தஞ்சை
மாவட்டம், திருவிடைமருதூர் வட்டத்தில் உள்ளது, திருலோக்கி. ராஜராஜ சோழனின்
மனைவி திரைலோக்கிய மாதேவியாரின் பெயரால் திருலோக்கிய மாதேவியார் சதுர்வேதி
மங்கலம் என அழைக்கப்பட்ட இந்த ஊர், இன்று திருலோக்கியாகி விட்டது. இந்த
ஊரில் அகிலாண்டேஸ்வரி சமேத சுந்தரேஸ்வர பெருமான் கோயில் கொண்டருள்கிறார்.
இந்த இறைவன் மீது கருவூர்த்தேவர் எனும் சித்தர் 11 பாடல்களை பாடியுள்ளார்.
தன் பாவங்கள் தீர குருபகவான் இந்த ஈசனை வணங்கி நலம் பெற்றுள்ளார். ஈசனின்
நெற்றிக் கண் நெருப்பால் சாம்பலான மன்மதனை, இத்தல ஈசனை வணங்கி ரதிதேவி
உயிரோடு மீட்டதாக தலபுராணம் சொல்கிறது. இத்தலத்திற்கு
திருப்பணிகளும்கும்பாபிஷேகமும் செய்ய கருவூர்த்தேவர் அறக்கட்டளையும்
சிவபக்தர்களும் ஈடுபட்டுள்ளார்கள். இந்த திருப்பணியில் நீங்களும்
பங்கெடுக்க, செயல் அலுவலர், சுந்தரேஸ்வரர் சுவாமி திருக்கோயில், திருலோக்கி
அஞ்சல், துகிலி (வழி), தஞ்சை மாவட்டம்- 609804 என்ற முகவரியிலும்
0435-2456696, 9443714384 என்ற தொலைபேசி
எண்களிலும் தொடர்பு
கொள்ளலாம்.
ஆலத்தூர் எறும்பீஸ்வரர்
அசுரர்கள் கண்ணில் சிக்காமல், அவர்கள் தொந்தரவுக்கு ஆளாகாமல், அரனை வணங்க முடிவு செய்த தேவர்களும் ரிஷிகளும் எறும்பாக மாறி ஈசனை துதித்தார்கள். இவர்களின் பத்தியால் மனம் கனிந்த ஈசன் அவர்களுக்குக் காட்சி தந்து அருளினார். எறும்புகளுக்கு அருளியதால், எறும்பீஸ்வரர் என்றானார். 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தக் கோயில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 11 ஆலத்தூரில் அமைந்திருக்கிறது. திருக்கோயில் திருப்பணி ஆரம்பிக்கப்பட்டு மிகச் சிறப்பாக நடந்து வருகிறது. இதில் பங்கெடுக்க விரும்புவோர், சௌந்தர்ய நாயகி சமேத எறும்பீஸ்வரர் ஆலய திருப்பணிக்குழு, 11.ஆலத்தூர், பேரளம், குடவாசல் தாலுகா, திருவாரூர் மாவட்டம்-609405 என்கிற முகவரியிலும் 9698949889, 9942257597, 7373199179 ஆகிய தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.
மேல்பரிக்கல்பட்டு முத்தாலம்மன்
புதுச்சேரி, மேல்பரிக்கல்பட்டில் இருக்கிறது முத்தாலம்மன் திருக்கோயில். 200 ஆண்டுகள் பழமைவாய்ந்தது. 70 ஆண்டு காலமாக பராமரிப்பில்லாமல் சிதிலமடைந்து இருந்தது. சக்தி வாய்ந்த இந்த அன்னையின் திருவாக்குபடி கோயிலை திருப்பணி செய்த ஊர் மக்கள் 4.5.2012 அன்று கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த இருக்கிறார்கள். இந்த கும்பாபிஷேக திருப்பணிக்கு உதவி செய்ய விரும்பும் அன்பர்கள் 9443080931 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
ஆலயம் பொலிவுற திகழ வைப்போம்!
உங்கள் ஊரிலுள்ள பழமையான கோயில் எதுவும் சிதிலமடைந்து கவனிக்கப்படாமல் இருக்கிறதா? அல்லது உங்களது சீரிய முயற்சியால் சீர் பெற்று கும்பாபிஷேகம் நடத்தப்பட தயாராக இருக்கிறதா? இந்தத் தகவல்களை, புகைப்படங்கள் மற்றும் முழு விவரங்களுடன் எழுதி அனுப்புங்கள். குறிப்பாக கும்பாபிஷேக விவரத்தை, உரிய அழைப்பிதழ் மற்றும் ஆதாரபூர்வமான தகவல்களுடன், ஒரு மாதத்திற்கு முன்பாக அனுப்பி வையுங்கள். திருப்பணிகளில் பங்கு பெற அனைவரையும் அழைப்போம். நமக்கு நல்வாழ்வளித்திருக்கும் இறைவனுக்கு நன்றிக் கடன் செலுத்துவோம்.
முகவரி: ஆசிரியர்,
தினகரன்-ஆன்மிக மலர்,
229, கச்சேரி சாலை, மயிலாப்பூர்,
சென்னை-600 004.
விண்ணவாடி அருணாசலேஸ்வரர்
நினைத்த மாத்திரத்திலேயே முக்தி தரும் அருணாசலேஸ்வரர் அருளும் திருவண்ணாமலை மாவட்டத்தில், செய்யாறு வட்டம், விண்ணவாடி கிராமத்தில் அருள்கிறார், அகிலாண்டேஸ்வரி சமேத அருணாசலேஸ்வரர். இவர் கோயில் தகுந்த பராமரிப்பில்லாமல் சிதிலமடைந்து கிடந்த நிலையில் ஊர் மக்களின் முயற்சியால் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணி தொடங்கியுள்ளது. திருப்பணி சிறப்பாக நடந்தேற, பொருளாகவும் நன்கொடையளிக்கலாம் என திருப்பணி குழுவினர் தெரிவிக்கிறார்கள். தொடர்புக்கு: 9994057870.
அதிராம்பட்டினம் அபயவரதேஸ்வரர்
தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் இருக்கிறது அதிராம்பட்டினம். இங்கு கோயில் கொண்டருள்கிறார்கள் சுந்தரநாயகி அம்மனும் அபயவரதேஸ்வரரும். திருவாதிரை நட்சத்திர பரிகாரத் தலம் இது. இத்தல ஈசனை வணங்கினால் முந்தைய ஜென்ம பாவங்கள் விலகும். பழமை வாய்ந்த இந்த கோயிலை சீர் செய்து, 1.6.2012 அன்று கும்பாபிஷேகம் செய்ய திட்டமிட்டுள்ளார்கள். இந்தத் திருப்பணியில் பங்கெடுக்க விரும்புவோர் 9600271680, 9944082313, 9865648222 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.