அப்படி ஆனவர்கள்தான், இன்று எதனையும் பிளந்திடும் நிலைகள் பெற்றவர்கள், சப்தரிஷிகள். ஆக, இந்த பூமியின் தொடர் கொண்டு வாழுகின்றார்கள். இந்தப் பிரபஞ்சம் இறந்தாலும், இவர்கள் தனி மண்டலமாக இயக்கப்பட்டு, தீமையற்ற உலகை அவர்களுக்குள் சிருஷ்டித்துக் கொண்டிருப்பார்கள்.
ஆக, ஒவ்வொரு சூரியக் குடும்பத்திலும் ஏற்பட்ட இந்த மண்டலங்கள், வேறு வேறு விதமாக இருப்பினும், உடல் பெற்ற உணர்வின் நிலைகளிலிருந்து, தீமைகளைப் பிளந்த உணர்வுகள் ஒருக்கிணைந்து, பெரும் மண்டலமாகத் திகழ்கின்றார்கள்.
இந்த அகண்ட பேரண்டத்தில், இப்பேர்ப்பட்ட மகரிஷிகளும் உண்டு. ஆக, மனிதனில் தெளிந்த நிலைகள் கொண்டு, அது பெரும் வட்டமாகச் சுழன்று கொண்டுள்ளார்கள். மனிதனின் நிலைகள், நாம் இன்று அதிலே இணைந்தால்தான் நல்லது.
பேரண்டம், முதலிலே இருண்ட நிலைகளில் இருந்தது, ஆக ஒன்றுடன் ஒன்று மோதி, சுழற்சி வேகம் கொண்டு, சூரியன்களாக விளைந்து, நட்சத்திரங்களாக விளைந்து, அதிலே தோன்றிய கோள்களாக விளைந்து, உயிரணுக்களாக விளைந்தது.
உயிரணுக்கள் அதனின் நிலைகள் நுகர்ந்து, நுகர்ந்து, உணர்வின் தன்மை உடல் பெற்று, எண்ணத்தின் நிலைகள் கொண்டு, இயங்கத் தொடங்கும் நிலைகள் கொண்டு, தன்னைக் காத்திடும், காத்திடும், நிலைகள் கொண்டு வந்தது.
இப்படி, இந்த உயிரின் நிலைகள், உடல்களைக் காத்திடும் நிலையாக வந்தாலும், இந்த உயிருடன் ஒன்றி, ஒளியின் சரீரமாகத் தன்னைக் காத்திடும் நிலைகளில் விளைந்தவர்கள்தான், மகரிஷிகள்.
ஆகவே, அது அனைத்தும் நாம் பெறமுடியும். நமக்குள் இருக்கும் இந்த பாதுகாப்பு நிலையை பிளக்காது, அதிலே, இந்த மகரிஷிகளின் உணர்வுடன் பாதுகாக்கும் அரணாக, நாம் அமைத்திடல் வேண்டும்.
நமக்குள் நம் ஆறாவது அறிவை, இந்த ஓசோன் திரையைக் கிழித்திடாது, மற்ற தீமைகள் நமக்குள் படர்ந்திடாது, அருள் மகரிஷிகளின் நிலைகளை, நாம் ஓசோன் திரையாக அமைத்திடல் வேண்டும், அமைக்க முடியும்.
அந்த நிலைகள் பெறச் செய்வதற்குத்தான், மாமகரிஷி ஈஸ்வரபட்டாய குருதேவர் அருளிய அருள் வழிப்படி, விண்ணின் ஆற்றலைக் காண, அந்த உணர்வைப் பெற, அவர் செய்து அருளிய அந்த உணர்வின் தன்மை, அதைப் பெறும் பாக்கியத்தை, இன்று நாம் அனைவரும் பெற்றுள்ளோம்.
ஆகவே, நமது குருநாதர் காட்டிய அருள்வழியில், நாம் அனைவரும் மெய் உலகைப் படைக்கும் சக்தியாக, ஒருங்கிணைந்து செயல்படுவோம். எமது அருளாசிகள்.
