Pages

4. மோதலில் ஒளிக்கற்றைகளாகி, பல வண்ணங்களாகி, மேகமாகும் நிலை

இந்த மத்தாப்பூ போல விரிவடைந்தது, என்பது, அதாவது, மற்றொன்றோடு, ஒன்றோடொன்று, மின்மினிப் பூச்சி போன்று, ஒவ்வொரு உணர்வுகளும் ஒளிக்கற்றைகளாக மாறிக் கொண்டே வரும். பலவிதமான வண்ணங்கள் ஏற்படும்.


இப்பொழுது எப்படி வெடித்தபின், அதிலிருந்து ஒரு புகை மண்டலம் வெளிப்படுகின்றதோ, அதாவது, நாம் மத்தாப்பூ போடும் பொழுது, பலவிதமான வண்ணங்கள் வெளிப்பட்டு, அதிலிருந்து புகை மண்டலம் தனியாகச் செல்லுவது போன்று, இந்த ஆதிசக்தியில் ஏற்பட்ட இந்த உணர்வுகள், அதில் ஒவ்வொன்றும் மின்கதிர்களாக மாறி, பலவித வண்ணங்கள் மாறிக் கொண்டே இருக்கும்.


மோதலில், ஆவி மண்டலம் அதாவது, மேக மண்டலங்கள் தனித்து, பிரிந்து ஒதுங்கிக் கொண்டே இருக்கும். அதனுடைய அடர்த்திகள் பெருகும். இப்பொழுது, அலை அலையாக மோதி, பிரிந்து செல்வதையும் பார்க்கலாம்.


பல வகையான வண்னங்கள் அந்த அலைகள் மோதுவதில், பலவிதமான வண்ணங்கள் உருவாகும். மோதிய வண்ணங்களிலிருந்து, பலவிதமான வண்ண உணர்வுகள் அலைகளாக மாறும்.


ஒவ்வொரு வண்ணமும், ஒருவிதமாக, ஒன்று மற்றொன்றோடு சேர்க்கப்படும் பொழுது, இளம் மஞ்சள், இளம் பச்சை, இதைப் போல உணர்வுகள் மாறிக் கொண்டே வரும். இந்த உண்மையை நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ள வேண்டும்.





இப்பொழுது மேகக் கூட்டத்தில், பலவித வண்ணங்களைக் காண்கின்றோம் அல்லவா? அதைப் போல, இந்த அணுக்கள் சிதறுண்டு, மற்றோன்றோடு மோதும் பொழுது, அடர்த்தியின் வண்ணங்கள் மாறிக் கொண்டே இருக்கும்.


இப்பொழுது கடலைகள் மோதுவது போல, ஒவ்வொரு அடர்த்தியின் தன்மை ஒன்றைக் கண்டு, ஒன்று அஞ்சி ஓடும் உணர்ச்சிகளை, இப்பொழுது ஆதியில் எப்படி உருவாகியதோ, அதன் உணர்வின் தன்மைகள் ஒன்றுடன் ஒன்று மறைந்து, ஓடும் தன்மையும் பார்க்கலாம்.


எப்படி பட்சிகள் பறந்து ஓடுகின்றனவோ, ஒரு குளவி திரும்பத் திரும்ப, அது சுழற்சியின் தன்மை அடைகின்றதோ, இதைப் போல, மேல் அடர்த்தியின் உணர்வுகள் ஒரு கூட்டமைப்புத் தன்மையாகவும், மற்றொரு கூட்டமைப்பு, மற்ற நிலைகள் பறந்து, ஓடிக் கொண்டே இருப்பதைப் பார்க்கலாம்.


இப்படி, மோதலில் ஒரு அதிர்ச்சியின் தன்மையாகி, ஒரு பெரும் ஒளிகற்றையாகி, அதிலிருந்து உணர்வுகள், மறுபடியும் சிதறுண்டு ஓடுவதைப் பார்க்கலாம். இதைப் பார்க்கலாம் என்றால், நுகர்ந்து உணர்வுக்குள் அறியலாம்.


ஏனென்றால், உயிரான உணர்வுக்குள் அந்த உணர்வின் இயக்கத்தை நீங்கள் அறியும் பொழுது, அகக் கண்ணால் உங்களால் அறிய முடியும். புறக் கண்ணால் பார்ப்பது சிரமம்.


இப்பொழுது, நாம் வாணவேடிக்கை விடும் பொழுது, அந்த உணர்வின் கற்றைகள் மேலே வெடித்தபின், எப்படிப் பரவலாகின்றதோ, இதைப் போல, ஒன்றுடன் ஒன்று மோதியபின், இந்த உணர்வலைகள் ஒளிக்கற்றைகளாகப் பலவிதமான வண்ணங்களிலும், பலவிதமான ரூபங்களிலும், இதுப் பரவிப் படர்வதைக் காணலாம்.




இப்பொழுது, உங்கள் உணர்வுகளில் மணங்கள் வித்தியாசமான மணங்கள் மாறும். மின்னல் தாக்கப்படும் பொழுது, மேக மண்டலத்தில் எப்படி மின்னிக் கொண்டு, பலவிதமான உணர்வுகள் மாறுகின்றதோ, இதைப் போல, பெரும் மாற்றங்கள் ஏற்படும்.
5. மேகம் நீராக மாறுதல்
இவையெல்லாம், சூனிய மண்டலத்தில் மாறுபடும் நிலைகள். இவை ஒன்றுடன் ஒன்று மோதும் பொழுது, மின் அதிர்வுகள் ஒளிக்கற்றைகளாகப் பரவிக் கொண்டிருப்பதைக் காணலாம்.


காணலாம் என்றால், உங்கள் உணர்வின் தன்மை கொண்டு, உங்கள் உடலுக்குள் உணரலாம். உங்கள் புலனறிவிற்குக் காட்சியாகத் தெரியும். இப்பொழுது, அதே போல, அடர்த்திகள் பலவிதமான வண்ணங்கள், அடர்த்தி அடர்த்தியாக, மாறிக் கொண்டே இருப்பதைக் காணலாம்.


இப்பொழுது, ஒன்றோடொன்று மோதும் பொழுது, பல மின் அணு என்ற நிலைகள் அடைந்தாலும், சில வெண்புகை போன்ற உணர்வுகள், படலம் படலமாக மாறும். மாறிக் கொண்டிருப்பதைக் காணலாம்.


இப்பொழுது, பறவைகள், பட்சிக் கூட்டங்கள் பறக்கும் பொழுது, அது ஓடி ஓடி, திரும்பி எப்படி வருகின்றது. இதைப் போல, ஒரு அணுவும் ஒரு அணுவும் மோதும் பொழுது, சுழற்காற்று எப்படி வீசுகின்றதோ, இதைப் போல, சுழல் காட்சி போல, ஒரு சுழலும் தன்மை வருகின்றது. இந்த மின்மேகக் கூட்டத்திற்குள் ஊடுருவுகின்றது. அதெல்லாம் சுருங்கி, நீராக மாறுகின்றது. பார்க்கலாம், உணரலாம்.
6. வெப்பத்தால் திடப் பொருளாகும் நிலை
பலவிதமான வண்ணங்கள் பல நிலைகள் மோதி, அதற்குள் ஒடுங்கி சுழலும் தன்மை அடைகின்றது. நீராக மாறி, நீருக்குள் அமிழ்ந்து விடுகின்றது. இப்பொழுது, எடை கூடுகின்றது. சீராக ஓடும் தன்மை பெறுகின்றது.


ஓடும் வேகத்தில், இளம் மஞ்சளாக, எப்படி நெருப்பு எரியும் பொழுது, மஞ்சளும், சிவப்பும் தெரிகின்றதோ, அதைப் போல, அது ஓடும் வேகத்தில் அந்த நிலைகள் தெரிகின்றது. இளம் மஞ்சளாக இருக்கும் பொழுது, இளம் நீலமாக மாறுகின்றது.




இளம் மஞ்சளும், நீலமும் நீங்கியபின், ஒரு கருமையின் பொருளாக மாறுகின்றது. ஆக, உராயும் தன்மை கொண்டு, சிவப்பு நிலை ஓடுகின்றது. கருப்பின் தன்மை போன்று, அந்த உணர்வின் தன்மைகள் மாறுகின்றது.


ஒரு தீப்பந்தை நாம் சுற்றினால், எப்படியோ அதைப்போல, அந்த உணர்வுகள் மாறும். அந்தப் பொருளுக்குள், ஈர்க்கும் நடு மையம் அடைகின்றது. நடு மையத்தில் வெப்பம் என்ற நிலை உருவாகின்றது.


அந்த வெப்பத்தின் தன்மை, உள் நின்று மற்ற பொருளுடன் கலக்கின்றது, “கடவுள்”. இந்த வெப்பத்தின் தன்மை அதிகரிக்கும் பொழுது, இந்த உணர்வுகள் ஒன்றாகச் சேர்த்து, அது உணர்வின் தன்மை ஒன்றாக மாற்றி, ஒரு புதுவிதமான உருத்தன்மையை, அந்தப் பந்து போல உள்ள உணர்வுகளில் வேக வைக்கின்றது. கருப்பு நிறம் சிவப்பு நிறமாக மாறுகின்றது.