Pages

3 அகஸ்தியன் கண்ட பிரபஞ்சத்தின் இரகசியங்கள்

ஒவ்வொரு உணர்வு கொண்ட அணுக்கள், இன்று வான் வீதியில் பரவிக்கொண்டிருக்கும்போது, தனக்குள் வலிமை கொண்ட உணர்வுகள் வலிமையற்றதைத் தாக்கும்போது, அது வெப்பமாகி, அதன் நிலைகள் இரண்டறக் கலந்து, அதிலிருந்து வெளிப்படும் ஆவி, எடையற்றதாக மாறுகின்றது.

இவ்வாறு எடையற்றதாக மாறும்போது, அது மேகங்களாக ஒரு அடர்த்தி அடைகின்றது. இவ்வாறு அணுக்களில் மோதிய உணர்வுகள், பல மேகக் கூட்டங்களாக அமைந்து, இம்மாற்றம் ஏற்படும் போது, இந்த அணுக்கள் இந்த மேகக் கூட்டத்துக்குள், ஒன்றுடன் ஒன்று மோதும் போது நீராக மாறுகின்றது.


நீருக்குள் சிக்குண்ட இந்த அணுக்கள் எடைகூடி,

அகண்ட அண்டத்தில் ஓடுகின்றது.

ஓடும் வேகத்தில் அதனுடைய உராய்வால்,

அது ஆவியாக மாற்றப்பட்டு,

இந்த அணுக்கள் ஒன்றாக இணைத்து,

ஒரு திடப்பொருளாக உருவாகின்றது.


அவ்வாறு உருபெற்ற பொருளைத்தான் “பரம்பொருள்” என்று அன்றைய துருவன், தனக்குள் கண்டறிந்த உணர்வினை, காரணப் பெயரை வைத்து, வெளிப்படுத்துகின்றான். அவனில் விளையப்பட்ட அந்த உணர்வுகள், இன்றும் இதே சூரியனின் காந்தப் புலனறிவில் கவரப்பட்டு, இன்றும் நம் பூமியில் படர்ந்து கொண்டுள்ளது.


இவ்வாறு அவன் கண்ட பேருண்மையை, “பரம்பொருள்” அதாவது எல்லையே இல்லாதே அகண்ட உலகில். பரம் என்பது ஒரு எல்லை. அது ஒரு பொருளாக, ரூபமாக அமைந்துள்ளது என்பதனை, “பரம்பொருள்” என்று காரணப் பெயரைச் சூட்டுகின்றான் “துருவன்”.

ஆகவே இதன்வழி வளர்ச்சி பெற்று, ஒரு ரூபமாக ஆனபின், அதன் ஓடு பாதையில் ஓடப்படும் பொழுது,

மற்ற அணுக்களுடன் மோதப்படும் பொழுது,

சுழற்சி ஏற்பட்டு,

உராயப்படும்போது வெப்பமும்,

தான் துருவப் பகுதியில், தன் ஓடுபாதையில்,

இத்தகைய அணுக்களை ஈர்த்து,

இதற்குள் உருவாகும் வெப்பமும்,

இந்த அணுக்களும் இரண்டறக் கலந்து,

மற்ற பாறைகளாகவும், மற்ற உலோகங்களாகவும் உருமாறுகின்றது.

இப்படி தன் வளர்ச்சியில் சுழற்சியின் தன்மை பெரும் பொருளாக மாறும் போது, அதனுடைய சுழற்சி வேகமும் கூடி, சுழற்சி வேகம் கூடும் பொழுது வெப்பமும் கூடி, ஈர்க்கும் சக்தியும் கூடி, இவை அனைத்தும் இந்த பரம் பொருளுக்குள், வெப்பம் அதிகரித்து தன் அருகிலே இருக்கும் பொருள்களை உருமாற்றிக் கொண்டே உள்ளது.






அதிலே உருவாகும் ஆவியின் தன்மை வெளிப்படுத்துவதும், அதற்குள் பல உருமாற்றங்களை ஏற்படுத்திக் கொண்டே உள்ளது இந்தப் பரம்பொருள். இதை நாம் உணர்வதற்காகத்தான், அன்று துருவன் “சிவலிங்கம்” என்று காரணப் பெயர் வைத்தான்..

இவ்வாறு சிவலிங்கமாகி, அது உருப்பெற்று, அதன் உணர்வின் வளர்ச்சியில், அது வளர்ச்சியாகி, பெரும் கோளாக உருமாறுகின்றது. பெரும் கோளாக உருமாறும்பொழுது, இதனுடைய சுழற்சியின் தன்மையால், வெப்பத்தின் தன்மை அதிகரித்து, அதிகரித்து அமிலச் சக்தியாக மாறுகின்றது.

இவ்வாறு அமிலச் சக்தியாக மாறுபடும் இந்த சக்திகள், அது நட்சத்திரமாக மாறுகின்றது. அதிலிருந்து வெளிப்படும் அமிலங்கள், அதன் ஈர்ப்புவட்டத்தில் துகள்களாக மாறுகின்றது. அது, தான் உமிழ்த்தும் அந்த அமிலங்களில், தான் ஓடு பாதையில் செல்லும் போது, பல தூசுகள் அதனில் ஈர்க்கப்பட்டு, அதனின் உணர்வின் தன்மை வளர்ச்சி அடையும் பொழுதுதான், “பால்வெளி மண்டலம்” என்ற நிலை அடைகின்றது.






அவ்வாறு அடைந்தாலும், அதனுடைய ஓட்டத்தில், இதனுடைய ஈர்ப்பு சுழற்சியில் சுழலும்பொழுது, தூசிகளாக மாறுகின்றது. அந்த தூசிகளாக மாறுபட்ட இந்த உணர்வினை, சுழற்சியின் ஈர்ப்பில் தனக்குள் உணவாக எடுத்துக் கொள்கின்றது.

தான் வளர்ச்சியில் வெளிப்பட்ட இவைகள் அனைத்தும், உதாரணமாக, நூலாம்படைப் பூச்சி, எப்படி தன் உடலிலிருந்து வெளிப்படும் அமிலத்தை நூலாம்படையாகத் தனக்குள் ஒரு கூட்டாக அமைத்து, அந்த வலைக்குள் சிக்கும் மற்ற உயிரினங்களைத் தனக்குள் உணவாக எடுத்துக் கொள்வதும், அதே சமயத்தில் தன் உடலில் உருவான அமிலத்தை, மற்றொன்றின் மேல் பாய்ச்சப்படும் போது, அதைத் தனது இனமாக உருபெறச் செய்கின்றது.

இதைப் போன்றுதான், நட்சத்திரம் தான் உமிழ்த்தும் அமிலங்களை, நூலாம்படை போன்று வலை விரித்து, அது போகும் பாதையில் சிக்கும் மற்ற உணர்வுகளைத் தன்னுடன் இணைத்து, பால்வெளி மண்டலங்களாக அது உருபெற்று, இதன் சுழற்சியின் வேகத்தில் தூசியாகி, தனக்குள், உணவாக எடுத்துக் கொள்வதும், இதன் ஈர்ப்ப்பு வட்டத்தில் சுழற்சி பெறும், இவைகள் கோள்களாக உருபெறுவதும், இதைப் போன்று ஒரு பிரபஞ்சமாக உருப்பெறுகின்றது.

இப்பொழுது நட்சத்திரம் எவ்வாறு உருவானதோ, இதைப் போன்றே இது ஈர்ப்பு வட்டத்தில் வருவதை,

மற்ற பிற மண்டலங்களில் இருந்து வரும் சத்தினை,

நட்சத்திரங்கள் எடுப்பதும்,

அந்த நட்சத்திரங்கள் பால்வெளி மண்டலங்களை அமைப்பதும்,

அதிலிருந்து தூசிகளாக வருவதை சூரியன் தனக்குள் இழுத்து,

மற்ற கோள்கள் உருபெற்று,

ஒரு பிரபஞ்சமாக உருப்பெறுகின்றது.






இவ்வாறு உருபெற்றதுதான், நமது சூரியக் குடும்பம் என்றும், அதற்குள்தான் இந்த உயிரணு தோன்றியது என்ற உணர்வினை, தனக்குள் தன்னை அறிகின்றான்.

ஆகையினால்தான், ஆரம்பத்தில் தாயின் கருவிலே விளைந்த இந்த உணர்வுகள், அவனுக்கு “அகஸ்தியன்” என்று காரணப் பெயரைச் சூட்டினார்கள்.

பின் அவனுடைய வளர்ச்சியில் துருவத்தை நுகர்ந்து, துருவத்தின் வழியில் வரும் உணர்வினை, அது எவ்வாறு உருபெற்றது என்ற நிலையைத் தனக்குள் அறிந்துணர்ந்து, அதன்வழி அவனில் விளையவைத்த உணர்வுகள், இன்றும் நம் பூமியில், சூரியனின் காந்த சக்தியால் கவரப்பட்டு பரவிக் கொண்டுள்ளது.

இவ்வாறு உருவான பிரபஞ்சத்தை, அகஸ்தியன் தனக்குள் கண்டுணர்ந்த உணர்வின் ஆற்றல்களும், துருவனின் உணர்வுகளில் விளைந்த உணர்வுகளும், நம் பூமியில் பரவிக் கொண்டிருப்பதும், பிரபஞ்சத்தில் பரவிக் கொண்டிருப்பதும், அதனை நாம் அவர்கள் வழியில் நுகர்ந்தறிய வேண்டும்.

அவ்வாறு நுகர்ந்தறிந்து, நமக்குள்ளும் அதை வளர்த்துக் கொண்டு, துருவன் எவ்வாறு இன்று துருவ நட்சத்திரமானானோ, அவனின் ஈர்ப்பு வட்டத்தில் வந்தோர்கள் வாழ்ந்தும் இன்று சப்தரிஷி மண்டலங்களாக, வளர்ந்து கொண்டிருக்கின்றனர்.

அதனை நாமும் பெறமுடியும் என்று, நமது குருநாதர் காட்டிய அருள் வழியில், உங்களுக்குள் பதிவாக்கி, உங்கள் நினைவின் ஆற்றலின் துணை கொண்டு, மனிதன் என்ற முழுமை நீங்கள் அனைவரும் அடைய முடியும். எமது அருளாசிகள்.