இவ்வாறு, வான்
வீதியில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்து,
அணுக்களின் பரிணாம
மாற்றங்களும் அதிகமாகின்றன.
இவ்வாறு அதிகமாகி, மேகத்துக்குள்
இணைந்து,
அதற்குள் போர்முறை வரப்படும் பொழுது, நீராக
மாறுகின்றது.
நீரானபின், எடை கூடி
ஓடும் நிலைகள் வருகின்றது.
பல அணுக்கள், கூட்டமைப்பாக
பல உணர்வு கொண்ட நிலைகள்,
இந்த நீருக்குள் சிக்குண்டு, இந்த
உணர்வின் தன்மை
எடை கூடி ஓடும் தன்மைகள்
வருகின்றது.
எடை கூடி, நகர்ந்து ஓடும் பொழுது உராய்வாகி,
உராய்வினால் வெப்பமாகி, நீர்
ஆவியாகின்றது.
இந்த பற்பல அணுக்களின் கூட்டமைப்பு, ஓர் ரூபமாகின்றது.
ஓர் எல்லையாகின்றது, ஓர் பரமாகின்றது.
வான் வீதியில், ஆவியாக இருக்கும்
பொழுது எல்லை இல்லை. ஆனால், திடப் பொருளாக மாறும் பொழுது, எல்லையாகின்றது. அது தான் “பரம்பொருள்”, ஓர் ரூபமாகின்றது
என்பதை நாமெல்லாம் தெரிந்து கொள்வதற்கு, மகரிஷிகள், “உலகம் எவ்வாறு உருவானது?” என்பதைத் தெளிவாக்கி உள்ளார்கள்.
இவ்வாறு,
அணுக்களின் சக்தியைத் தனக்குள் சேர்த்துக் கொண்டபின், பரம்பொருளாகி, அதற்குள்
அடைபட்ட உணர்வுகள் அனைத்தும்
பரம்பொருள் சுழலும் பொழுது, சுழற்சியில்
வெப்பமாகி,
வெப்பத்தின் தன்மை ஈர்க்கப்பட்டு,
தன் அருகில் உள்ள பொருள்களை,
உருகச் செய்து ஒன்றாக மாற்றுகின்றது.
பொருள்களின் உணர்ச்சிகள் மாறுகின்றது.
இப்படிப் பாறைகளாகவும், கற்களாகவும்
மாறுகின்றது. அப்பொழுது உள் நின்று இயக்குவது யார்? இந்தப்
பொருளின் தன்மை கலந்து, உருப்பெறும் தன்மை வரப்படும் பொழுது, உள் நின்று இயக்குவது “கடவுள்”
இவ்வாறு அந்த பரம்பொருள், தன்
அருகில் உள்ள காந்தப்புலனில் உராயும் பொழுது, சுழற்சியாவதும், சுழற்சியால்
வெப்பம் உருவாகி, ஈர்க்கும் சக்தி பெற்று, தான்
ஈர்க்கும் பொருள்கள் மேலே விழுந்தாலும், சுழற்சியால்
ஏற்படும் வெப்பம், ஊடுருவி, பரம்பொருளின் நடு மையம் அடைகின்றது.
அந்த வெப்பத்தால் தன் அருகிலே
இருப்பது அனைத்தும், உருகுகின்றது, ஆவியாக
மாற்றுகின்றது, வெளி வருகின்றது. மீண்டும் இதனுடைய ஈர்ப்பு வட்டத்தில், மேல்
எழுந்தவாறே சுழல்கின்றது.
மேலேயும் சுழற்சிகள்
மாறுகின்றது. நடு மையமும், உணர்வுகள், குணங்கள்
மாறுகின்றது. இவ்வாறு வளர்ச்சி அடைந்ததுதான் “கடவுள்’ என்ற தன்மையே, சிறுகச்
சிறுக வளர்ச்சி அடைந்து, பெரும் கோளாக மாறுகின்றது.
இவ்வாறு, வான்
வீதியில் இத்தகைய நிகழ்ச்சிகள் நடந்து,