தமிழ்நாட்டில்
சிதம்பரத்தில் இருந்து 17 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது
பரங்கிபேட்டை.மரணமற்ற மஹா யோகியாக போற்றபடுபவரான பாபாஜி அவதரித்த இடம் இது
என்று கூறப்படுகிறது .யோகி ராமையா என்பவரால் கட்டப்பட்ட கோயில் இது .
இங்குள்ள குறிப்புகள் பாபாஜி கி பி 203 பிறந்ததாக சொல்கிறது. பாபாஜி
உருவம் பதித்த அபூர்வ சிலைகள் இங்கு உள்ளன.கோயிலின் பின்புறம் தியானம்
செய்ய ஏற்றவாறு தியான அறை அமைக்கபட்டுள்ளது. இங்கு யோகி ராமையவின் சிலை
உள்ளது .(யோகி ராமையா அவர்கள் பாபாஜி அவர்களிடம் நேரடியாக தீகசய் பெற்றவர்)
.மற்றும் சுவற்றில் மிக பெரிய பாபாஜி படம் வரையப்பட்டுள்ளது.
கோயில் வளாகத்தில் தியானம் செய்ய ஏற்றவாறு ஆலமரம் ஒன்று உள்ளது .கருவறை
முன்பு பாபாஜியின் பொற்பாதங்களும் மந்திர யாக்ன பீடம் அமைக்கப்பட்டுள்ளது
.கார்த்திகை மாதம்...