Pages

10. கோள்கள் உபக் கோள்களை உருவாக்கும் நிலை


இப்பொழுது, நமது சூரியக்குடும்பத்தில் இந்தப் பிரபஞ்சத்திற்குள் எத்தனை மாற்றங்களாகின்றதோ, ஒவ்வொரு கோள்களுக்குள்ளும் எந்தெந்த நிலைகள் மாறிக் கொண்டுள்ளது? அந்தக் கோள்கள், தனது உபக் கொள்களை எப்படி வளர்த்துக் கொண்டுள்ளது? உபக் கொள்கள் எப்படி வளர்கிறது? 



அதன் உணர்வுகள் எதன் ஈர்ப்பு வட்டத்திலோ, வியாழன், செவ்வாய், இதைப் போன்று, சனிக் கோள் போன்ற உணர்வுகள் ஒவ்வொன்றும் உபக்கோள்களை அமைத்து, தனது உணர்வின் தன்மையை எப்படி எடுத்துக் கொள்கிறது என்று பாருங்கள்.
11. பூமி தன் சத்தைக் கவரும் நிலை


இவையனைத்தும் கடந்து கொண்டு வரப்படும் பொழுது, நமது பூமி, துருவத்தின் வாயிலாக பலவிதமான வண்ணங்களைத் தனக்குள் சேர்த்து, அதன் உணர்வினை வடிகட்டி, ஜீவ சத்துடன் எப்படிப் பெறுகின்றது என்பதனை, நம் பூமியின் உணர்வின் தன்மையை, நீங்கள் அறிந்து பார்க்கலாம்.


எவ்வகையில், எத்திசையில் ஆனாலும் கூட, இந்த உணர்வுகள் சூரியனைக் கடந்து வரும்போதும், சூரியனை விட்டு, மற்ற கோள்கள் கடந்து செல்லும் இந்தப் பாதையில், நமது பூமி கவர்வது, நமது பூமிக்குள் பலவிதமான மாற்றங்களை உருவாக்குகின்றது.


12. வியாழன் கோளில் உயிரணுக்களின் தோற்றம்
இப்பொழுது, கார்த்திகை நட்சத்திரத்திலிருந்து வரும் ஒரு துகளும், ரேவதி நட்சத்திரத்திலிருந்து வரும் ஒரு துகளும், எப்படி அவை பரவி வருகின்றதோ, எதிலும் மோதாதபடி, வியாழன் ஈர்ப்பு வட்டத்திற்குள், எப்படி நுழைகிறது? என்பதைப் பாருங்கள்.


இந்த 27 நட்சத்திர உணர்வு கொண்டபின், இதன் ஈர்ப்பு வட்டத்திற்குள் மோதலாகி வெடித்திடாது, உணர்வின் துடிப்பாக, எப்படி ஒரு அணுத்தன்மை உருவாகின்றது? என்பதைப் பாருங்கள்.


மற்ற ஜீவ அணுக்கள், இதை எப்படி ஜீவ அணுவாக மாறுகின்றது? ஆக, மோதல், மற்ற மின் கதிர்கள் மோதி, வியாழன் ஈர்ப்பு வட்டத்திற்குள் நுழைந்து, வெளிச் செல்லும் பொழுது, மோதிய உணர்வுக்கொப்ப, ஒரு புதுவிதமான உணர்வின் ரூபம் கொண்டு, வெளியிலே எப்படிச் செல்கிறது?


ஆனால், இந்த உயிரணுவின் தன்மை கொண்டு, இரண்டு மோதலின் உணர்வின் கலர்கள், அதாவது ரேவதி நட்சத்திரத்திலிருந்து வரக்கூடிய உணர்வும், இதைப் போன்ற மற்ற பெண்பால் என்ற நட்சத்திரங்கள் வருவது, இவை சந்தர்ப்பத்தால், ஈர்ப்பு வட்டத்தில் வந்தபின், இந்த மோதலில் பல வண்ணங்கள் தோன்றி, பலபல உணர்ச்சிகளை, எப்படி ஜீவ அணுக்களாக மாறுகிறது என்பதை, “இந்த வியாழன் கூட்டமைப்புக்குள் என்ன நடக்கிறது?” என்பதைப் பாருங்கள்.




இப்பொழுது மின்னல்கள் ஒன்றோடொன்று மோதும் பொழுது, மின் ஒளிகள் எப்படி ஆகின்றதோ, இதைப் போல வியாழன் கோளுக்குள் வந்தபின், இந்த இரண்டு நட்சத்திரத்தின் உணர்வுகள், இரண்டாகச் சேர்த்துக் கொண்டபின், அதன் உணர்வுகள் மின் கதிர்கள் எப்படிப் பாய்ச்சுகிறது?


அது எப்படி ஒரு இயக்க உணர்வாக வருகிறதென்று, அதாவது, மின்மினிப் பூச்சி எப்படி இருக்கிறதோ, இதைப் போல, மின் அணுத் தன்மையை அடைகின்றது.


நட்சத்திரச் சேர்க்கையில், எந்தப் பெண்பால் என்ற நிலைகள் நட்சத்திரத்தின் உணர்வு அதிகமாகின்றதோ, ஆண்பால் என்ற நட்சத்திரத்தின் உணர்வு சேர்க்கப்படும் பொழுது, ஆண்பால் என்ற நட்சத்திரத்தின் தன்மை சிறுத்தால், பெண்பால் எனற நட்சத்திரத் தன்மையானல், அதன் உணர்வுக்கொப்ப, அதன் உணர்வைக் கவர்ந்து, அதைப் போல அணுக்களை உருவாக்கும், பெருக்கும் தன்மை வருகின்றது.


அதாவது, பெண்பால் நட்சத்திரத்தின் தன்மையானால், ஆண்பால் நட்சத்திரத்தின் ஆனால், இந்தப் பெண் பால் நட்சத்திரம் சிறுத்திருந்தால், இந்த உணர்வின் தன்மை ஒவ்வொரு அணுவிற்கும், ஒரு உணர்வின் தன்மையை அதே அணுவாக மாற்றும் தன்மைகள் எப்படி அடைகிறது என்பதை நீங்கள் பாருங்கள்.
13. உயிரணுக்கள் மற்ற கோள்களில் ரூபம் பெறும் நிலை
இதையெல்லாம் எதன் உணர்வு பெற்றதோ, இதெல்லாம் “கிரேதாயுகம்”. வியாழன் கோளில் கருவாகி, உயிரணுக்கள் தோன்றியபின், இந்தப் பிரபஞ்சத்தில் சுழலும் பொழுது, எந்தெந்தக் கோள்கள் அந்தத் துருவப்பகுதியில் செல்லுகின்றதோ, அதன் ஈர்ப்பு வட்டத்தில், அந்தக் கோளுக்குள், இந்த உயிரணுக்கள் எப்படி நுழைந்தது?


எந்தக் கோளுக்குள் நுழைகின்றதோ, அதன் உணர்வின் தன்மையை இந்த உயிரணு, அந்தக் காந்தத்தால், அந்த உயிரின் துடிப்பால், ஈர்க்கப்படும் பொழுது, “கிரேதா”. அது அந்த உணர்வின் தன்மையைப் பெற்றபின், அந்த உடலின் அமைப்பு எப்படி மாறுகின்றது?


அதாவது, வேதனைப்படுவோரின் உணர்வுகளை நுகரும் பொழுது, நமக்குத் தலையில் எப்படிப் பேன் வருகின்றதோ, அது எவ்வளவு விகாரமாக அந்த உணர்வின் தன்மை தோற்றுவிக்கின்றதோ, இதைப் போல, மற்ற கோள்களில், இதை நுகரப்படும் பொழுது, ஒவ்வொரு கோளுக்குத்தக்க, அந்த விஷத்தின் தன்மையை நுகர்ந்தபின், சிறிதளவே அணுவாக மாறும். விஷம் கொண்ட அணுக்களாக அது எப்படி மாறுகின்றது?


ஒவ்வொரு கோளும் அவ்வாறு கவர்ந்து கொண்டபின், அந்தந்தக் கோளில் உருவான உணர்வுகள், இந்த உயிரணுக்கள் அதிலே பட்டபின், இந்த உணர்வின் தன்மை கொண்டு, அங்கே எவ்வாறு ரூபமடைகின்றது?


பல நட்சத்திரங்கள் மின் கதிர்களாகப் பாய்ச்சப்படும் பொழுது, அதிலிருந்து ஒளிக்கற்றைகளை, ஒவ்வொரு கோளும் எப்படிக் கவர்கின்றது? அந்த அணுக்களானபின், அந்த அணுக்களுக்குள், இந்த உடலின் உணர்வு பெற்றபின், “திரேதா”, அந்த உணர்ச்சியின் எண்ணங்கள் தோன்றியபின், அணுக்கள் எப்படி நகர்ந்து செல்கின்றது? தன் உணவுக்காகத் தேடி, எப்படிச் செல்கின்றது?


“கிரேதாயுகம்” இருந்த இடத்திலிருந்து கவர்கின்றது. “திரேதாயுகத்தில்” தன் உணர்வின் தன்மை எங்கே இருக்கின்றதோ, அதை நாடி எப்படி அந்த அணுக்கள் மற்ற கோள்களிலும் சரி, மற்றவைகளிலும் அணுக்கள் தேடிச் செல்கின்றது.
14. முதன் முதலில் கடலில் உயிரினங்கள் தோன்றும் நிலை
நமது பூமி கவர்ந்து கொண்டபின், கடல்களிலே முதலிலே அந்த மின்னல்கள் தாக்கினால், “POISON” ஆக மாறுகின்றது. இதைப் போல, கடலுக்குள் ஈர்க்கப்பட்ட அணுக்கள், முதலில் மண்ணிலே அந்த கடல் உப்புச் சத்திற்குள் அது கலந்தபின், அதன் உணர்வின் மணமாகும் பொழுது, “சங்காக” மற்றவைகளாக எப்படி மாறுகின்றது?


அந்த உணர்வு மறைந்தபின், உயிரணு வெளிவந்தபின், தாவர இனத்தின் உணர்வை, எப்படி உணவாக உட்கொள்கின்றது? அது மீன் இனமாக எப்படி உருவாகின்றது?


இவையெல்லாம் அந்த உடலின் உணர்வுக்குத்தக்க, கிரேதாயுகமாகி, நுகர்ந்த உணர்வு திரேதாயுகத்தில் வந்து, அந்த வண்ணங்கள் எப்படிச் சேர்கின்றது? உடலுக்குள் உருவாகும் உணர்வின் மாற்றங்கள் அதுதான், திரேதாயுகம்.
15. சனிக் கோளின் செயல்கள்
சூரியன் எப்படித் தனது காந்தப் புலனால் கவர்கின்றதோ, இதைப் போல, தன் நீரின் சக்தியை, சனிக் கோள் எப்படி பூமியிலிருந்து கவர்கின்றதென்ற நிலையும், கடல் நீர் மட்டத்தில் படரப்படும் பொழுது, மேகங்கள் எப்படி நீரை உறிஞ்சுகிறதென்று, சுழல் நிலைகள் (புயல்) எப்படி வருகிறதென்ற நிலையும், இந்தக் காற்றின் வீச்சின் அலைகளை, அந்தக் கடல் சுழல் காற்றுகள் எப்படி வீசுகிறதென்று, உருவாகிறதென்ற நிலையை, இந்த உணர்வால் நீங்கள் அறிந்து கொள்ளுங்கள்.




அதை நீங்கள் உற்றுப் பார்க்கும் பொழுது, உங்களுக்குள் குளிர் எப்படி வருகிறதென்று பாருங்கள். நமது பூமியில் உறிஞ்சுவது போலவே, இப்பொழுது மற்ற கோள்களின் தன்மையையும் அது கவரும். அது தூசிப் புயலாக மாறும்.


இப்பொழுது, வான் மண்டலத்தில், மற்ற கோள்களில் சனிக் கோள் கவரும் பொழுது, அது தூசி மண்டலங்களாக எப்படி மாறுகிறதென்பதைப் பாருங்கள்.

கோள்களில் அனைத்தும், தூசிப்படலங்கள் பரவிக் கொண்டிருக்கும். ஆனால், அந்த சனிக் கோளின் தன்மை, நமது பூமிக்குள் வரும் பொழுது, நீர் மண்டலங்களாக மேலே இழுத்துச் செல்வதைக் காணலாம்.