Pages

2. அண்டம் உருவாகக் காரணமான சூனியப் பிரேதசம்






அகஸ்தியன் தன் வாழ்நாளில், அவன் அகண்ட அண்டத்தையும், சூனியமான பிரதேசத்தையும், தன் உடலுக்குள் எப்படிக் கண்டுணர்ந்தானோ, அதே போல, இந்த உலகமே உருவாவதற்குக் காரணமான, மூலமான, “அகண்ட அந்தச் சூனியப் பிரதேசம்” எப்படி உருவானது? என்பதை, நீங்கள் எண்ணி, உங்கள் நினைவைப் புருவ மத்தியில் வைத்து, கண்ணின் நினைவைச் செலுத்துங்கள்.


ஆக, நம் உடல் ஆதியிலிருந்து வந்த சூனியத்திலிருந்துதான் இன்று ஒளியின் உடலாகப் பெற்றது. ஆகவே, ஒளியின் உணர்வு பெற்ற அந்த அகஸ்தியன் காட்டிய உணர்வைத்தான், அவன் ஒளிச் சரீரமான உணர்வின் தன்மை கொண்டு நாம் ஏங்கித் தியானிக்க வேண்டும்.


இருளைப் பிளந்து, உணர்வின் தன்மை நாம் தெளிவாகும் நிலை பெற்ற இந்த உடலில், இப்பொழுது கண்ணின் நினைவை உயிருடன் ஒன்றி, ஆரம்பத்தில் இந்தச் சூரியனோ, மற்ற சூரியனோ இல்லாத பொழுது, அகண்ட அண்டம் எப்படி இருந்தது? அந்த சூனியப் பிரதேசமாக எப்படி இருந்தது? என்ற நிலைகளை உங்கள் கண்ணின் நினைவை வைத்து, வானை நோக்கி எண்ணி ஏங்குங்கள்.