சுழலும் வேகத்தில், தன் மேல் பாயும் மற்ற உணர்வுகளை எப்படிக் கவர்ந்து, அது
உடலிலே பரப்புகின்றது? எத்தனையோ விதமான வண்ணங்களை அது போகும் பாதையில்
கிடைக்கின்றதோ, அதையெல்லாம் தன் மேற்பரப்பில் எப்படிப் பரவுகின்றது?
அது தன்னிச்சையாகச் சுழன்று, வெப்பமும், தன் ஈர்ப்பின் தன்மை கொண்டு ஒரு
கோள் என்ற முழுமையடைந்து, சீவலிங்கம் என்ற நிலையை அது அடையும் தன்மையை,
நீங்கள் இப்பொழுது, அந்த உணர்வின் தன்மையால் அறியலாம்.
ஏனென்றால், இத்தகைய நிலையைப் பெற்றபின் தான், நம் உடலுக்குள், இந்த உடலின்
உணர்வு பெற்றது. பிரித்துப் பார்க்கும் பொழுது, இந்த உணர்வுகள் எப்படி
உருவானது? நமக்குள் எப்படி உருப்பெற்றது? உருவானது? எப்படி மனிதனானோம்?
என்ற உண்மையின் இயக்கத்தை, இதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
உங்களுக்குள் இருக்கும் உணர்வுதான், ஆதியில் உருவான உணர்வுடன் ஒன்றித்தான்
வருகின்றது. சிறிதாக ஒரு பரம் என்ற நிலையிலிருந்து, ஒரு வளர்ச்சியின்
தன்மை பரிணாமம் வளர்கின்றது. சிறு உருண்டையாக இருந்து, அது வளர்ச்சியில்
எப்படி வளர்கின்றது? என்பதை, அந்த வளரும் தன்மையை நீங்கள் உணரலாம்.
வெறும் கோளாக இருப்பது, பல வண்ணங்களாக அந்தக் கோளின் அமைப்பு மாறுகின்றது.
கருமையாக இருந்தது, கரு நீலமாக மாறுகின்றது. கரும் பச்சையாக மாறி மாறி, பல
உணர்வுகள் மாறுகின்றது.
நாம் எப்படி, ஒரு நெருப்பை வைத்தால்,
அது வேக வைக்கும் பொழுது, அந்த உலோகத்தில் பலவிதமான வண்ணங்கள்
தோன்றுகின்றதோ, இதைப்போல அந்தக் கோளின் உணர்விலிருந்து, வெளிப்படும்
உணர்வுகளை, நீங்கள் உணரலாம்.
8. சூரியக் குடும்பம் உருவாகும் நிலை
அந்தக் கோள் பெரும் கொதிகலனாக மாறி, அதிலிருந்து சிதறுண்ட
உணர்வுகள், இது ஓடும் பாதையில் வெளிவந்து, அது உராயும் தன்மையை, இதன்
ஈர்ப்பு வட்டடத்தில் வருவதைக் காணலாம்.
எந்தெந்த வண்ணத்தைக்
கொண்டு வருகின்றதோ, அதன் உணர்வின் தன்மை கொண்டு, அங்கே ஒரு பந்து போன்று,
இயக்கத்தில் வருகின்றது. எது இதனுடைய கொதிகலானாகி வெளிப்படுத்தியதோ, அது
இதனுடன் வரப்படும் பொழுது, அத்தகைய உணர்வைக் கவர்வதையும், இதைப் போல
ஒவ்வொன்றும் வெளிவரும் உணர்வுகள், இப்படி வெளி வரும் உணர்வுகள் முதலிலே
வந்துவிடும்.
இரண்டாவது வந்ததும், மூன்றாவது அடுக்கில்
வரப்படும் பொழுது, வரிசைப்படுத்தி, அதன் மேல் வரிசயில் கூட்டி, அதனுடைய
உணர்வுகள் அடுக்கடுக்காக வருவதைக் காணலாம்.
இதன ஈர்ப்பு வட்டத்தில் வளரப்படும் பொழுது, ஒன்று பின் தங்கியும், ஒன்று
முன்னாலேயும், இதைப் போல, ஒன்று வேகத் தொடர் கொண்டு, அது சுழன்று கொண்டு
வருவதைப் பார்க்கலாம்.
இப்படி ஒரு வட்ட வடிவாகின்றது. இந்தச்
சுழற்சியின் மையத்தில் சிவப்பின் நிலை கொண்ட ஒரு சுழல்வட்டம் தெரியும்.
அதுதான் நட்சத்திரம். சூரியனாக மாறும் தன்மை. இது 27 விதமான நிலைகள்,
அவ்வப் பொழுது கொதித்து வெளிவரும் உணர்வுகள், ஒரு ஈர்ப்பு வட்டத்தில் ஒரு
வளையம் போன்று ஆகின்றது.
இப்பொழுது, நாம் பந்தைச் சுற்றும்
பொழுது, நடு மையத்தில் எப்படி இருக்கின்றது? அதைப் போல, அந்தச் சுழல்
வட்டத்தின் மையம் கொள்கின்றது.
9. பிரபஞ்சத்திற்குள் நடக்கும் நிகழ்ச்சிகள்
இப்பொழுது 27 நட்சத்திரங்களும் முழுமையடைந்து, தனது பால்வெளி மண்டலங்களாக
மாற்றி, அது உமிழ்த்தும் உணர்வை, தான் உணவாக எடுத்துக் கொள்ளும் சூரியன்,
தான் கவரும் பொழுது, இடைவெளியில் மோதியபின், இந்த விதவிதமான, வித்தியாசமான
உணர்வலைகள் பரவுவதையும், பார்க்கலாம்.
அதன் வழியில், இந்த
சூரியனில் இருந்து வரக்கூடிய அமிலங்களும், இந்த உணர்வுகள் பட்டு, இதனுடைய
ஈர்ப்பு வட்டத்தில் வரும் ஒளிக்கற்றைகளில் ஒன்றும், இதைப் போல விஷத்தன்மை
ஒன்றும், இருள் சூழ்ந்த நிலை ஒன்றும், இப்படி அதன் உணர்வின் நாதங்களை
எடுத்துக் கொள்வதும், இதைப் போல வியாழன் கோள், தன் அருகிலே வந்தபின்,
அந்தச் சுழற்சியின் வேகத்தில், பல 27 நட்சத்திர உணர்வுகளைக் கவர்ந்து, அது
பெரிதாக வளர்ந்து, அது தன் வளர்ச்சி வட்டத்தில், வளர வைப்பதைக் காணலாம்.
இந்த ஒலியின் தன்மை செவ்வாய்க் கோளில் பதிந்தபின், அந்த ஒலியின் கற்றையை
அதன் வழி கொண்டு, அந்த நாத ஒலிகளைத் தனக்குள் எடுத்து, அந்த மோதலில்
ஏற்படும் சிகப்பின் தன்மை, அதிலே மாறிக் கொண்டிருப்பதைக் காணலாம்.
சூரியனால் மோதப்பட்டு, பிரிக்கப்பட்டு, அந்த உணர்வின் அலைகளையும்,
திருப்பி இதைப் போல சூரியனுக்குச் செல்வதற்கு முன், இதைக் கவர்ந்து
கொண்டபின், இந்த ஒவ்வொரு கோளின் ஈர்ப்பு வட்டத்தில், அது பிரிந்து,
வளையமிட்டுக் கொண்டிருப்பதை, அந்த அடர்த்தியின் நிலைகளைப் பார்க்கலாம்.
இப்பொழுது, ஒரு மரத்திற்கு ஆன்மா எதுவோ, இதைப்போல பிரித்தெடுக்கும்
ஆன்மாவாக மாற்றி, அது எப்படியெல்லாம் மாற்றிக் கொண்டுள்ளது, என்பதைக்
காணலாம்.
பலவிதமான வண்ணங்களும், பலவிதமான உணர்வுகளும்
மாற்றப்பட்டு, அதன் பாதை, ஒரு சுழல்வட்டமாக வந்து, மீண்டும் சூரியனுக்கு
வரப்படும் பொழுது, புதன், சூரியனுக்கு அருகிலே இருப்பது கவர்ந்து கொண்டு,
உலோகத்தன்மையாக மாற்றி, அதன் பலவிதமான வண்ணங்கள் வெளிப்படுவதை, மஞ்சள்,
பச்சை, கருநீலம் போன்ற உணர்வுகளில் அது வெளிப்படுவதைக் காணலாம்.
நாம் எப்படி ஒரு உலோகத்தை வேக வைக்கும் பொழுது, பல வண்ணங்கள் வருகின்றதோ,
இதே போல, உலோகத் தன்மை அடைந்து, பல வண்னங்கள் வெளிப்படுகின்றன.
எல்லாவற்றிலும் மோதி, ஆவியின் தன்மை அடைவதை, சனிக் கோள், அது சுழற்சி வட்டத்தில் கவர்ந்து, உறையும் தன்மை ஆவதைக் காணலாம்.
இவையெல்லாம் சூரியன் கவரப்படும் பொழுது, தன் உடலில் விளைய வைத்த உணர்வு,
பாதரசத்தால், அது வெண்மை நிறமாக இருக்கும். அந்த உணர்வு மோதியவுடன், ஒரு
நெருப்பு மயமான நிலைகள் தோன்றும். பிரிந்து ஆவியின் தன்மையாகும்.
மற்ற உணர்வுகள் பறந்து செல்வதைக் காணலாம். இப்பொழுது, சூரியனால்
உருவாக்கப்பட்ட ஒரு பிரபஞ்சத்தின் முழுமையையும், நீங்கள் உங்களுக்குள்,
இப்பொழுது நுகரும் உணர்வுகளால் அறியலாம்,
இந்தப் பிரபஞ்சம்
எப்படி இயங்கிக் கொண்டிருக்கிறது? என்பதை, நமது பூமியில், செடி கொடிகள்
எப்படி எதன் உணர்வு கொண்டு உறைந்ததோ, அதனதன் நிலைகளைக் காற்றிலிருந்து
கவர்ந்து, அதுஅது வளர்ச்சி அடைவது போன்று, பல மோதல்களும், மற்றவைகளும்
ஏற்பட்டாலும், அதனதன் உணர்வு கொண்டு,. அதனதன் நிலையில் கவர்ந்து, அந்தந்த
வண்ணம் கொண்ட கோள்கள் எப்படி மாறுகின்றது? எத்தனைவிதமான நட்சத்திரங்கள்,
அதாவது வண்ணங்கள் எப்படி கலவையாக மாறுகின்றது? இந்தப் பிரபஞ்சத்திற்குள்
நடக்கும் நிகழ்ச்சிகளை நன்றாகப் பாருங்கள்.
இந்த 27 நட்சத்திர
மின் கதிர்கள், அதாவது, வியாழன் கோள் ஈர்ப்பு வட்டத்தில் நுழைந்து, அது
வெளி வரப்படும் பொழுது, பல வண்ண நிலைகள் கொண்ட, சேர்த்துக் கொண்ட உணர்வின்
ரூபங்களாக, வெளியே எப்படி மாறுகின்றது? என்பதைப் பாருங்கள்.
நாம் எப்படி மத்தாப்பை விட்டபின், பல ரூபங்களாக ஆகின்றதோ, இதே போல,
பொறிகள், அதாவது, இரண்டு நட்சத்திரத்தின் பொறி அலைகள், மோதி, உணர்வின்
தன்மை வரப்படும் பொழுது, வியாழன் ஈர்ப்பு வட்டத்தில் நுழைந்து, வெளிச்
செல்லும் பொழுது, அதனுடைய உண்மையின் உணர்வுகள் அணுத்தன்மையாகி, அந்தக்
கலர்களுடைய உணர்வுகளாக எப்படி மாறுகின்றது?
இப்பொழுது உங்களுடைய உணர்வுக்குள், பலவிதமான உணர்ச்சிகள் மாறி மாறி வந்து
கொண்டே இருக்கும். பல மணங்களும், பல உணர்ச்சிகளும், உங்கள் உடலுக்குள்
புதுப்புது மணங்களும் வரும், உணர்ச்சிகளும் வரும்.
சிலருக்கு
எதிர் நிலையாகும் பொழுது, உடலில் வியர்வை அதிகமாகும். இப்பொழுது, ஒரு
சிலருக்குக் குதிரை மேல், அதாவது, இராட்டினத்தில் உட்கார்ந்து, சுற்றிவரும்
பொழுது, எப்படிச் சுழல்கின்றோமோ, அதே உணர்வுகள் சிலருக்கு வரலாம்.
இதையெல்லாம் இப்பொழுது, “கிரேதாயுகத்தில்” நாம் காண்கின்றோம். எதெனெதன்
உணர்வுகள் சேர்த்ததோ, அதனதன் உணர்வு கொண்டு, ஈர்க்கப்பட்டு, அதன் உணர்வு
வளர்ச்சியாகின்றது.