கோவை-மேட்டுப்பாளையம்
சாலையில் 28 கி.மீ. தொலைவில் உள்ள காரமடையிலிருந்து 6.கி.மீ. தொலைவில்
குருந்தமலையை தரிசிக்கலாம். முருகப்பிரான் குழந்தை வேலாயுதசாமியாக, சற்றே
பெரிய குழந்தையாக, நான்கடி உயரத்தில், சிரசில் ருத்ராட்ச மாலை
பொறிக்கப்பட்டு காணப்படுகிறார். கையில் தண்டம், மலர நோக்கும் அகன்ற
விழிகளோடு எழுந்தருளியுள்ளார். இக்கோயிலில் அனுமந்த தீர்த்தம், கஜபுஷ்கரணி,
மயில் சுனை, ஆறுமுகச்சுனை, காணாச்சுனை ஆகிய தீர்த்தங்கள் உள்ளன. சுமார்
750 ஆண்டுகளுக்கு முன்னர் இங்கு வணிக சமுதாயத்தைச் சேர்ந்த ஒருவரது மிளகு
மூட்டைகளை தவிட்டு மூட்டைகளாக மாற்றி மீண்டும் மிளகு மூட்டைகளாக மாற்றி
திருவிளையாடல் புரிந்திருக்கிறான், முருகன். மார்ச் 22ந் தேதியன்று சூரிய
ஒளியானது இந்த இறைவனது திருப்பாதத்தில் தொடங்கி மார்பு வரையிலும் படர்ந்து
சென்று ஒளிப்பிரகாசமாய் பூஜை நிகழ்த்துகிறது.



