Pages

மயிலையில் மார்கழி இசை திருவிழா


பால கலசாகரம் டிரஸ்ட் மற்றும் மங்கள்தீப் அகர்பத்தி நிறுவனம் சார்பில் மயிலாப்பூர் பாரதீய வித்யா பவனில் 5வது மார்கழி இசை திருவிழா கடந்த 14ல் தொடங்கி நடைபெற்று வருகிறது. சிறப்பு விருந்தினராக நித்யஸ்ரீ மகாதேவன் மற்றும் பாரதீய வித்யா பவன் சென்னை கேந்திரா சேர்மன் சபாரத்தினம் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ராம்ஜி இசை மழலை அமைப்பை சேர்ந்த குழந்தைகள் பங்கேற்றுள்ளனர். தொடக்க நிகழ்ச்சியில் பிருந்தா மணிவாசகம், கல்பலதிகா ரவிசங்கர் பாடல் பாடினர். கவுசிக் சிவராமகிருஷ்ணன் வயலினும், பிரசாந்த் வீர ராகவன் மிருதங்கம் மற்றும் கடம் வாசித்தனர்.

நிகழ்ச்சிகள் விபரம்:

இன்று மாலை 4.30-6 மணி வரை ப்ரசோதன், 6-8 வரை கிருத்திகா நடராஜன், இரவு 8-9 மணி வரை ஷ்யாம் பிரசாத் ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடைபெறும்.

17ம் தேதி மாலை 4.30-6 மணி வரை சாய் விக்னேஷ், 6-8 வரை விக்னேஷ்வர், இரவு 8-9 மணி வரை கீர்த்தனா நரசிம்மன் பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

18ல் மாலை 4.30-6 வரை சஹானா வாசுதேவன், 6-8 மணி வரை அபிலாஷ், இரவு 8-9 மணி வரை சாய் ஸ்ருதி ஆகியோரின் இன்னிசை நிகழ்ச்சி நடைபெறுகிறது.

19ம் தேதி மாலை 4.30-6 வரை பதங்கி சகோதரர்கள், மாலை 6-8 வரை அபூர்வா மற்றும் இரவு 8-9 மணி வரை ஜனனி ஸ்ரீகாந்த் பங்கேற்கும் நிகழ்ச்சி நடைபெறும்.

20ல் மாலை 4.30-6 மணி வரை ஜனனி.பி.ஐயர், 6-8 வரை டெல்லி.ஜி. சவுமியா, இரவு 8-9 மணி வரை நிகிதா ஆகியோரின் இசை நிகழ்ச்சி நடக்கிறது.

முன்னதாக கடந்த 14ம் தேதி சங்கர் வைத்தியநாதன், தீக்ஷிதா, ஸ்ரீசுருதி மற்றும் 15ல் அஞ்சனா, அஞ்சனி, ரக்ஷா பங்கேற்ற இசை நிகழ்ச்சி நடைபெற்றது.