Pages

மங்கலம்பேட்டை ஓட்டைப் பிள்ளையார்


வனதுர்க்கையான மங்களநாயகியம்மன் கோயில் கொண்டதால் இந்த ஊர் மங்கலம்பேட்டை என்றானது. இங்கே வள்ளலார் தெருவில் ஒரு விநாயகர் கோயில் இருக்கிறது. அதை ஓட்டைப் பிள்ளையார் என்று அழைக்கிறார்கள். வெட்டவெளியில் இருந்த இந்த பிள்ளையார் ஒரு மகானால் ஆராதிக்கப்பட்டவர்; அந்த மகான் இந்த இடத்திலேயே சமாதியாகியுள்ளார். கல்யாண வரம், வியாபார விருத்தி பெறவும் இவரை வழிபடுகிறார்கள். இவருக்கு மூன்று நிலை ராஜகோபுரத்தோடு கோயில் கட்ட பக்தர்கள் முடிவு செய்து, திருப்பணி ஆரம்பித்திருக்கிறார்கள். சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலய திருப்பணியில் நீங்களும் பங்கெடுக்க, நிர்வாகி, ஓட்டப்பிள்ளையார் திருக்கோயில் திருப்பணிக்குழு, மங்கலம்பேட்டை அஞ்சல், விருத்தாசலம் தாலுகா, கடலூர் மாவட்டம்-606104 என்ற முகவரியிலும், 8056047713 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.