Pages

சுவாமி சிவானந்த பரமஹம்சர்


அப்பா சிவானந்த பரமஹம்சர் குரு பூஜை கார்த்திகை திரு விழா அன்று தான் எல்லா வருடமும். தான் முருகனான தினம் அது என்று உணர்த்திய நாள். இம்முறை 9/12/2011 அன்று கார்த்திகை தீபம். அன்று அவரின் ஜென்ம திரு விழாவாக கொண்டாடபடுகிறது.  

அப்பா நிஷ்டையில்
 அப்பா என்று செல்லமாக அவரிடம் ஆத்மா வித்தை வாங்கிய வாசி யோகிகளால் அன்பாக அழைக்க படுபவர். அப்பாவை பற்றி அதிகம் எழுதுவதில் அவருக்கு உடன் பாடு கிடையாது. தன்னை பற்றி எழுதிய புத்தகத்தை அவர் அழித்து விட்டார். 

நான் என்ன சொல்லுகிறேன் என்பது தான் முக்கியம்,அல்லால் நான் அல்ல ஆகையால் ஒரு சில வரிகள் மட்டும் அவரை பற்றி அறியாதவர்களுக்கு இங்கு கூறுகிறேன் . ஒரு முறை சிவானந்தர், அதி சங்கரர் மடத்தை தாண்டும் பொது அங்கிருந்த மடாதிபதி அவரை கண்டார். மடாதிபதியும், மடத்தில் வசிப்போர் கனவிலும் ஆதி சங்கரர் தோன்றி " எனக்கு பிரியமானவன் இந்த இடத்தை தாண்டி போக போகிறான், அவனிடம் என் கமண்டலத்தை கொடுங்கள்" என்றார்.

ஐந்து ஆஷ்ரமங்களை நிறுவி, தொலைந்த சித்தர்களுடைய வித்தையை மறுபடியும் புனர்பித்தது அப்பா தான். இன்று பலரும் ஆத்ம வித்தையை அறிந்து நிர்விகல்ப சமாதி கொள்ள காரணமாக இருந்தவர்.

அப்பா சமாதி கொண்ட  இடம் பழனியில். அவரை புதைத்த இடம் வடகரை (கேரளா) என்னும் இடத்தில.
சாதி சமயங்களை வள்ளல் பிரான் போல எதிர்த்தவர். அதனால் கேரளாவின் பெரியார் என்பர் சிலர்.

சித்த வேதம் என்னும் நூலை இயற்றியவர் . உரை நடை வழக்கில் உள்ள ஒரே சித்த நூல் இந்த மோட்ச சூத்திரம் தான். அனைத்தும் குரு சிஷ்யன் சம்பாசனையாக கூறப்பட்டுள்ளது.

பல யுகங்கள் முன் இருந்த சித்த ஆஷ்ரம முறைகளை மீண்டும் கொண்டு வந்தவர். சத்தினி என்னும் உணவு முறையை மீண்டும் காண்பித்து கொடுத்தவர். இந்த  தீபத்தின் நாள் அன்று அப்பாவை ஒரு முறை நினைவு  கூறுங்கள், முடிந்தால் சித்த வேதம் பிரதி ஒன்றை பெற்று கொள்ளுங்கள்.  
 ___________________________________________________________________

பிரமஸ்ரீ கணேஷ் அவர்கள்  ..