டிசம்பர் 15, சனி
ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் ராஜாங்கசேவை. ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருஅத்யயன மண்டபம் எழுந்தருளி திருயப்பாவாடை உற்சவம் கண்டருளல். சிறுபுலி நாயனார் குருபூஜை. சென்னை-குன்றத்தூர் காத்யாயனி அம்மன் கோயிலில் ரம்பா திருதியை விழாவையொட்டி அம் மன் தங்க அலங்காரத்தில் காட்சியருளல்.
டிசம்பர் 16, ஞாயிறு
மார்கழி மாதப் பிறப்பு. சதுர்த்தி விரதம். திருவோண விரதம். சகல விஷ்ணு ஆலயங்களிலும் திருப்பள்ளி எழுச்சி பூஜை ஆரம்பம். கரூர் ரங்கநாதர் பகற்பத்து உற்சவ சேவை. சென்னை-தி-நகர், வடக்கு போக்ரோடு, 11பி, காந்திமதி கல்யாண மண்டபத்தில் பூர்ணா புஷ்க லாம்பாள் சமேத தர்மசாஸ்தா திருக்கல்யாண உற்சவம்.
டிசம்பர் 17, திங்கள்
ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் வீணை மோகினி திருக்கோலம். திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் பகற்பத்து உற்சவ சேவை.
டிசம்பர் 18, செவ்வாய்
சஷ்டி விரதம். திருமாலிருஞ்சோலை கள்ளழகர் பகற்பத்து உற்சவ சேவை. காஞ்சிபுரம் வரதராஜர் திருமொழி உற்சவ சேவை.
டிசம்பர் 19, புதன்
ஸ்ரீரங்கம் நம்பெருமாள் அர்ஜுனன் மண்டபம் எழுந்தருளி திருப்பாவாடை உற்சவம் கண்டருளல். திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் திருஅத்யன உற்சவம் கண்டருளல்.
டிசம்பர் 20, வியாழன்
ஆழ்வார் திருநகரி நம்மாழ்வார் கஜேந்திர மோட்ச லீலை. நாச்சியார்கோவில் எம்பெருமான் கல்கருட சேவை. திருக்குற்றாலம் குற்றாலநாதர் வெள்ளிச்
சப்பரத்தில் பவனி.
டிசம்பர் 21, வெள்ளி
ஆவுடையார்கோவில் மாணிக்கவாசகர் திரிபுர சம்ஹார லீலை; இரவு கைலாச வாகனத்தில் திருவீதி உலா. சிதம்பரம் சிவகாமி சமேத நடராஜர் திருவாதிரை உற்சவத்தை முன்னிட்டு தங்க சூரிய பிரபை வாகனத்தில் காட்சியருளல்.



