ஆகவே, அக்கால மக்கள் அவனுக்கு அகஸ்தியன் என்று காரணப் பெயரைச் சூட்டுகின்றனர். அணுவின் இயக்கங்களைக் கண்டுணர்ந்து அவன் வெளிப்படுத்துவதால், மற்ற மக்கள் இவ்வாறு காரணப் பெயரைச் சூட்டுகின்றார்கள்.
அவன், இந்தப் புவியின் தாவர இனச் சத்தை நுகரப்படும் பொழுது, அதை உணவாக உட்கொள்ளும் மற்ற உயிரினங்கள், அதன் மணத்தை நுகர்ந்தறிந்து, அதை உணவாக உட்கொள்வதும், இப்படிப் பல நிலைகளை அவன் கண்ணுற்றுப் பார்த்து, அறியும் ஆற்றலைப் பெறுகின்றான்.
பின் ஒன்றை ஒன்று விழுங்கி, மாறுபட்ட உடல்கள் பெறுவதையும் உணர்கின்றான். இன்று ஒரு புழுவை, குருவி கொத்தி உட்கொண்டால், அந்தப் புழுவின் உயிரான்மா குருவியாகப் பிறப்பதும், அதைக் காக்கை உட்கொண்டால் காக்கையாகவும் பிறக்கின்றது.
இதைப் போன்று, எது எதை விழுங்குகின்றதோ, அந்த உயிரான்மா அதற்குள் சென்று இப்படி ரூபங்கள் மாறிக் கொண்டே செல்கின்றது. இதைப் போன்று, மானை ஓநாய் தின்றால் ஓநாயாகப் பிறக்கின்றது. இப்படி எத்தனையோ வகையாக, மானை அடித்துக் கொல்லும் விலங்குகளுக்குத்தக்க, மானின் உயிரான்மா உருமாற்றம் பெறுகின்றது.
இதைப் போன்று மற்ற உயிரினங்கள் எவை எவை அடித்துக் கொல்லுகின்றதோ, அடித்துக் கொல்லும்போது,
அதனின்று வெளிப்படும் உயிரான்மாக்கள்
அடித்துக் கொன்ற உடலுக்குள் புகுந்து,
அதன் உணர்வைக் கருவாக்கி,
பரிணாம வளர்ச்சி அடைவதை
தனது ஐந்து வயதிற்குள் தெளிவாக்குகின்றான், அகஸ்தியன்.
ஒவ்வொரு செடியையும் நுகர்ந்தறிந்து, அதனுடைய இயக்க நிலைகளை அறிந்து கொண்டு வருகின்றான். அறிந்தபின், காய்கறிகளை வேகவைத்து, ருசியாகச் சாப்பிடப் பழகினான்.
அப்புறம் கனிகளைச் சாப்பிட்டான். கனிகளின் உணர்வினை அதிகமாகச் சாப்பிட்டாலும், அதன் உணர்வு கொண்டு, உணர்வுகளின் அணுக்கள் மாறி, அந்த கனியைச் சாப்பிட்ட உயிர் அங்கே சென்றபின், அதனைக் கவர்ந்து மாறிவிடும் (தனித்துச் சாப்பிட்டால்).
இதையெல்லாம் உணர்ந்தபின், இன்று புல் இருக்கின்றது. பயிராகி வருகின்றது. அதில், இதைப் போல எடுத்து உணவாக உட்கொள்ளவும், பல செடிகளை இணைத்து, புதுப் புதுச் செடிகளை உருவாக்கினார் அகஸ்தியர். ராகி, சோளம், அரிசி, அவைகளையெல்லாம், மற்ற புல் பூண்டிலிருந்து எடுத்து, உருவாக்கினார்.
இன்று விஞ்ஞானிகள் எத்தனையோ வகையான சோளம், இதெல்லாம் மாற்றுவதுபோல் மாற்றி, அதனை வேக வைத்து, மனிதன், கலவையாகச் சாப்பிடுவதும், தாவர இனங்களில் உருவாவதைச் சேர்த்து ருசியாக சாப்பிடப் பழகினார்.
என்று நெருப்பைக் கண்டுபிடித்தானோ,
அதன் தன்மை கொண்டு,
வேக வைக்கும் உணர்வுகள் மாறுகின்றது.
இப்படி மாற்றியமைத்தவர் அகஸ்தியர்.
ஆக, இந்த உண்மையின் உணர்வை அறியப்படும் பொழுது,
இந்தச் செடி எப்படி உருவாகின்றது
என்று சிந்திக்கத் தொடங்குகின்றார்.
அப்பொழுதுதான், நமது பூமி துருவப்பகுதியில் இருந்து, அதனைக் கவருவதை உணர்கின்றார். இந்த விஷத்தை அடக்கக்கூடிய சக்தி இவனிடம் இருந்ததனாலே, எதையுமே தெரிந்து கொள்ளக்கூடிய சக்தி அவனுக்கு வருகின்றது. மற்ற மனிதனைக் காட்டிலும், இவன் அந்த அறிவில் வளர்ச்சி உள்ளனவாக, வருகின்றான்.
அப்படிப் பெற்றவன், வான் வீதியில் உற்றுப் பார்க்கும் பொழுது, இந்த 27 நட்சத்திரங்களும், ஒன்றோடு ஒன்று மோதும் பொழுது, மின்னலாக மாறுகின்றது என்பதைக் காண்கின்றான்.
நம் பிரபஞ்சத்தைக் காட்டிலும், பிற மண்டலங்களிலிருந்து வரும் விஷத்தன்மை நம் பூமிக்குள் வந்தால், மிகவும் தீங்கு செய்கின்றது என்பதனை, இவன் உடலுக்குள் தீங்கினை மாற்றும் சக்தி இருந்ததனால், உணர்வை நுகர்ந்து, கொஞ்சம், கொஞ்சமாக இரத்தத்தில் கலந்தது. மின் கதிர்களை ஜீரணிக்க கூடிய சக்தி, அவனுக்கு இருந்தது. அவைகள் வளர்ச்சி அடைந்தது.
இவ்வாறு, இந்த உயிரைப் போலவே இந்த அணுக்களின் தன்மை, அது கொஞ்சம், கொஞ்சமாக வளர்ச்சியடைகின்றது.
27 நட்சத்திரங்களும், 27 விதமான நிலைகளில் மோதும் பொழுது, மின் கதிர்களை அவன் சுவாசித்து, அவன் வாழ்க்கையில், அதனை அடக்கும் வல்லமை இருந்ததனால்,
சூரியன் தனக்குள் எப்படி பாதரசமாக மாற்றி,
அது வெளிப்படுத்தும் உணர்வுகள்
உலகிற்கே ஒளி தருவது போல்,
அந்த உணர்வின் தன்மை உயிருடன் ஒன்றி
ஒளியின் அறிவாக
அகண்ட அண்டத்தையும் அறியும் உணர்வுகள்
அகஸ்தியனுக்குள் வந்து சேர்கின்றது.
