நவராத்திரியில்
ஒன்பதாவது தினமான நாளை (செவ்வாய்) தேவியானவள் சாமுண்டி மாதா என
அழைக்கப்படுகிறாள். மகிஷனை வதம் செய்யப் போகும் போது அவனை எதிர்த்து
சண்டையிட துர்க்காதேவி தன் அம்சமான சப்த மாதர்களில் ஒருவரான சாமுண்டி
தேவியை அனுப்பினாள். அசுரனின் அமைச்சர்கள் இருவரை சண்ட முண்ட வதம்
செய்ததால் சாமுண்டி என அவள் அழைக்கப்பட்டாள்.
சாமுண்டி தேவியை வழிபடுவது பண்டைய காலம் தொட்டு இருந்து வரும் வழக்கம். நாகை மாவட்டத்தில் பூவனூர் என்ற ஊரில் சாமுண்டிக்கு தனிச்சன்னதி இருக்கிறது. சில சிவாலயங்களில் சப்தமாதர்கள் வரிசையில் சாமுண்டியின் திருவுருவம் இருக்கும். நான்கு கைகளும், மூன்று கண்களும், கோரைப் பற்களும் உக்ரமான திருமுகமும் உடைய நிலையில் இவள் உருவம் இருக்கும்.
புலித்தோலை ஆடையாக அணிந்திருப்பாள். கத்தி, சூலம், கபாலம் ஆகியவற்றை ஏந்தியிருக்கும் இவளுடைய மற்றொரு கை அபய ஹஸ்தமாக இருக்கும். சிறிய மணிகளால் ஆகிய மாலை தாங்கியிருப்பாள். சாமுண்டி தேவியை வழிபடுவதால் ஏவல், பில்லி, சூன்யம், வைப்பு முதலான அனைத்து தோஷங்களும் நீங்கும். பகை, அர்த்தமற்ற அச்சம் விலகும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும்.