Pages

2 அகஸ்தியன் 5வது வயதில் கண்ட துருவத்தின் ஆற்றல்

ஆனால் அவன் இருக்கும் பக்கம், மற்ற விஷப் பிராணிகளோ, விஷ ஜந்துக்களோ, மற்ற கொசு போன்ற தொல்லை கொடுக்கும் மற்ற உயிரினங்களோ, வருவதில்லை.

இதைப்போல இவர்கள் வணங்குவது போன்று,

அந்தக் குழந்தை படுத்திருக்கும் போது,

வானை நோக்கிப் பார்த்து

இவர்கள் எதை எதை எல்லாம் கண்டுணர்ந்தனரோ,

அதையெல்லாம் அவனும் நுகரும் சக்தி பெறுகின்றான்.

அந்த உணர்வுகள் அந்த பச்சிளம் குழந்தையிடம் வளருகின்றது, வளர்ச்சி பெறுகின்றது.

இவ்வாறு வளர்ச்சி பெற்ற அக்குழந்தையோ, தனது வயது வளர்ச்சியில் ஒவ்வொரு வருடம் கூடக் கூட, அவனில் கண்டுணர்ந்த உணர்வுகள், சொல் வடிவில் வெளிப்படுவதும், வெளிப்படுத்துவதும், இதை மற்றவர்கள் தன் அருகிலே இருப்பவர்கள் கேட்டறிவதும், அவர்கள் ஒவ்வொருவரும், அவனைக் கடவுள் பிள்ளை என்று, அந்தக் காடுகளில் வாழ்ந்து வந்த அக்கால மக்கள், போற்றித் துதிப்பதும் வருகின்றது.

இதன் வழிப்படி வளர்ந்த அகஸ்தியன், தன் ஐந்தாவது வயதில், துருவத்தை நுகர்ந்தறியும் ஆற்றல் பெறுகின்றான். மற்ற பிரபஞ்சத்தில், நட்சத்திரங்களும், கோள்களும், அது உமிழ்த்தும் சக்தியை, அது பூமி, தன் சுழற்சியில் துருவ பகுதியில் கவரும் அச்சக்தியினை, இவன் உணரும் பருவம் பெறுகின்றான்.

அவ்வாறு தான் கண்டுணர்ந்த உணர்வினை, இவன் எதை நுகர்ந்து அறிகின்றானோ, அவையனைத்தையும், அவன் உயிர் ”ஓ” என்று ஜீவ அணுவாக மாற்றி “ம்” என்று அவன் உடலாக மாற்றிக் கொண்டேதான் உள்ளது.

அதாவது, தான் பிறந்ததிலிருந்து, கண் கொண்டு உற்றுப் பார்த்து, உணர்வினை நுகர்ந்தறியும் போது, இவை அனைத்தையும் ஜீவ அணுவாக மாற்றி, “ம்” என்று அவன் உடலாக மாற்றிக் கொண்டேதான் உள்ளது.

இவ்வாறு வானவியில் உணர்வை, தனக்குள் வளர்த்துக் கொண்ட இச்சக்தியின் துணை கொண்டு, தான் வளர்ச்சி பெற்றாலும், இவனை ஈன்ற தாய் தந்தையர்கள், தன்னைக் காத்துக் கொள்ள கடும் விஷத்தைக் கொல்லும் பச்சிலைகளைத் தங்களுக்குள் பூசிக்கொண்ட இந்த நிலைகள், தங்கள் உடலிலே பரவி, அவர்கள் இருவரது உடலையும் விட்டு, அந்த ஆன்மாக்கள் பிரிகின்றது.

பிரிவதற்குமுன், தன் ஐந்து வயதுக் குழந்தையின் எண்ணங்களை ஏங்கி, அவன் தனித்திருப்பானே, அவனை எப்படிக் காப்பது? யார் காப்பது என்ற நிலை கொண்டு, அந்த இரண்டு உயிரான்மாக்களும், இவன் நினைவாகவே, வெளியில் வருகின்றது.

இதைப்போன்று, இன்றைய நிலைகளிலும் பார்க்கலாம். நோயுற்றவரிடம் பற்று கொண்டு, அந்த உணர்வைப் பதிய வைத்திருந்தால், யாரிடம் இந்த உணர்வுகள் அதிகமாக உள்ளதோ, அவருடைய உடலில், அந்த உடலைவிட்டு பிரிந்த ஆன்மா சென்று, அதே உணர்வை இயக்கத் தொடங்கும். அவர்கள் எதையெல்லாம் செயல்படுத்தினார்களோ, அதை அனைத்தையும், அவர்கள் புகுந்த உடல்களில் இயக்கச் சக்தியாக மாற்றுகின்றார்கள். அப்பொழுது அவர்கள் உடலில் இருந்த நோய்கள், இவர் உடல்களிலும் மாறிவிடுகின்றது.

இதைப் போன்றுதான். அன்று அகஸ்தியனின் தாய் தந்தையர்கள், தன் குழந்தை மேல் உள்ள பற்று அதிகரித்து, இந்த உடலை விட்டு அகன்ற அந்த இரு ஆன்மாக்களும், அகஸ்தியனின் உடலுக்குள் அது புகுந்தது.

புகுந்தபின், அந்த உணர்வின் தன்மை வலிமை பெற, அவர்கள் கண்டுணர்ந்த உணர்வின் தன்மை அனைத்தையும், அகஸ்தியன், இந்த 5 வயதில் வானவியல், புவியியலை உணர்ந்தறிந்து, துருவப் பகுதியில் நமது பூமிக்கு, ஈர்த்து வரும் இந்தச் சக்தியினை உணரும் பருவம் பெறுகின்றான்.

பின், இவன் அறிந்த உணர்வின் துணை கொண்டு, வானை நோக்கி உற்றுப் பார்க்கும் பொழுது, நமது பூமியின் சுழற்சியின் ஈர்ப்பிற்குள், துருவப் பகுதியில், இந்த சூரிய குடும்பத்திற்குள் விளைந்த உணர்வினை, இது போகும் பாதையில், துருவப் பகுதியில் கவர்ந்து, நமது பூமிக்குள், அணுக்கள் அலைகளாக மாறிக்கொண்டு இருப்பதையும், உணர்கின்றான்.

இவ்வாறு, உணர்ந்த உணர்வுகளை அவன் நுகரப்படும் பொழுது,

எதை உற்று நோக்கி, துருவப் பகுதியில்

கூர்மையாக உணர்வைச் செலுத்துகின்றானோ,

அந்த உணர்வை, அவன் நுகரும் பருவம் பெறுகின்றான்.

நுகர்ந்த உணர்வுகள் அவன் உடலுக்குள் கலக்கின்றது. மற்ற தாவர இனங்களுக்குச் சத்தாகச் செல்லும் அந்தச் சத்தை, “தாவர இனச் சத்தை உணவாக உட்கொண்டு அணுக்களாக விளைந்த அணுக்களுக்கு”, இதை உணவாகக் கொடுக்கின்றான்.

அவனுடைய சந்தர்ப்பம், அவ்வழியில் நுகரும்படி செய்கின்றது. அவனுக்கு அது கிடைக்கின்றது. அவ்வழியில் நுகர்ந்து, அந்த உணர்வின் துணை கொண்டு, சூரியக் குடும்பத்தின் நிலைகளை அறியும் பருவம் வரும்பொழுது, அகஸ்தியன் துருவனாகிறான். அவ்வாறு துருவனாகி, அவன் வாழ்க்கையில் இந்த பிரபஞ்சத்தின் உண்மைகளை, உணர்வின் ரூபமாக அறியும் ஆற்றலை, அவன் பெறுகின்றான்.

அந்த அறிவு அவனுக்குள் விளைகின்றது. உதாரணமாக, ஒன்றுமறியாத ஒரு புழு, எந்தச் செடியின்மேல் அந்த உயிரணு பட்டு, புழுவாக ரூபம் பெற்றதோ, அந்தச் செடியின் மணத்தை உணர்வின் அறிவாக இயக்கி, அதே செடியைத் தன் ஞானமாக, அதை உணவாக உட்கொண்டு வளர்கின்றது.

இதைப் போன்றுதான், வானுலக உணர்வுகள் துருவப் பகுதியில் வெளிவரும் பொழுது, அகஸ்தியன், தனக்குள் நுகர்ந்தறிந்த உணர்வுகள் அந்த உணர்ச்சிகள் ரூபமாக உணர்ந்தறியும் தன்மை பெறுகின்றான்.

அவன் உடலில் வளர்த்துக் கொண்ட உணர்வுகள் அனைத்தையும், தன் நினைவாற்றலால் வெளிபடுத்துகிறான். வெளிப்படுத்திய உணர்வுகளை, சூரியனின் காந்தப் புலனறிவுகள் கவர்ந்து, இந்தப் புவியில் பரவச் செய்துள்ளது. அவ்வாறு பரவி இருப்பதைத்தான், நமது குருநாதர் காணும்படிச் செய்தார்.

அகஸ்தியனாக இருக்கும்பொழுது, அவன் கண்டுணர்ந்த உணர்வும், அவன் துருவனானபின், அவனின்று விளைந்த உணர்வின் ஒளி அலைகளை, சூரியன் கவர்ந்து வைப்பதும், அதன் வழியில் பிரபஞ்சத்தின் ஆற்றலைத் தனக்குள் பெருக்கிப் பெருக்கி, இந்தப் பிரபஞ்சத்தின் உண்மையை உணர்கின்றான், அகஸ்தியன்.

அப்பொழுதுதான், 5வது வயதில் துருவன் என்ற நிலை அடைகின்றான். துருவன் என்ற பெயர் வந்தபின் தன் வளர்ச்சியில், இன்று நட்சத்திரங்கள் எவ்வாறு உரு பெற்றது? நமது கோள்கள் எவ்வாறு உருவானது? சூரியன் எவ்வாறு உருவானது? என்ற நிலையை,

இவனுக்குள் விளைந்த உணர்வின் நிலை கொண்டு,

அவனுக்குள் அறிவின் உணர்வுகள்,

உணரும் பருவம் வருகின்றது.

அவ்வாறு உணரும் பருவங்கள் வரும்பொழுதுதான், தனக்குள் இருக்கும் இயக்கமும், வானியல் இயக்கமும், புவியியல் இயக்கமும் தன்னுள் கண்டுனர்ந்தபின், இந்தத் தாவர இனச் சத்துகள் எவ்வாறு உருவானது, அந்த உணர்வின் சத்தினை உயிரணுக்கள் எவ்வாறு நுகர்ந்தது? என்ற உணர்வுகள், அவனுக்குள் உருப்பெறத் தொடங்குகின்றது.

இவ்வாறு, கேள்விகளின் உணர்வுகள் விளைந்து, விளைந்து, இந்த அண்டங்கள் எவ்வாறு உருவானது என்ற நிலையை, அறியும் உணர்வினைச் செலுத்துகின்றான், இந்தத் துருவன்.

அதாவது, தன் உடலிலே பதிவு செய்து, ஒவ்வொன்றும் அவனுக்குள் இணைந்தே வளர்ச்சி பெற்று வருவதையும், அவன் அவனுக்குள் உணரும் சக்தி பெறுகின்றான்.

அவ்வாறு சக்தி பெற்ற உணர்வின் துணை கொண்டு, நமது சூரியப் பிரபஞ்சம் எப்படி உருவானது? இதைப் போல, பேரண்டத்தில் எப்படி இத்தகைய நட்சத்திரங்களும், கோள்களும் உருவானது? என்று அறியும் உணர்வினை, விண்ணை நோக்கிச் செலுத்துகின்றான். பின், ஆதியில் அகண்ட அண்டம் எவ்வாறு இருண்ட நிலைகள் கொண்டிருந்தது என்ற மூலத்தையே அறிகின்றான்

நமது குரு அருளால், அந்தத் துருவன் பெற்ற, அவன் கண்டுணர்ந்த அகண்ட அண்டத்தின், அனைத்து சக்திகளையும், நீங்கள் அனைவரும் பெற எமது அருளாசிகள்.