Pages

ஐப்பசி பூரணி


குரு நாதன் அழைப்பு போலும், இம்முறை பொய்கைநல்லூர் செல்ல தோன்றியது, பாதி மனதுடன் கிளம்பி சென்றோம் 9/11/11 அன்று, கோரக்க முனி பீடம் தரிசிக்க சென்னையில் இருந்து. கிளம்ப நேரம் ஆனதால் இரவு சிதம்பரம் தான் சென்று அடைந்தோம். அங்கு ஆதி மூல நாதன் இருந்த இடம் சென்று சற்று நேரம் வேண்டி வந்தோம். அன்று இரவு சிவனடியார்கள் உடன் இரவை களிக்கும் சந்தர்ப்பம் கிட்டியது. இரவு பேசும் பொது, அன்று தான் திருமூலர் குரு பூசை என்பதை அறிந்து மகிழ்ந்தோம்.எல்லா வருடம் ஐப்பசி அஸ்வினி நச்சத்திரம் மூலன் பெருமானார் குரு பூசை. அதே மாதம் பரணி அன்று கோரக்கர் குரு பூசை. 

10/11/11 விடியலில் சிதம்பரத்தில் இருந்து கிளம்பி திருவாரூர் அடைந்தோம். அங்கு கமலாலயத்தில் ஒரு குளியல் போட்டுவிட்டு அங்கு கமலமுனியை வேண்டி கொண்டு பொய்கைநல்லூர் சென்றோம். உரகையில் நல்ல கூட்டம். பல்வேறு இடத்தில் இருந்து அன்பர்கள் வந்திருந்து வழிப்பட்டு சென்றனர். அங்கிருந்து நீலாயதாட்சி (நாகை) சென்று புண்டரீக மகரிஷியையும், அழுகுணி சித்தரையும் தரிசித்து கிளம்பினோம் திருவாரூருக்கு. இம்முறை அங்கு மடப்புரம் தகிஷ்ணமூர்த்தி சுவாமிகள் மௌவனமாக ௨௦ ஆண்டுகள் தபசு கொண்ட இடம் தெரிந்தது. உணர்வுவோங்கும் அவ்விடம் சென்றோம் சிறிது நேரம் அமைதியாக அமருவதற்கு.

மாலை அங்கிருந்து மன்னார்குடி சென்றோம் சப்தரிஷி பிருகு முனி சீவம் பொருந்திய தலத்திற்கு. அங்கிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது ஐவர் சமாதி. அங்கு சென்று சூட்டுகோல் இராமலிங்க சுவாமிகளை தரிசித்து திரும்பினோம். இந்த பூரணி ஞானிகள் உணர்வும், அதிர்வும் பொருந்திய இடங்கள் செல்ல ஒரு நற்வாய்ப்பு கிடைத்தது. 



சூட்டுகோல் இராமலிங்க சுவாமிகள்



மடப்புரம் தட்சினா மூர்த்தி சுவாமிகள்