(வடக்கு பொய்கை நல்லூர் பீடம்)
பதினெண் சித்தர்களில் ஒருவராகவும், நாத் என்னும் நவநாதர்களில் (one among 9 Naths) ஒருவராகவும் விளங்குபவர் இறக்கம் நிறைந்த கோரக்க சித்தர் . இவர் சித்தர்கள் வரிசையில் கோரக்கர் என்றும், நாத் முறையில் கோரக்நாத் என்றும் விளங்குபவர். நவநாதர்களில் முதன்மையாக விளங்கிய மச்சேந்த்ரியநாத் ஒரு பெண் மணிக்கு அளித்த சாம்பலிலிருந்து பிறந்தவர் கோரக்கன் என்று வழிவழியாக கிராம கதைகளும் உண்டு. பொதுவாக இந்த கதைகள் எல்லாம் சூட்சமான ஒரு பொருளை வைத்து இருக்கும், தெரிய வேண்டியவர்களுக்கு அதனை புலபடுத்தும்.
மசெந்த்ரியநாத்
என்ற வடமொழி பெயர் பெற்ற மாமுனி அய்யனுக்கு, சித்தர்களில் மச்சமுனி என்ற
பெயரும் உண்டு. கோரக்கர் மற்றைய சித்தர்கள் போல மருந்து, மந்தரம், ஞானம்
பற்றி எழுதிய பாடல்கள் பல உள்ளன. அதில் சில சந்திரரேகை, ரவிமேகலை,
முத்தாரம், மலைவாகடம் , நாமநீச திறவுகோல் ஆகும். சித்தர்கள் பல
இடத்தில் நீண்ட தவம் புரிந்து சமாதி நிலை கொண்டு, மண்ணில் புதையுண்டு மறு
படியும் வேறு இடத்தில் திரிவார்கள். கோரக்க முனிவரும் அது போல கோரக்பூர்,
நாகை, பேரூர், கோர குண்டம் என்று பல இடங்களில் சமாதி நிலை கொண்டு ஜீவ
தளங்கள் அமைத்தவர். சந்திரரேகை என்ற கோரக்க முனி ஏற்றிய நூலில் இருந்து
கீழ் உள்ள இந்த இரண்டு பாடல்களை, இதை அழகாக விளக்கும் பொருள்பட.
Korakkar is one among the 18 siddhas and is also a nath (Goraknath)
among the 9 naths that is popular in north india and nepal. It is said
thro folk stories, that he was born out of ashes given by Machendranath,
the chief of naths. Stories like this should not be taken literally
because most of the time there is a meaning hidden for truth seekers.
Machendranath also known as mamamuni is known as Machamuni in Siddhar
tradition.
Siddhas after reaching a state of samadhi within, get
buried in a place and move again to another places. Thereby creating
various energy sanctums. Korakkar has taken samadhi in Naagai
(Vadakupoigai nallur), Gorakpur, perur, kolli, ..etc, The two songs
taken out of korakkar's Chandiraregai explain this clearly
"புகன்றிடுவேன் போகரவர் பெருமை தன்னை
பூவுலகில் யாவர்களும் பொருந்தி மேவ
அகம்மகிழ போகநாதர் பழனி தன்னில்
அடங்கிடும்முன் பாகத்தன் வரலாறு முற்றும்
இகமரிய செனனசா கரமும் செப்பி
என்னைஅழைத்து உரகை எனும் பதிக்கே கென்றார்
தகைமையுற சித்தரையான் அடக்கம் செய்து
தட்டாமல் உரகையுற்று பார்த்திடேனே
பாத்திருந்த சித்தர்களை பார்க்க வைத்தே
பக்குவமாய் போகரவர் தயங்கி டாமல்
சீர்நிறைஎன் போலவரை எய்து போட்டு
சிதறாமல் உரகையினில் என்னை கண்டார்
போர்விளங்க புதுமையுடன் எனை அழைத்து
பொய்கைநல் லூரஎன்றிட பூங்கா சென்றார்
நேர்மையுடன் என்அடக்கம் நிலைமை காட்டி
நெடியகடல் தாண்டிமறு தேசம் போனார் "
Meaning:
22:
Let me tell the divinity of bogar to the people of world. Before
attaining samadhi in Palani Bogar wrote to his followers/world the
janana saagaram. He called me and asked to go to Uragai (today's
naagai). So I buried the sitthar in palani and listened to his words
23:
While getting buried itself Bogar eluded also disciples around him and
reached uragai. From there he took me to Poigal nallur and asked me to
repeat the same thing. After doing this Bogar left to another country
(China per songs) with korakkar.
These songs clearly explain that Siddhars get buried many times and move to many places after that.
நான் உணர்ந்த சில விசயங்களையும் இங்கு பகிர்கிறேன்.
என்
குருநாதர் முதல் முறையாக மூன்று முறை பூரணி நாளில் சதுரகிரி போய்
வரசொன்னார். அதிசியமாக அடுத்த மூன்று மாத பௌர்ணமியும் வார கடைசியில்,
விடுமுறை அன்று வந்தது. கிளம்பி அங்கு சென்றபோது சில நல்ல தொடர்புகளும் ,
சிந்தனைகளும் வந்தது. அங்கு இருந்த நேரங்களில் துணையாய் இருந்தது
அக்னிலிங்கம் குரூப் : கிருஷ்ணன் சார் தான். அந்த மூன்று பூரணி நாளிலும்
நாங்கள் பொதுவாக பேசியது கோரக்க சித்தரை பற்றி தான். அதன் பின் நான்
சென்னை வந்து விட்டேன். ஒரு நாள் எனக்கு தெரிந்தவரிடம் இருந்து சம்பந்தம்
இல்லாமல் ஒரு திருநீர் பாக்கெட் வந்தது, அதில் வடக்கு பொய்கை நல்லூர்
முகவரி இருந்தது. அன்று அதை பெற்று கொண்டு கல்பாக்கம் சித்தர் சுவாமிகள்
சீடர் ஓங்காரனந்தா சுவாமிகள் உடன் பேசும் வைப்பு கிடைத்தது. அவர் ஞான
பயிற்சியின் அவசியத்தையும், காலம் வீணடிக்காமல் செய்ய வேண்டியவைகளை பற்றி
கூறினார். அதை நிறுத்திவிட்டு திடீரென்று தம்பி " நீ பொய்கைநல்லூர் முன்பு
போய் உள்ளயா இல்லாட்டி இப்போவே செல் " என்றார். எல்லாரும் பொய்கைநல்லூர்
போய்வா என்றது போல் இருந்தது. எட்டுக்குடி போகும் வேலை இருந்ததால்
வடுக்குபொய்கை நல்லூர் என்ற எண்ணம் வந்தது. நாங்களும் சென்றோம்.. போய்
சேரும் நாள் கோரக்கர் குரு பூஜை. எங்களுக்கு பெரும் சந்தோசம். உடன் வந்த
நண்பர் என்னடா இத்தனை மின்விளக்குகள் ஜ்யோதில் பீடத்தை கண்டால் நல்ல
இருக்குமே என்று கூற, சில வினாடிகள் மின் வெட்டு ஏற்பட்டது. ஜ்யோதிடன்
பீடம் பார்க்க சிறப்பாக இருந்தது. புகைபடம் எடுக்க தடை உள்ள பீடத்திலும்
நமது குழுமத்திற்காக அனுமதி வழங்கப்பட்டது. இதை மும்பே கூட எழுதி உள்ளேன்.
அதன் பின் கொள்ளியில் உள்ள அவரது குகைக்கு செல்லும் வாய்ப்பும்
கிடைத்தது. இதை ஏன் கூறிகிறேன் என்றால் நினைத்த போதே இத்துணை கருணை
தரவல்ல சித்தர் கோரக்கர். ஆகையால் இந்த மாதம் பத்தாம் தேதி (10th
Nov-2011),பரணி நட்சத்திரத்திற்கு இந்த சித்த புருஷரை ஒரு முறையாவது நினைவு
கூறுங்கள். அவர்கள் எங்கு சமாதி தளம் அடைந்தாலும் உணர்வால் வழி
நடுத்துபவர்கள். முடிந்தால் ஒரு விளக்கு வையுங்கள் அவருக்காக (உண்மையில்
உங்களுக்காக) நீங்கள் எங்கு இருந்தாலும் சரி. குருமார்களை நோக்கி நீங்கள்
ஒரு அடி வைத்தால் அவர்கள் உங்களை நோக்கி பல அடி எடுத்து வைப்பார்கள்
என்பது திண்ணம்.