பல நிலைகள், நாம் தவறு செய்யாமலே உருவாகின்றன. நாம் தவறு
செய்யவில்லை. நாம் வயிறு நிறைய சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது, பிறர் நம்முடன்
சண்டை போட்டதன் நினைவுகளை, நாம் கொண்டு வந்தவுடன், அன்று நமக்கு
அஜீரணமாகின்றது; அல்லது சாப்பிட்ட ஆகாரத்தை சரியாகச்
செயல்படுத்துவதில்லை.
ஏனென்றால், நம் உடலில் அனைத்து குணங்களின் செல்கள் பதிவாகியிருக்கின்றது. நாம் எந்த
குணத்தைச் செயல்படுத்துகின்றோமோ, அந்த உணர்வான செல்கள் அனைத்துமே, ஒருங்கிணைந்து
இயக்கப்படும்போது, அதற்குத்தக்கவாறுதான் நம் நரம்பு இயங்குவதும், நம் சுவாசம் இயங்குவதும், குடல் இயங்குவதும், நம் எண்ணங்கள் பேசுவதும்
எல்லாமே.
இப்பொழுது, கோபமாகப் பேசுபவரைப் பார்த்தால்,
உச்சிமுடி நட்டமாக எழுந்து நிற்கும். பயம் கலந்த, ஒரு
கோபத்தை உண்டாக்கப்படும்போதும், சில்லென்ற நிலை ஏற்படும்படி, எதிர்பாராத ஒரு பயத்தை
உண்டாக்கினாலும், நம் தலைமுடி கிர்ரென்று மேலே எழுந்துவிடும்.
இவையெல்லாம், இந்த உணர்வின் செல்கள் இயங்குவதனால்தான். நாம் அல்ல. நாம் இதைத் தடுத்து நிறுத்த முடியாது.
இப்படித்தான் இயற்கையிலேயே, நம்மை அறியாமலேயே, பல நிகழ்ச்சிகள்
நடந்து கொண்டிருக்கின்றன. இதை நாம் அறிந்துணர்ந்து, நம் உடலில் வரக்கூடிய பிணிகளைப் போக்க வேண்டும். அதற்கு என்ன
செய்வது?
மெய்ஞானிகள், விண்ணுலகச் சக்தியைப் பெற்று, அவர்கள் உடலிலே வளர்த்து, அவர்கள் உயிருடன் வாழ்ந்த
காலங்களில், அவர்கள் உடலில் அத்தகைய ஆற்றல்களைப் பெற்று, தன்னையறியாமல்
ஆட்டிப்படைக்கும் சில உணர்வுகளை, அவர்கள் அடக்கினர்.
நமக்குக் கோபம் வருகிறதென்றால், நம்மையறியாமல் துடிப்போம்.
ஆனால், ஞானிகள் மத்தியில் அந்த உணர்வுகள் சென்றதென்றால், அது அவர்களுக்குள் அடங்கி, அதற்குண்டான ஞானத்தை ஊட்டி, எந்த செயல் வேண்டுமோ, அந்த
செயலுக்குண்டான வலுவை ஊட்டும்.
இப்பொழுது, இந்தக் காரமான உணர்வுகள், நமக்குள் அதைத்
தூண்டச் செய்து, அந்த காரமான நிலைகளில் நாம் பேசி, பிறிதொன்றைத் தாக்கச் செய்யும். ஏனென்றால் அதை ஜீரணிக்கக்கூடிய சக்தி நம்மிடத்திலே இல்லை.
ஆக மெய்ஞானிகள்,
விண்ணின் அந்த ஆற்றல் மிக்க சக்தியைத் தனக்குள் எடுத்துக் கொண்டதனால், அவர்களுடைய புலனறிவுகளில் எது சிக்கினாலும், அவர்களுடைய
உணர்ச்சிகளைத் தூண்டுவதில்லை.
ஆனால், எத்தகைய குணங்கள் கொண்டு பிறர் செய்தாலும், அந்த உணர்ச்சிகள்
தூண்டாவண்ணம் அவர்களுக்குள் வந்தவுடன் அடங்கி, அவர்களது ஆற்றல் மிக்க சக்திகள் இவருடைய
பார்வையில் பட்டவுடன், அவர்களுக்குள் இருக்கக்கூடிய, கெட்ட குணங்கள் அப்படியே
அடங்கிவிடும்.
இப்பொழுது, நாம் நல்லவர்களாக இருக்கிறோமென்றால், ஒருவர் சிறு
குற்றமான செயலைச் செய்கிறார், நம்மீது ஒரு பழிச்சொல்லைச் சொல்கிறார், அந்தச் சொல்
வெறும் வார்த்தைதான்.
அதை நமக்குச் சொன்னவுடன், அந்த உணர்ச்சிகள் தூண்டப்பட்டு
நமக்குள் அடக்கமுடியவில்லை. “இவ்வாறு சொல்கிறானே” என்று பதட்டமும், பயங்கரமான விளைவுகளும் ஏற்பட்டுவிடும்.
ஏனென்றால், அவர் செய்த உணர்வுகள் நமக்குள் இயக்கி, தவறு செய்யும்
நிலைகளுக்கு, எங்கிருந்து அந்தத் தவறு
வந்ததோ, அவர்களை
அழிப்பதற்கு வருகின்றது. “இல்லாததைச்
சொல்கிறான்” என்ற உணர்ச்சியின் வேகம் தூண்டுகின்றது.
ஆனால் அதே சமயம், இந்த உணர்ச்சியுடன் சேர்ந்து உமிழ்நீராககச் சுரந்து, நம் ஆகாரத்துடன் கலந்து விடுகின்றது. இப்படி ஆகாரத்துடன் கலந்தவுடன், அது நம் உடலில்
சாப்பிட்டவுடன்,
சத்தான ஆகாரத்தை ஜீரணிக்கக்கூடிய சக்தியிழந்து, அதனுடைய
செயல்களைச் செயலாக்கத் தொடங்கிவிடுகின்றது. அது இரத்தமாக மாறி, நம் தசைகளாக மாறி விடுகின்றது.
இதைப்போன்று, மெய்ஞானிகள் அவர்கள் வாழ்க்கையில் வந்த,
பெரும் தொல்லைகளையும், இதே மாதிரி விண்ணின் ஆற்றல்களை அவர்கள் பெற்று, அவர்கள் உடலிலே வந்த சில
நிலைகளையெல்லாம் மாற்றி, உயிராத்மாவை ஒளியாக மாற்றிச் சென்றனர்.
அவர்கள், எதை எதையெல்லாம் அவர்கள் மூச்சாலும், பேச்சாலும், சொல்லாலும், அவர்கள் வெளிப்படுத்தினார்களோ, அந்த அலைகள் நம்
பூமியில் படர்ந்து கொண்டிருக்கின்றது. அவையெல்லாம் சீக்கிரம் அழிவதில்லை.
நம்மைப் போன்ற சாதாரண மனிதர்கள் பேசியதெல்லாம், ஆற்றல் மிக்க உணர்வின் சக்தி கொண்ட வெப்பகாந்தங்கள் தாக்கியவுடன், அது அழிந்துவிடும். அந்த உணர்வுகள்,
இந்த உணர்வுடன் அதை ஈர்த்துக் கொண்டு, மற்ற உணர்வுகள்
காரத்துடன் காரம் சேர்த்து, காரமாக உருப்பெற்று, மற்றவர்களைத் தாக்கும்
உணர்வாகச் சென்றுவிடும்.
ஆனால், மெய்ஞானியின் சக்தியினுடைய நிலைகளை, அதை மற்ற
சாதாரணமான ஒரு அணுவின் தன்மை, புவிக்குள் வருவதை அதைச் செயலிழக்கச் செய்யமுடியாது.
ஆகையினால் அந்த ஞானிகளுடைய சக்தியை, மனிதன் சாதாரணமாக எடுக்க முடியாது.
நாம் நினைத்தவுடன், ஆத்மசுத்திக்கு ‘’ஓம் ஈஸ்வரா’’ என்று உயிருடன்
தொடர்பு கொண்டு,
அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டும் என்று
ஏங்கும்போது, அந்த அருள் சக்தியை நீங்கள் பெற முடியும் என்று, உங்களுக்கு உறுதியாகச் சொல்கின்றோம்.
காரணம், அவர்கள் எடுத்துக்கொண்ட ஆற்றல் எவ்வழிகளில் பெற்றார்களோ, அதை அவருடைய நிலைகளை உபதேசித்து, உங்கள் உணர்வலைகளுக்குள் பதியச் செய்யும்போது, இந்த உணர்வுகள் உங்களுக்குள்
வித்தாக மாறுகின்றது.
அந்த வித்திற்கு, நீங்கள் துருவ நட்சத்திரத்தின் பேரொளியை எடுத்து, ஊட்டினால்தான், அந்த வித்திற்குச் சக்தி கூடும். அப்பொழுது அந்த ஞானியருடைய உணர்வலைகள், காந்தத்தின் பவர்
கூடினால்தான், அந்த ஞானியருடைய எண்ண
அலைகளுக்குச் சக்தி கூடுகின்றது.
அப்பொழுது, நாம் ‘’ஓம் ஈஸ்வரா’’ என்று உயிருடன் தொடர்பு கொண்டு, நாம் நினைவுபடுத்தி, அந்த மகரிஷிகளின்
அருள் சக்தியை நாங்கள் பெற வேண்டுமென்று ஏங்கி, அந்த மகரிஷிகளின் அருள் சக்தியை எங்கள் ஜீவாத்மா பெற வேண்டுமென்று
எண்ணி, நம் உடலுக்குள் எல்லா அணுக்களிலும் செலுத்த முடியும்.
அவ்வாறு எல்லா அணுக்களிலும் செலுத்தி, சர்வ தீமைகளையும்
நீக்கி, அனைத்தையும் ஒளியாக மாற்றி, நாம் மகிழ்ந்து வாழ முடியும், பிறவியில்லா நிலை
என்ற, அழியா ஒளிச்சரீரம் நாம்
அனைவரும் பெற முடியும்.
25. தீமைகளைக் கிழித்தெறியும் மெய்ஞானிகளின் அலைவரிசை
‘’ஓங்காரக்காளி’’ என்று நாம் சொன்ன, ஓசோன் திரையையும், இன்று அணு
குண்டினால் சிதறடித்து விட்டார்கள். இதனால், விஷத்தன்மைகள் பூமியில் வந்து படர்ந்து கொண்டிருக்கின்றது.
விஞ்ஞானக் கருவி கொண்டு, விண்ணிலே பல அலைகளைப்
பாய்ச்சிக் கொண்டிருக்கிறார்கள். விண்ணிலே பாய்ச்சினால்,
இங்கே பாதிக்காது என்பது அவர்களுடைய எண்ணம். விண்ணிலேயும் விஷத் துகள்கள் பரப்பப்படும்போது, புவியின் ஈர்ப்புக்குள்
சுழற்சியில் வரப்படும்போது, அந்த அலைகள் பூமிக்குள்
வருகிறது.
அப்படி அலைகள் வரப்படும்போதுதான், விஷத்தின் தன்மையை முறியடிக்கக்
கூடிய சக்தி இருந்தாலும், மனிதன் விஞ்ஞானத்தினால் செய்யப்பட்ட நிலைகள், ஒன்றை அழித்துவிட்டு ஒசோன்
திரையைக் கிழித்து விடுகின்றது.
ஆக, விண்ணிலே இருக்கக்கூடிய ஆற்றல்கள்,
துரித நிலைகளில் நம் பூமிக்கு வரக்கூடிய நிகழ்ச்சிகள்,
நடந்து கொண்டிருக்கின்றது. அவ்வாறு வரக்கூடிய நிகழ்ச்சிகளினாலே, மனிதனுடைய சிந்தனைகள் குறைக்கப்பட்டு, நாமெல்லாம்
ஆனந்தமாக இருக்க வேண்டுமென்று எண்ணுகின்றோம்.
ஆனால், உணர்வுக்குள் வேதனை தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது. இந்த
மாதிரி நிலைகளிலிருந்து மீட்டிக்கொள்வதற்கு, நாம்
செய்யவேண்டிய ஒரே முறை, அந்த மெய்ஞானியரின் அருளை, நாம் பெற வேண்டும்.
இன்று எப்படி, ஓசோன் திரை கிழிந்து வருகிறதோ, அதைப் போன்று மற்ற விஷத்தின் தன்மையைக் கிழித்தெறியும் தன்மை, நாம் பெற வேண்டும்.
நாம் சாதாரண மனிதர்கள் என்று, எண்ண வேண்டாம். இவையெல்லாம்
சாதாரணமானவைதான். நம்மிடமிருப்பது சாதாரண ஆயுதம்தான், பணவசதியுள்ளவர்கள்
யாருமில்லை.
நமக்குள், எண்ணத்தின் வலுவின் தன்மைகளை நாம் பெற வேண்டும். நாம்
மெய்ஞானியரின் அருள் சக்திகளைப் பெற வேண்டும். நம் எண்ணத்தின்
வலுகொண்டு, தீயசக்திகள் நம்மை
அணுகாது, நாம் பாதுகாக்கவேண்டும். அந்த உணர்வின் ஆற்றல் மிக்க சக்திகளை,
நாம் பெற வேண்டும், நமக்குள் பெருக்கவேண்டும்.
ஆகையினாலே, எப்படி அலைவரிசையினாலே மனிதனை இயக்க முடியுமென்று
விஞ்ஞானிகள் சொல்லுகின்றனரோ, அதைப்போல மெய்ஞானிகள் அருள்வழிப்படி, அந்த மெய்ஞானியரின் அருள்ஒளியை
ஒவ்வொரு நிமிடமும் நமக்குள் கூட்டி, இந்த
அலைவரிசைகளை நமக்குள் பெருக்கிப் பழகவேண்டும். அப்படி
பழகுவதற்குத்தான் இந்த ஆத்மசுத்தியும், பயிற்சியும் கொடுத்தது.
அவ்வாறு, வாழ்க்கையில் நாம் அனைவரும் ஒவ்வொரு நொடிப்
பொழுதும், அந்த மெய்ஞானியரின் அலைவரிசையின் தொடர் கொண்டு, நமக்குள்ளும், இந்த உலகிற்குள்ளும்
வரும் எத்தகைய தீமைகளையும் நீக்கிடும் அருள் சக்தி பெறுவோம். எமது அருளாசிகள்.