்டுமே
இறைவன் குறிப்பிடுகிறான் என நினைத்தால் அது தவறு. இந்த உலக தேவைகளை
நிறைவேற்றிக் கொள்ள நாம் கற்ற கல்வியையும் சேர்த்தே அந்த கேள்வியை இறைவன்
எழுப்புகிறான்.
அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கம் தருகிறார்கள். நீங்கள் கற்ற உலக கல்வியை உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் பயன்படும் வகையில் மட்டுமே வைத்துக் கொண்டு சந்தோஷமாக இருக்க நினைக்காதீர்கள். அந்த கல்வியை பிறருக்கும் கற்றுத் தாருங்கள். அந்த கல்வியால் மற்றவருக்கு நன்மை தரும்படியான செயலை செய்யுங்கள் என்கிறார். வட்டியை ஹராமாக (தடுக்கப்பட்டது) இறைவன் அறிவித்திருக்கிறான். இன்றைய வேகமான உலகில் ஒவ்வொருவரும் வெற்றி பெற ஓடிக் கொண்டிருக்கிறார்கள். வட்டியை பற்றியெல்லாம் யோசித்தால் ஆகாது என கூறுபவர்கள் உண்டு. வட்டியை ஏன் இறைவன் தடுத்தான் என்பதை பார்க்க வேண்டும்.
ஏழைகளை மேலும் ஏழைகளாக்கி அவர்களை சுரண்டும் கொடூரம்தான் வட்டி என இஸ்லாம் சாடுகிறது. பிறருக்கு உதவி செய்கிறேன் என கூறிக்கொண்டே அந்த நபருக்கு தீங்கானதையும் செய்தால் அதனால் அவர் சந்தோஷப்பட முடியுமா? கடனுக்கு வட்டி என்பது அதுபோன்ற செயல்தான் என்கிறார் நபி. வட்டி வாங்குவது, கொடுப்பது இரண்டையுமே இஸ்லாம் தடுக்கிறது. இன்றைய காலகட்டத்தில் வட்டி வட்டத்துக்குள் விழாமல்கூட ஒருவரால் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்க முடியும். ஜெயிக்க முடியும். அப்படி சந்தோஷமாக இருப்பவர்கள் நிறைய பேர் உள்ளனர். அதனால்தான், வட்டி இல்லாத வாழ்க்கை உங்களுக்கு நிம்மதி தரும் என இஸ்லாம் கூறுகிறது. இதிலும் ஆன்மிகத்தை தாண்டிய சமூகப் பார்வை இருப்பதை அறியலாம்.
தர்மம் செய்வது ஆன்மிக நாட்டத்தில் ஒரு பகுதிதான். தம்மால் தவறுகள் நிகழும்போதெல்லாம் இறைவனுக்கு பயந்து அதிகம் தர்மம் செய்கிறார்கள். அதிகம் தர்மம் செய்யுங்கள். அதனால் உங்கள் தவறுகள் மன்னிக்கப்படும் என நபிகள் கூறுகிறார். ஆனால் அல்லாஹ் கடமையாக்கிய ஜகாத், சாதாரண தர்மம் போல் கிடையாது. அதை கட்டாயமாக கொடுத்தே ஆக வேண்டும் என்பது இறைவனின் கட்டளை. உங்களிடம் ஒரு வருடத்தில் சேமிக்கப்பட்டு வைக்கப்பட்ட பணம், நகை (87 கிராமுக்கு மேல்), வெள்ளி இவைகள் மீது இரண்டரை சதவீதம் ஜகாத் கடமையாக்கப்பட்டுள்ளதாக இறைவன் குறிப்பிடுகிறான்.
இன்று தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்வதை பார்க¢கிறோம். பத்து வருடத்துக்கு முன்பு குறிப்பிட்ட விலையில் நாம் 15 பவுன் தங்கம் வாங்கியிருப்போம். அதை இன்றைய விலையில் இரண்டரை சதவீதம் ஜகாத்தாக கொடுக்க வேண்டும். ஜகாத்தை பணமாக கஷ்டத்தில் உள்ள உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் தர வேண்டும். ஜகாத் கொடுப்பதற்கான நகைகள் உங்களிடம் இருந்தும் பணம் இல்லையென்றால் அந்த நகையை விற்றாவது ஜகாத் பணத்தை கொடுக்க வேண்டும் என்பது அல்லாஹ்வின் உத்தரவாகும். அல்லாஹ் இவ்வளவு முக்கியத்துவம் தரும் ஜகாத்துக்கு பின்னால் இருப்பதுகூட, சமூகத்தில் நிலவும் ஏழ்மை நிலை குறைய வேண்டும் என்ற நோக்கம்தான்.
இதேபோல் உடல் நலன் பேணும் விஷயத்திலும் பல கட்டுப்பாடுகளை விதித்திருக்கிறது இஸ்லாம். ஹலால் செய்யப்பட்ட ஆடு, மாடு, கோழி இறைச்சிகளையே சாப்பிட வேண்டும் என முஸ்லிம்களுக்கு கட்டளையிடப்பட்டுள்ளது. ஹலால் என்பது ஆட்டை அறுப்பதற்கு முன்பு துவா (பிரார்த்தனை) செய்துவிட்டு, ஆட்டின் கழுத்தை முழுமையாக அல்லாமல் பாதியாக அறுத்துவிடுவார்கள். இதனால் அதன் ரத்தம் முழுவதும் வெளியேறிவிடும். அதன்பிறகே அந்த ஆட்டு இறைச்சியை உணவுக்காக பயன்படுத்துவார்கள். இதுதான் ஹலால். ஆட்டு ரத்தத்துடன் அதில் இருக்கும் கிருமிகளும் வெளியேறுவதால் நோய் எதுவும் உண்டாகாது என்பதால்தான் ஹலால் உணவு கடமையாக்கப்பட்டுள்ளது.
கை, கால் விரல் நகங்கள் வளர்ந்திருந்தால் தொழுகைகூட முழுமை பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம், சுகாதார பேணுதல்தான். மீசை முடி உதட்டில் படாதபடி வெட்டிக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. காரணம், ஏதேனும் பானம் குடிக்கும்போது மீசை அதில் பட்டால் நோய்கள் உண்டாகும் என்பதுதான். ஆண் குழந்தைகளுக்கு சுன்னத் கடமையாக்கப்பட்டதும் உடல் நலனுக்காகத்தான். இப்படி மனிதனை பக்குவப்படுத்துதல், சுகாதாரம் பேணுதல் என இரண்டு விஷயத்திலும் தனித்தனியே பல்வேறு கட்டளைகளை விதித்துள்ளது இஸ்லாம். இந்த இரண்டையும் ஒன்றாக சேர்க்கும் பாலமாக ரம்ஜான் மாத நோன்பை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான்.
நோன்பு இருக்கும்போது உணவை மட்டுமல்ல, பொய் மற்றும் புறம் பேசுதல், மோசடி செய்வது, கெட்டதை பார்ப்பது, இல்லறத்தில் ஈடுபடுவது உள்ளிட்டவற்றை விலக்கி வைக்கிறோம். இதனால் ரம்ஜான் இல்லாத பிற மாதங்களுக்கு இது பயிற்சி களமாக மாறி மனிதனை பக்குவப்படுத்துகிறது. ஏழையின் பசியை உணர வேண்டும் என்பதற்காக நோன்பு நமக்கு கடமையாக்கப்படவில்லை. அப்படி இருந்தால் ஏழைகளுக்கு நோன்பில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டிருக்கும். மனிதன் தன்னைத்தானே வருத்திக் கொள்வதில் இறைவனுக்கு விருப்பமா என்றால் அதுவும் கிடையாது. நபி தோழரான அப்துல்லாஹ் இப்னு அமர், நாள் கணக்கின்றி நோன்பு வைத்து வந்தார். இதை அறிந்த நபிகள் நாயகம், ரம்ஜான் மாதத்தில் நோன்பு வைப்பது கடமை.
மற்றபடி நாள், மாதக் கணக்கில் நோன்பு வைக்க வேண்டாம். உங்கள் உடல் நலத்தையும் குடும்பத்தையும் கவனிப்பது அவசியம் என்றார். அதனால் நோன்பின் நோக்கம் மனிதன் பக்குவப்பட வேண்டும் என்பதுதான். அதே நேரம், நோன்பு வைப்பதால் உடலில் உண்டாகும் மாற்றங்கள் நமது ஆரோக்கிய வாழ்வுக்கு நலம் தருபவை என்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது. மேற்சொன்ன விஷயங்களின் இணைப்பு பாலமான ரம்ஜான் நோன்பை கடைபிடிப்பதால் அல்லாஹ்வின் நல்லடியாராக நாம் திகழ்ந்து, அனைத்து நன்மைகளையும் பெற முடியும்.